ஞானோதயம்

ஆன்மீகப் புரட்சி, ஓம் சாந்தி

[ ஞானம் ]

Enlightenment - A spiritual revolution, Om Shanti in Tamil

ஞானோதயம் | Enlightenment

உலகம் ஒன்றன் பின் ஒன்றாக நெருக்கடியில் மிக ஆழமாக மூழ்கிக் கொண்டிருந்த போதிலும் எப்பொழுதும் அதிகரித்துக் கொண்டேயிருக்கும் மக்கள் உண்மையும், உயர்ந்த பண்புகளும் கொண்ட மனித இதயங்கள் மறுபடியும் பிறப்பதைக் காண்கிறார்கள்.

ஞானோதயம்

ஆன்மீகப் புரட்சி:

உலகம் ஒன்றன் பின் ஒன்றாக நெருக்கடியில் மிக ஆழமாக மூழ்கிக் கொண்டிருந்த போதிலும் எப்பொழுதும் அதிகரித்துக் கொண்டேயிருக்கும் மக்கள் உண்மையும், உயர்ந்த பண்புகளும் கொண்ட மனித இதயங்கள் மறுபடியும் பிறப்பதைக் காண்கிறார்கள். ஒருபுறத்தில் மாற்றம், விடுதலை. சுதந்திரம் மற்றும் சமத்துவம் இவைகளுக்கான கூச்சல், மற்றொரு புறத்தில் தேவையான மாற்றமென்பது வெறும் பொருளாதாரம் அல்லது அரசியல் பற்றிய மாற்றமல்ல. ஆனால் நமது இயல்புகள், மனப்பான்மை, நோக்கம் சம்மந்தப்பட்ட ஒன்றாகும். மனிதப் பண்புகள் முழுமையாக சீர்குலைந்திருப்பதையும் பேரழிவை நோக்கி மூடத்தனமாக விரைவதையும் பார்க்கும்பொழுது பெரும்பாலானோர் கைவிடப்பட்ட உணர்வுகளுடன் தங்களின் இயலாமைக்குள் ஒடுங்கி விட்டார்கள். கடவுள் கூட நம்மைக் கை விட்டு விட்டாரோ என்று கதறுகிறார்கள். இருப்பினும் மரணத்தின் செய்தி எப்பொழுதும் புதிய ஆரம்பங்களுக்கு அறிகுறியாகிறது.

 

இந்தப் கட்டுரை ஆன்மாவைத் தூண்டச் செய்யும் கதையாகும். மேலும் ஞானக்கண்ணைத் திறந்து கொள்வதின் மூலம் பீனிக்ஸ் பறவையைப் போல குப்பைகளின் சாம்பலிலிருந்தும், இந்தப் பழைய உலகின் ஊழல்களிலிருந்தும், மீண்டும் உயிர்த்தெழுந்து ஒளிமயமான எதிர்காலத்தை ஒருவர் காணலாம். யாரொருவர் தன்னுடைய பலவீனம் என்ற சத்கதியிலிருந்து வெளிவந்து, உன்னத உலக ஒழுங்கிற்கான நியாயமான பங்கைத் தனது துரித சுயமாற்றத்தின் மூலம் ஆற்ற வேண்டும் என்றும் நினைக்கிறாரோ அத்தகையோருக்கு இது ஒரு படிப்படியான வழிகாட்டியாகும். இந்தப் புத்தகம் ஆதி மற்றும் பழைமை வாய்ந்த யோக முறையான இராஜ யோகத்தைப் பற்றியதாகும். உடல் மற்றும் மூச்சுப் பயிற்சி என்பதே யோகம் என்பதுதான் பொதுவான கருத்தாகும். ஆனால் இதன் ஆழமான விளக்கம் தனிப்பட்ட ஆத்மாவுக்கும், பரம்பொருள் அல்லது கடவுளுக்கும் இடையே ஏற்படும் மன இணைப்பு அல்லது மனத்தொடர்பாகும்

இராஜா என்றால் அரசர் ஆகையால் இராஜயோகம் என்பதைப் பல்வேறு வழிகளில் புரிந்து கொள்ளலாம். யோகங்களின் அரசன் அல்லது இராஜ குணமுடையோனாக்கும் யோகம்.

