நம்பிக்கையே வாழ்க்கை

மனதிருப்தியும் தாராள குணமும், மனிதனின் கணக்கு..

[ வாழ்க்கை பயணம் ]

Faith is life - Contentment and generosity, the account of man.. in Tamil

நம்பிக்கையே வாழ்க்கை | Faith is life

பிரேஸில் நாட்டில் மக்களுக்கு ‘யார் அதிக நேரம் கைகளைத் தட்டிக் கொண்டு இருக்கிறார்களோ அவர்களுக்கு பரிசு வழங்கப்படும்’ என்று ஒரு போட்டி அறிவிக்கப்பட்டது. அந்தப் போட்டியில் அனைவரும் கலந்து கொண்டனர்.

நம்பிக்கையே வாழ்க்கை

🌷

 

பிரேஸில் நாட்டில் மக்களுக்கு ‘யார் அதிக நேரம் கைகளைத் தட்டிக் கொண்டு இருக்கிறார்களோ அவர்களுக்கு பரிசு வழங்கப்படும்’ என்று ஒரு போட்டி அறிவிக்கப்பட்டது. அந்தப் போட்டியில் அனைவரும் கலந்து கொண்டனர்.

 

ஓர் இருட்டு அறையில் எல்லோரும் கைகளை தட்டிக் கொண்டிருந்தார்கள். அங்கு ஒரு ஒளி விளக்கு சுழன்று கொண்டே இருந்தது.

🌷

அந்த போட்டியில் தொடர்ந்து ஐந்து மணி நேரமாக இருவர் கைகளை தட்டிக் கொண்டிருந்தனர். அவர்களின் பக்கம் அந்த ஒளி விளக்கு சுழன்று நின்றது. அனைவரும் அந்த இருவரை ஆச்சர்யமாகப் பார்த்தனர்.

 

ஒருவருக்கு வலக்கை இல்லை!

 

மற்றொருவருக்கு இடக்கை இல்லை!

 

ஆனால் அந்த இருவருக்கும் “நம்பிக்கை” என்ற ஒரு ஆயுதம் மட்டுமே இருந்தது.

நம்பிக்கையுடன் ஒருவருக்கு ஒருவர் உபகாரமாக இருந்து போட்டியில் வெற்றி பெற்றார்கள்.

🌷

இப்படிப்பட்ட நம்பிக்கை உள்ள மனிதர்களை நாம் முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு வாழ்வில் முன்னேறலாம்.

 

‘நம்பிக்கையே வாழ்க்கை‘ என்பது பழமொழி. நாம் செய்யும் செயலிலும் எண்ணத்திலும் நம்பிக்கை திடமாக இருக்க வேண்டும். அப்போது மட்டுமே அந்த செயலும் எண்ணமும் வெற்றி பெறும்.

🌷

இந்த பரந்து விரிந்த மகரயாழ் உலகில் பலவிதமான மனிதர்கள் வாழ்கின்றனர். இவர்களுக்கு நம்பிக்கை என்பது அதிகமாகவும் இல்லை; குறைவாகவும் இல்லை; மிதமாக இருக்கிறது.

 

இந்த உலகத்தில் நம்பிக்கையை நிலைநாட்டிச் சென்றவர்கள் சிலர். அவர்களை வாழ்க்கையில் முன் உதாரணமாகக் கொண்டு முன்னேரியவர்கள் பலர்.

 

மனதிருப்தியும் தாராள குணமும்:

 

இந்த உலகத்தில் நாம் எதையும் கொண்டுவரவில்லை, இங்கிருந்து எதையும் கொண்டுபோகவும் முடியாது. அதனால், நமக்கு உணவும் உடையும் இருந்தால் அதுவே போதும் என்று திருப்தியோடு வாழ வேண்டும்.

 

மனத்திருப்தியுடன் இருப்பவர்கள் குறைசொல்ல மாட்டார்கள், முனுமுனுக்க மாட்டார்கள், வயிற்றெரிச்சல்பட மாட்டார்கள். ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ என்று பகட்டாக வாழ மாட்டார்கள்; அதனால், தேவையில்லாத மனக் கவலைக்கும் மன அழுத்தத்திற்கும் அவர்கள் ஆளாவதில்லை.

 

தாராள குணமுள்ளவர்கள் சந்தோஷமானவர்கள்.  ஏனெனில் "வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது” என்ற உண்மையை உணர்ந்தவர்கள்.

மற்றவர்களைச் சந்தோஷப்படுத்திப் பார்ப்பதில் அவர்களுக்குச் சந்தோஷம் கிடைக்கிறது; மற்றவர்களுடைய சந்தோஷத்துக்காக, கொஞ்சம் நேரத்தையும் சக்தியையும் மட்டும்தான் கொடுக்க முடியும் என்றால்கூட அதைத் தாராளமாகக் கொடுக்கிறார்கள். இதற்காக அவர்களுக்குக் கிடைக்கிற பலன்? கோடி கோடியாகக் கொட்டினாலும் கிடைக்காத பலன்—ஆம், அன்பு, மரியாதை, தாராளமாகக் கைமாறு செய்யும் உண்மை நண்பர்கள்.

 

மனிதனின் கணக்கு..

 

👨5 வயதில் விரல்களை எண்ணினான்,

👨10 வயதில் எண்களை எண்ணினான்,

👨15 வயதில் மதிப்பெண்களை எண்ணினான்,

👨20 வயதில் தேர்வு வினாக்களை எண்ணினான்

👨25 வயதில் சம்பளத்தை எண்ணினான்,

👨30 வயதில் நண்பர்களை எண்ணினான்,

👨35 வயதில் வாரிசுகளை எண்ணினான்,

👨40 வயதில் கடன்களை எண்ணினான்,

👨45 வயதில் நோயை எண்ணினான்,

👨50 வயதில் சொந்தங்களை எண்ணினான்,

👨55 வயதில் மாத்திரையை எண்ணினான்,

👨60 வயதில் பேரக் குழந்தைகளை எண்ணினான்,

 

அதற்கு பின் வயதை எண்ணினான்,

இறந்த பின், தனக்காக அழும் உள்ளங்களை எண்ணினான்.

 

எண்ணிப்பார்க்கையில், தன்னிடம் கூடவே இருந்தது கணிதம் மட்டும் தான்

என எண்ணினான்...✍🏼


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம் 

வாழ்க்கை பயணம் : நம்பிக்கையே வாழ்க்கை - மனதிருப்தியும் தாராள குணமும், மனிதனின் கணக்கு.. [ ] | Life journey : Faith is life - Contentment and generosity, the account of man.. in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்