காஞ்சிபுரத்தில் ஆடிசன்பேட்டை நேரடிக்குப் பக்கத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் பிரசித்தி பெற்றது. இவர் மிகவும் சக்தி வாய்ந்த ஆஞ்சநேயர்.
புகழ்பெற்ற ஆஞ்சநேயர் தலங்கள்
காஞ்சிபுரத்தில் ஆடிசன்பேட்டை நேரடிக்குப் பக்கத்தில் உள்ள
ஆஞ்சநேயர் கோவில் பிரசித்தி பெற்றது. இவர் மிகவும் சக்தி வாய்ந்த ஆஞ்சநேயர்.
உலகளந்த பெருமாள் கோவிலுக்கு எதிரில் சதுர்புஜ ஆஞ்சநேயருக்கு என்று தனிக்கோயில்
உள்ளது.
மிகப்பெரிய உருவத்துடன் ஆஞ்சநேயர் காட்சி கொடுக்கிறார்.
அழகும், கம்பீரமும்
வாய்ந்த ஆஞ்சநேயரைக் கண்டு வணங்குவதை, மிகப்பெரிய புண்ணியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.
3. சோளிங்கர்
சோளிங்கர் ஊருக்கு வெளியே, இரண்டு மலைகள் உள்ளன. ஒரு மலையில் நரசிங்கப் பெருமாள்
கோவில் கொண்டுள்ளார். அதற்கு எதிரே உள்ள இன்னொரு மலையில் ஆஞ்சநேயர்
காட்சியளிக்கிறார். யோகநிலையில் இருக்கிறார். இந்தக் கோவிலுக்கு வந்தால்
மனிதர்களைப் பிடித்து உள்ள பேய் பிசாசுகள் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இங்குச் சில நாட்கள் தங்கி ஆஞ்சநேயரை வழிபட்டால், தீராத நோய்கள் எல்லாம் தீரும்.
ஊத்தங்கரையிலிருந்து அரூர் செல்லும் வழியில் அனுமன்
தீர்த்தம் உள்ளது. தென்பெண்ணை ஆற்றில் இது அமைந்துள்ளது. இங்கு ஆஞ்சநேயருக்கு
என்று அமைந்த கோவில் புகழ்பெற்ற ஒன்று. இங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால்
பிள்ளைப்பேறு அற்றவர்களுக்கு, சந்தான பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
5. வந்தவாசி
கிழக்கு இந்தியக் கம்பெனியாருக்கும். முகமதியருக்கும்
ஏற்பட்ட போரில், இங்கிருந்த
கோட்டை அழிந்தது. கோட்டையின் நுழைவு வாயிலில் பழமையான ஆஞ்சநேயர் கோவில் ஒன்று
உள்ளது. கோட்டையின் காவல் தெய்வமாக ஆஞ்சநேயர் விளங்கினார் என்பது
குறிப்பிடத்தக்கது.
6. சென்னை
திருவல்லிக்கேணியின் கிழக்குக் கரையில் ஆஞ்சநேயர் கோவில்
அமைந்துள்ளது. தியாகராய நகரில் உள்ள சிவாவிஷ்ணு கோவிலிலும் ஆஞ்சநேயர் ஆலயம்
உள்ளது. நங்கநல்லூரில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவில் அனைவராலும் வணங்கத்தக்க
பெருமையுடன் உள்ளது.
7. சஞ்சீவிராயன்பேட்டை
சேத்துப்பட்டை அடுத்துள்ள சஞ்சீவிராயன்பேட்டையில் வீர
ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு 30 அடி உயரத்தில் வீர ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
8. தருமபுரி
தருமபுரி,ஸ்ரீ ஹரிஹர நாதஸ்வாமி கோவில் தெருவில், ஸ்ரீ ஆஞ்சநேயர்
சந்நிதி அமைந்தள்ளது. மூலவர் சுமார் ஒன்றரை அடி உயரத்துடன் காட்சி கொடுக்கிறார்.
தினசரி இங்கு வடை மாலைகளும், வெற்றிலை மாலைகளும் குவிகின்றன. இங்கு வெண்ணைக்காப்பும்,
சந்தனக் காப்பும் விசேஷம். இக்கோவிலில் ஆஞ்சநேயருக்குத்
தேன் அபிஷேகமும் நடைபெறுவது தனிச்சிறப்பு வாய்ந்தது. தினமும் காலை நேரம் மட்டுமே
தேன் அபிஷேகம் நடைபெறும். இக்கோவில் தருமபுரி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார்
ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
9. நல்லாட்டூர்
திருத்தணி-திருப்பதி பாதையில் உள்ள நல்லாட்டூர் என்னும்
கிராமத்தில் ஸ்ரீ வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. கிருஷ்ணதேவராயப்
பேரரசின் குருவும், தவ
யோகியுமான ஸ்ரீ வியாசராயர் சுவாமிகள் ஸ்தாபித்த சுமார் 700 ஆஞ்சநேயர் கோவில்களில் இக்கோவிலும் அடங்கும் என்று
கூறப்படுகிறது. மூல விக்ரகமான ஸ்ரீ வீர மங்கள ஆஞ்சநேயர், துள்ளி விளையாடும் குழந்தைத் தோற்றத்தில் காட்சி தருகிறார்.
இக்கோவில் வளாகத்தில் உள்ள பாம்புப் புற்று. தெய்வீக அருள் நிறைந்ததாக உள்ளது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
ஆன்மீகம்: ஆஞ்சநேயர் : புகழ்பெற்ற ஆஞ்சநேயர் தலங்கள் - காஞ்சிபுரம், சுசீந்திரம், அனுமன் தீர்த்தம் [ ஆன்மீகம் ] | spirituality: Anjaneya : Famous Anjaneya sites - Kanchipuram, Suchindram, Hanuman Theertha in Tamil [ spirituality ]