 

இந்த யோகத்தின் மூலமாக, ஆத்மா தனது மனம், புத்தி மற்றும் பண்புகளில் உன்னதமாக மாறுகிறது. இதன் காரணமாக ஐம்புலன்களை வென்று எந்தச் சூழ்நிலையிலும் முழுமையான கட்டுப்பாட்டுடன் இருக்கிறது.

 

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இராஜ யோகம் கற்பிக்கப்பட்டது. ஆனால் காலப் போக்கில், ஆத்மாவை பரமாத்மாவுடன் இணைக்கும் முதன்மையான ஆத்மீக முறைகளும் கொள்கைகளும் பிற பழக்கங்களால் மறைந்து விட்டன. மேலும் மனிதனின் முழுமை நிலையை அடையும் நோக்கமும் எதிர்ப்பைச் சமாளித்து நிலைத்திருக்க முடியாமல் ஒதுக்கப்பட்டு விட்டது. எவ்வாறாயினும் அண்மையில், எவ்வாறு பரமாத்மாவுடன் நினைவுகளின் (தியானம்) மூலம் தொடர்பு கொள்வது என்பது பற்றிய முறைகள் மீண்டும் இறைவனின் மூலம் வெளிவந்துள்ளன. முழுமையான சுயமாற்றத்திற்கான ஆத்மீக முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் இத்தொடர்பானது சுலபமானதாகவும், இயல்பானதாகவும் அமைகிறது. தியானத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள அறிமுகத் தொடர்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளன. நாம் யார்? நாம் எங்கிருந்து வந்தோம்? நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? கடவுள் யார்? அவருடைய செயல் என்ன? மற்றும் நாம் இதன் மூலம் எவ்வாறு கடவுளுடன் உறவுகளை மேம்படுத்திக் கொள்வது? அமைதி, அன்பு ஞானம் மற்றும் பேரானந்தம் இவைகளை அனுபவிக்கச் செய்து எவ்வாறு ஆத்மாவை உடலுக்கு அதிகாரியாக்குவது? போன்ற வினாக்களுக்கும் விடைகள் அளிக்கப் பட்டுள்ளன. இக்கருத்துக்கள் யாவும் நம்முடைய தன்னம்பிக்கையின் நிலையை நாமே உறுதியாக நிலைப்படுத்திக் கொள்ள உதவுகின்றன. இவை நமது சொந்த வாழ்க்கையில் முழுவதும் புதிய மற்றும் அற்புதமான சுயமாற்றங்களை ஏற்படுத்துவதோடல்லாமல், புதிய உலகத்தை உருவாக்குவதில் ஏற்படும் சவால்களை எதிர்நோக்குவதில் மற்றவர்களையும் ஊக்குவிக்க நம்மைத் தூண்டுகின்றன.

 

பாரத தேசத்தில் பிரம்மா குமாரிகள் உலக ஆன்மீகப் பல்கலைக் கழகம், 1937 - ஆம் ஆண்டில் இராஜ யோகத்தைக் கற்பிப்பதற்காகவும், பயிற்சி செய்வதற்காகவும் அனைத்து மனிதர்களுக்கும், நிறம், இனம், வயது, சமயம் மற்றும் சாதி வேறுபாடுகளைக் கருதாமல் இந்த இராஜயோகத்தை அளிப்பதற்காகவும் நிறுவப்பட்டது. உலகின் முக்கிய மதங்களைப் பற்றித் தனிப்பட்ட முறையில் ஆராய்ச்சி செய்யும் நோக்கத்தோடு நான் இலண்டனுக்குச் சென்றிருந்த போது 1975-ல் இவ்வியக்கத்தோடு முதன் முறையாகத் தொடர்பு கொண்டேன்,

 

