மனிதன் எப்போதும் ஒரே நிலையில் இருப்பதில்லை சூழ்நிலைக்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக்கொள்கிறான்
மகிழ்வித்து மகிழ்
மனிதன் எப்போதும்
ஒரே நிலையில் இருப்பதில்லை
சூழ்நிலைக்கு தகுந்தவாறு
தன்னை மாற்றிக்கொள்கிறான்
நம் வாழ்க்கையில்,
இல்லையென்று,
வாடாவும் கூடாது,
இருக்கிறதென்று,
ஆடவும் கூடாது,
ஏனென்றால்,
இங்கெல்லாம் மாற,
ஒரு நொடி போதும்..
அடுத்தவர் நரகம் நுழைவார் என்பதை நிறுவ பாடுபடுவதைவிட...
நீ சொர்க்கம் நுழைவதற்கான வழிகளைத் தேடி அவற்றில் உன்னை முழுமையாக
ஈடுபடுத்திக் கொள்வது எவ்வளவோ சிறந்தது!
நீ ஏன் என்னை தேடி வந்தாய் ? என்னில் நீ கண்டது தான் என்ன ? என்னை ஏன் நீ இங்கு
வரவழைத்தாய் ? இப்போது பேசுவது போல் நான் எப்போதும் உன்னுடன் பேசிக் கொண்டிருக்க
வேண்டும் என்பதுதான் உனது எதிர்பார்ப்பா ? உன்னை நினைக்க என்னை
ஏன் தூண்டினாய் ? என் வாழ்நாட்கள் முழுவதும் உன்னை நினைத்துக் கொண்டே இருப்பது தான் உன்
விருப்பமா ?
🚩 #_ஒருபகவத்கீதை 🚩
🚩அத்தியாயம்;18 பதம்;54🚩
இவ்வாறு தெய்வீகமாக நிலை பெற்றவன், உடனடியாக
பரப்பிரம்மனை உணர்ந்து இன்பம் நிறைந்தவனாகின்றான். அவன் என்றும் கவலைப்படுவதில்லை.
எதையும் அடைய வேண்டும் என்று விரும்புவதுமில்லை. எல்லா உயிர்வாழிகளிடமும் அவன்
சமநோக்கு கொள்கிறான். அத்தகு நிலையில் அவன் எனது தூய பக்தித்தொண்டை அடைகின்றான்..
பகவான்_ஸ்ரீ_கிருஷ்ணர்🚩🚩
🚩(#முடிவு_துறவின்_பக்குவம் )
என்ன நீ பேசுகிறாய் ? எனக்குத்தான் எதிர்காலம் இல்லை என்று சொல்லிவிட்டாயே பிறகு எப்படி
உனக்கு மட்டும் எதிர்காலம் இருக்கும் ? நானும் நமக்குள்
நடந்த கடந்த காலங்களை நினைத்துக் கொண்டுதான் சந்தோஷமாகவே வாழ்கிறேன் 💯
தீமை எல்லாம் ஒன்று கூடி நன்மையை எதிர்ப்பது தான் அழிந்து விடுவோம்
என்ற பயத்தில் தான், ஆனால் இது புரியாமல் பலரும் நன்மையை விரும்புவோர் கூட தீமையாகி போவது
தான் நன்மைக்கான நெடுங்கால சோதனையாக இன்று வரையில் இருந்து வருகிறது.
ஆணவம் எரிவதை ரசித்து பார் மெய் ஞானம் என்றால் என்னவென்று, அப்போது தான்
புரியும்.
