'குபேரன்' என்பதற்கு செல்வத்தை பெருக்கக் கூடியவன் எனப் பொருள். உப்பு + ஏரன் - குபேரன்.
'குபேரன்' சொல் விளக்கம் 'குபேரன்' என்பதற்கு செல்வத்தை பெருக்கக் கூடியவன் எனப் பொருள். உப்பு + ஏரன் - குபேரன். 'உப்பு' என்றால் பெருக்கக்கூடியவன். 'ஏரன்' என்றால் செல்வன். எனவேதான் சம்பளம் முதலில் வாங்கும்போதும், வீடு கட்டப் போகும் போதும் முதலில் உப்பு வாங்குவது பழக்கத்தில் உள்ளது. குபேரன் தன தானியத்திற்கு அதிபதி. ஆதலால் ஒவ்வொரு வீட்டிலும் குபேரர் வழிபாடு மிகவும் முக்கியம். குபேரர் பூஜை செய்தால் வளமான தேடி வரும். அந்த பூஜையை குபேரனுக்கு மட்டும் செய்தால் பயனற்றது. பணம், பூரண செல்வாக்குடன் லட்சுமி குபேரர் பூஜைதான் செய்ய வேண்டும். குபேரன் பணத்திற்கும் தானியத்திற்கும் காப்பாளன். பணத்தையும் தானியத்தையும் கொடுப்பதும் ஏற்படுத்துவதும் லெட்சுமியே தான். குபேரன் குடும்ப சகிதமாய் காட்சியளிப்பவர். குதிரை அவரது வாகனம். இவரது இடம் குபேரப்பட்டினம் (அழகாபுரி). இவர் தாமரை மலர் மீது மீனாசனம் அமைத்து அதன்மீது மெத்தை விரித்து அமர்ந்திருப்பார். ஒரு கையில் அபய முத்திரையும் இடது கையில் வலம்புரி சங்கும் உள்ளது. அவருடைய வலது புறத்தில் சங்கநிதி தேவதையும் இடது புறத்தில் பதுமநிதி தேவதையும் வைர முத்திரை வலம்புரி சங்குடன் காட்சி அளிக்கிறார்கள். முதலில் இலங்கைக்கு அதிபதியாக இருந்தவர் குபேரனே. இவரிடமிருந்து ராவணன் இலங்கையைக் கைப்பற்றி விட்டான். இலங்கை இன்றளவும் அல்லல் படுவதற்குக் காரணம் ராவணன் குபேரனை வெளியேற்றியதே காரணம் என்று ஆன்மீக பெரியோர்கள் கூறுவதுண்டு. திருமலை திருப்பதியில் காட்சி தரும் சீனிவாசப் பெருமானின் திருமண வைபவத்திற்கு பொருள் கொடுத்து உதவியவர் குபேரன். நாம் திருப்பதியில் உண்டியலில் செலுத்தும் பணம், நகை அனைத்தும் ஏழுமலையான் குபேரனுக்கு வட்டி கட்டுவதாக ஐதீகம். லெட்சுமி குபேரன் இருவருமே தன் தேவதைகளாக சொல்லப்பட்டாலும் ரிக் வேதம் குபேரனை மட்டுமே தன தேவதையாகச் சொல்கிறது. ஆண்டவன் அருள் பாலிக்கும் ஆலயமானாலும் அங்கும் குபேர அம்சம் இருந்தால்தான் ஆலயம் செழிக்கும். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: குபேரன் : 'குபேரன்' சொல் விளக்கம் - குபேரன் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual notes: Kuberan : Explanation of the word 'Kuberan' - Kuberan - Spiritual notes in Tamil [ spirituality ]