அப்பயணத்தின் போது அநேக நாடுகளில் நான் பெற்ற மிகப்பல அனுபவங்கள், மனித மனத்தின் தடுமாற்றம் கலாச்சாரங் களுக்கு அப்பாற்பட்டது என்ற முடிவுக்கு என்னைக் கொண்டு வந்தது. பேராசை, ஆணவம், ஏமாற்றுதல், கோபம் மற்றும் வன் முறை இவைகளுக்கெல்லாம் நாடு, இனம், ஆண், பெண், ஏழை, பணக்காரன், முதியோர், இளையோர் போன்ற வேற்றுமைகளே கிடையாது. நாம் வாழும் தளங்கள் வெவ்வேறாக இருப்பினும் நாம் அனைவரும் ஒரே படகில் பயணம் செய்துக் கொண்டிருக் கிறோம். மேலும் நாம் முதல் வகுப்புத் தளத்தில் குளிர்ச்சியாக பயணம் செய்துக் கொண்டிருந்தாலும் சரி, அல்லது இயந்திரம் இருக்கும் அறையில் வியர்த்துக் கொட்டிக் கொண்டிருந்தாலும் சரி, மனிதனின் படகு செல்லும் மார்க்கம் ஒன்றுதான். அந்தச் சமயத்தில் சுக்கான் இல்லாத படகில், இலட்சியமில்லாமல் சென்று கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது. என்னுடைய சொந்த மனக்குழப்பங்களுக்கிடையில், இந்த மனித முகமூடிகளுக்குப் பின்னால் மனித ஒருமைப்பாடுகளுக்கான கொள்கைகள் இருந்தன என்பதை நான் உறுதியாகத் தெரிந்து கொண்டேன். ஆனால் உலகைச் சூழ்ந்திருக்கும் விகாரங்கள் மற்றும் அவற்றைக் கையாள்வதில் எனக்கிருந்த இயலாமை. இவைகளைப் பார்க்கும் போது, ஆத்மாவில் சுய மரியாதை பிறப்பதென்பது கற்பனைக்கு எட்டாத ஒன்றாகவே தோன்றியது. இந்த நினைவுகளுடன் நான் ஆன்மீகப் பல்கலைக் கழகத்தின் இலண்டன் கிளையில் நுழைந்தேன்,

 

அங்கே நான் நேர்மறையான எண்ணங்கள் மற்றும் தன்னம்பிக்கை இவைகளைப் பெற்றேன். அங்கே முழுவதும் எளிமையானதாக இருந்தாலோ அல்லது வழிபாட்டுச் சடங்கு முறைகள் இல்லாமலிருந்ததாலோ அல்லது சகோதரிகள் வாழ்த்துத் தெரிவிக்கும் போதும், இராஜயோகத்தைப் பற்றி விளக்கும் போதும் அவர்களிடமிருந்து ஒளிரும் தூய்மையினாலோ அல்லது தெளிவான மற்றும் அறிவுப்பூர்வமான நிபந்தனைகளைப் பயன்படுத்தியதாலோ, உடனேயே ஏதோ வேறுபட்ட ஒன்று அங்கிருந்ததை நான் உணர்ந்து கொண்டேன். அப்போது முதல், நான் அடைய வேண்டிய வீட்டை அடைந்து விட்டேன் என்று உணர்ந்தேன். நாள்தோறும் கற்பிக்கப்படும் அறிவுரைகளை சில மாதங்கள் கேட்ட பிறகு நயமான யோக வாழ்க்கையில் நுழைந்து கொண்டிருந்தேன். பல வருங்டங்களாகத் தொடர்ந்து எனக்குள் இருந்த அறியாமை விலகிப் போய் விட்டது. மேலும் சுருக்கமான கருத்தாழமிக்க விளக்கங்களின் மூலம் நான் அறிந்து கொள்ள விரும்பியதை விட அதிகமாகவே அறிந்து கொண்டதை உணர்ந்தேன். பிறக்கும் போது ஓட்டை உடைத்துக் கொண்டு வெளிவரும் பறவையைப் போல அந்த அனுபவம் இருந்தது. அந்தப் பறவை பிறக்கும் வரையில் அந்த ஓடுதான் அதன் உலகம் என்று நினைத்துக் கொள்ளும். பிறகு அது ஓட்டை உடைத்துக் கொண்டு வெளியில் வந்து பரந்த உலகத்தைக் காணும். இந்த ஞானத்தைக் கேட்கும் பொழுது, இந்த உலகத்தைப் பற்றிய தோற்றம் உடைந்து கண்கள் திறந்ததன் மூலம் எல்லாவற்றையும் ஆட்சி புரியக் கூடிய வியப்பான அழியாத சட்டங்கள் தெரிந்தன. ஓட்டுக்குள் இருந்த உலகம் உண்மையானதாக இருக்கவில்லை. மேலும் அதற்கு வரையறை இருந்தது. அது எல்லைக்குட்பட்டிருந்தது. எனக்குள்ளே மிகப்பெரிய கட்டுப்பாட்டை அனுபவம் செய்தேன். மேலும் அது மற்றவர்களிடையே பிரதிபலிப்பதையும், பல சூழ்நிலைகளில் என்னிடமே இருப்பதையும் நான் உணர்ந்தேன். இந்த ஆரம்ப அத்தாட்சிகள், மிக உயர்ந்த இலட்சியமான முழுமையான ஊக்கத்தை அளித்தன. இதே ஞானத்திலிருந்து பல ஆத்மாக்கள் நிறைய நன்மைகளைப் பெற்றுள்ளனர். அவைகள் இந்தப் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆன்மீகப் பல்கலைக் கழகத்தால் கொடுக்கப்பட்ட அறிமுகப் பயிற்சியின் விசயங்களை உள்ளடக்கியிருந்தாலும், தியானத்திற்குத் தொடர்புடைய அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டுள்ளன. அதே சமயத்தில் எளிமையான மற்றும் சுருக்கமான மொழியில் உள்ளது. மேலும் தத்துவ விளக்கங்களிலிருந்து விலகி யிருக்கிறது.