வாழ்க்கை
அடுத்த நொடியில்
ஆயிரம்
ஆச்சரியங்களை
ஒளித்து வைத்திருக்கிறது
சிலவற்றை
சந்தோஷங்களாக
சிலவற்றை
சங்கடங்களாக
இங்கு எதிலும் சங்கடமும் நிரந்திரம் இல்லை சந்தோஷங்களும் நிரந்திரம்
இல்லை
வாழ்க்கை
வாழ்வதற்கே தவிர
கிடைக்காததை
நினைத்து
வருந்துவதற்கு அல்ல
காலம்
ஒவ்வொரு
துன்பத்திற்குப்
பின்பும்
ஏதோ
ஒரு மகிழ்ச்சியினை
ஒளித்து வைத்திருக்கும்
எல்லாம் வல்ல ஈசனின் அருள் ஆசி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு நாளை உங்களுக்காக ஒரு புதிய விடியல் காத்திருக்கிறது
நாம் அனைவருமே 'ஆதல்' என்றதொரு பாதையில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதாவது உள்ளது
ஒன்று ; விரும்புவது ஒன்று ;
முன்னேற்றம் என்ற பெயரில் வேண்டியதை அடைய நம்மால் முடியும். ஆனால்
எப்போதும் போராட்டக் களத்தில் தான் இருப்போம். ஒருபோதும் அமைதி அடைய முடியாது.
அதன் காரணமாக போலி வேஷமிட்டு நடிக்கிறோம், நேர்மையற்றவராக
இருக்கிறோம்.
ஆனால் ஒரு 'நல்ல மனம்' அப்படி இருப்பதில்லை.
ஒரு நல்ல மனம், விஷய அறிவுகள்/ பாசாங்குகள், விதிமுறைகள், சடங்குகள், தேர்வுகள், சமூக ஒழுங்குகள், உள்ளிட்டவையால்
ஆனதல்ல. அது சுதந்திரமானது. அது காலத்திற்கு உட்பட்டதல்ல என்பதால் அது சமகாலத்திய
மனமன்று;
ஒரு நல்ல மனம் காலத்தைப் பற்றியோ சுற்றுச்சூழல் பற்றியோ அக்கறை
கொள்வதில்லை. அவற்றை எதிர்கொள்ளும்; ஆனால் அவற்றோடு
எவ்விதத் தொடர்பும் அதற்கு இல்லை. முற்றிலும் சுதந்திரமானது. அத்தகைய மனதில்
பயமில்லை. அது உண்மையை நேரடியாக எதிர்கொள்கிறது.
நீங்கள் வன்முறையாளராக முரடராக கர்வம் உடையவராக இருப்பதை 'அது' நேரடியாக காண்கிறது
எந்த விளக்கமுமின்றி.
ஆகவே உங்கள் 'அகப்பார்வையால்' உங்களைப் பாருங்கள்.அதிலிருந்து தப்பியோட முயற்சிக்காதீர்கள்.
உள்ளதாய் இருக்கும் அந்த 'நேரடியை' கண்டுணர்தலே உடனடி
செயல்பாட்டிற்கான கோரிக்கையை விடுகிறது.
அதுதான் "நுண்ணறிவு."
அபாயகரமானது என்று கண்டு உணர்ந்ததுமே, அந்த கண்டு உணர்தலே
உடனடியாக செயல்பட வேண்டும் என்று ஆணை இடுகிறது;
ஆரோக்கியமான, தெளிவான, பகுத்தறியும் ஆற்றல் கொண்ட, துணிச்சல் உத்வேகம்
கொண்ட மனதைப் பெற்று இருப்பதற்கு பெரும் ஆபத்தாக இருப்பது 'உங்களின் அந்த ஒன்று
என்ற நேரடியை 'கண்டு உணர்ந்ததும்' உடனடியாக செயல்பட அந்த அகப்பார்வையே ஆணை இடுகிறது; முடிவில் அதுவே
உங்கள் வன்முறை முரட்டுத்தனம் கோபம் பொறாமை ஆகியவற்றின் முடிவாகவும் ஆகிறது.
அவ்வாறு செயல்பட்ட பின்னரே நாம் ஆக்கப்பூர்வமாக முன்னேற இயலும்.
தொடர்ந்து, முன் எப்போதும் அனுபவித்திராத கண்டிராத காலத்திற்குட்படாத அமைதியை காண
வாய்ப்பு இருக்கிறது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
மனம் : மகிழ்வித்து மகிழ் வாழ்க்கை - குறிப்புகள் [ ] | The mind : Enjoy and enjoy life - Tips in Tamil [ ]