அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்வது என்றால் எப்படி?.அதற்கு கோனார் நோட்ஸ் ஏதும் இருக்கா, யாராவது டியூஷன் எடுப்பாங்களா என்றெல்லாம் கேட்கப்படாது. நீங்களே தான் கற்றுக் கொள்ள வேண்டும்.
அனுபவமே ஆசான்.
அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்வது
என்றால் எப்படி?.அதற்கு கோனார் நோட்ஸ் ஏதும் இருக்கா, யாராவது டியூஷன் எடுப்பாங்களா
என்றெல்லாம் கேட்கப்படாது.
நீங்களே தான் கற்றுக் கொள்ள
வேண்டும்.யாரும் கற்றுத் தர முடியாது.அது எப்படி யாரும் சொல்லித் தராம கத்துக்க
முடியும்னு கேட்கிறீங்களா.....
நீங்க சின்ன வயசுல எப்படி நடந்தீங்க ,எப்படி பேசுனீங்க என்று நெனச்சு பாருங்க.
நீங்களாகவே நடந்து நீங்களாகவே தான் பேசினீர்கள்.
அப்படித் தான்.... அப்படித் தான் என்று
மற்றவர்கள் உங்களை உற்சாகப்படுத்தினார்கள். அவ்வளவு தான்.
நீங்கள் முதல் முதலில் நடக்கும் போதும்
,பேசும் போதும் உங்கள் உறவுகள்
ஆச்சர்யத்தில் எவ்வளவு சந்தோசப்பட்டார்கள் தெரியுமா!......
இப்போதும் குழந்தைகள் புதிதாய் ஒன்றை
கற்றுக் கொள்ளும் போது நாம் மகிழ்ந்து தான் போகிறோம்.
எதையும் கற்றுக் கொள்ளும் திறன்
நம்முள் நன்றாகவே இருக்கிறது. கற்றுக் கொள்ளவும் அதை பயன்படுத்தவும் நமக்கு நன்கு
தெரியும்.
ஆனா ஏன் நாம் கற்றுக் கொள்வதில்லை!.
ஹீம்....எனக்குத் தெரியாதா ... என்ற ஆணவம், அலட்சியம்......
என்னால் எதுவும் முடியும் என்கிற
மிதப்பு..... உண்மையில் நம்மால் எதுவும் செய்ய முடியும். ஆனா செய்ய மாட்டோம்.
அப்படி பண்ணலாம், இப்படி
செய்யலாம் என்று மனதிலே ஆயிரம் யோசனைகள். ஆனால் செயல் செய்வதில்லை.
செயல் செய்யாமல் எப்படி நடக்கும். எதையும்
எதிர் கொள்வது என்றால் அதற்கான சரியான செயலை செய்ய வேண்டும்.
செய்யத் தெரிந்திருந்தால் மட்டும்
போதாது. செயல் பட வேண்டும். அதுவும் விடாது செயல் பட வேண்டும்.
ஒரு குழந்தை நடை பயில்வதற்குள்
ஏழாயிரம் தோல்விகளை சந்திக்கிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.
நீங்களும் நானும் அப்படி பல ஆயிரம்
தரம் விழுந்து எழுந்து தான் நடை பயிலவே கற்றுக் கொண்டோம்.
ஆனால் இன்று நாலு தரம் தோல்வியுற்றால்
அதோடு அதை கைகழுவி விடுகிறோம்.
மீண்டும் மீண்டும் தோல்விதான் நமக்கு நுட்பத்தை கற்றுத் தரும். தோல்வி களில் இருந்து கற்றுத் தேறி மீண்டும் தோற்று
மீண்டும் கற்றுக் கொண்டு மீண்டும் தோற்று என்று பலமுறை பயின்றால் தான் பாடங்கள்
நன்கு பதியும்.
ஒரு அ ,ஆ ன்னாவை நாம எத்தனை தடவை எழுதி இருப்போம். எத்தனை முறை தோல்வி.
ஆனாலும் பழக பழக மனதில் பதிந்து விடும்.
ஓரொரு முறை செயல் செய்யும் போதும்
நமக்கு ஒரு அனுபவம் கிடைக் கிறது. வெற்றி பெற்றால் எப்படி கையாள்வது என்பது நமக்கு
தெரிந்து விட்டது என்று ஏற்றுக் கொள்வோம்.
மீண்டும் அதே போன்ற ஒரு செயல்
செய்கையில் இந்த அனுபவத்தை பயன்படுத்தலாம்.
தோல்வி கிடைத்தால் எப்படி அணுகக்
கூடாது என்கிற அனுபவம் கிடைக்கும். இதுவும் அடுத்த முறை எதிர் கொள்ளும் போது கை
கொடுக்கும்.
அனுபவம் என்கிற ஆசான் நமக்கு கற்றுத்
தருவது அநேகம். கற்று தேறுவது நமது கடமை.
ஒருவரிடமிருந்து இக்கட்டான
சந்தர்ப்பத்தில் பெற்ற உதவிக்கு உடனடியாக நன்றி சொல்லும் பழக்கமும்...
தெரிந்தோ, தன்னை அறியாமலோ பிறருக்கு செய்து
விட்டத் தவறுக்கு
பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும்
மனப்பக்குவமும் கொண்ட மனிதர்கள்...
கற்றறிந்த மனிதர்களின் உள்ளத்தில்
உயர்ந்து நிற்பர்.!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
தன்னம்பிக்கை : அனுபவமே ஆசான் - மாற்றத்திற்கான செயல்கள் [ ] | self confidence : Experience is the teacher - Actions for change in Tamil [ ]