 

ஓம் சாந்தி

ஓம் சாந்தி என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தை. இதன் பொருள் நான் அமைதியான ஸ்திதியில் இருக்கும் ஓர் ஆத்மா என்பதாகும். அனைவரும் தேடிக் கொண்டிருக்கும் அமைதியானது இந்த வார்த்தையின் மூலம் நம்மை விழிப்புணர்வுக்குக் கொண்டு வருகிறது. நமக்கு உயிரூட்டும் நிலைகள் ஆத்மாவைச் சார்ந்ததே யன்றி உடலை அல்ல என்பதை இவ்வார்த்தையானது நினைவூட்டுகின்றது.

 

நன்றி நவிழ்தல்

அன்பிற்குரிய பாப்தாதா தாதிஜி, தீதிஜி, தாதி ஜானகிஜி மற்றும் அன்பான மூத்த சகோதரிகள், சகோதரர்களின் வகுப்புகள், கட்டுரைகள் மேலும் இந்தப் புத்தகத்தின் மூலக் கருத்துக் குறிப்புகளைக் கொடுத்த அனைவருக்கும் கோடானு கோடி நன்றி.

 

இராஜயோகத்தில் கடவுள், பரமாத்மா அவர் என்று ஆண்பாலில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், கடவுள் என்பவர் ஆணுமல்ல, பெண்ணுமல்ல. ஆனால் அவர் ஓர் ஆத்மா. உடல் இல்லாத ஓர் அமைப்பு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கடவுளுடன் நெருங்கி உன்ய உறவை வளர்த்துக் கொள்வதற்கு உதவியாகத் தனிப்பட்ட பெயர்ச்சொல் பயன்படுத்தப்படுகிறது. இராஜயோகத்தில் தனிப்பட்ட ஒருவரான கடவுளுடன் தாயாகவும், தந்தையாகவும் உண்மையான உறவுகள் அனைத்தும் அனுபவம் செய்யப்படுகின்றன.


ஆன்மீக பணியில்!

தமிழர் நலம்

நன்றி...🙏

ஞானம் : ஞானோதயம் - ஆன்மீகப் புரட்சி, ஓம் சாந்தி [ ஞானம் ] | Wisdom : Enlightenment - A spiritual revolution, Om Shanti in Tamil [ Wisdom ]