நாமக்கல் ஆஞ்சநேயர் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வட இந்தியாவிலும் பிரசித்தி பெற்றவர்.
பிரசித்தி பெற்ற அனுமன் ஆலயங்கள்!
நாமக்கல் ஆஞ்சநேயர் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வட இந்தியாவிலும் பிரசித்தி பெற்றவர்.
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஆண்டுதோறும் இங்கே நடைபெறும் அனைத்து திருவிழாக்களுக்கும் வட
இந்தியாவிலிருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்கிறார்கள்!
ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் ஆலயத்தில் விஸ்வரூப
திருக்கோலத்தில் அனுமன் சந்நிதி கொண்டுள்ளார்.
காஞ்சி வரதராஜர் தேரடித்தெருவில் அனுமனின்
கோயில் இருக்கிறது. இந்த அனுமன் மீது ஆஞ்சநேயப் புராணம் பாடி ஒரு தீவிர பக்தர் தனது
இழந்த பார்வையைத் திரும்பப் பெற்றிருக்கிறார்.
கோபி செட்டி பாளையத்திலிருந்து எட்டு
கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கூகலூரில் குளத்துக் கடை தபால் நிலையத்திற்கு எதிரே கையில்
சிவலிங்கத்தை ஏந்திய அதிசய ஆஞ்சநேயர் அருள்கிறார். தினமும் அவ்வூரில் உள்ள வணிகர்கள்
தங்களது கடையைத் திறப்பதற்கு முன் கடை சாவியை இங்கே வந்து அனுமனின் சந்நிதியில் வைத்து
எடுத்துப்போய் கடை திறக்கிறார்கள். அப்படிச் செய்வதால் அன்றைய வருமானம் சிறப்பாக இருப்பதாகக்
கூறுகிறார்கள். திருமணத் தடை 48 நாட்களில்
நீங்குவதாகவும் இந்த அனுமனின் சக்தி பற்றிக் கூறப்படுகிறது!
ஈரோடு, சத்தியமங்கலத்திலுள்ள ஸ்ரீ வேணுகோபால
சுவாமி ஆலயத்தில் கருட ஸ்தம்பத்தில் தனி சந்நிதியில் ஆறடி உயர அனுமன் அருள்புரியக்
காணலாம்! இங்கு வந்து இவரை வணங்குவோர்க்கு ராகு கேது தோஷங்கள் உடன் விலகி ஓடும் என்கிறார்கள்!
சுசீந்திரத்தில் அருளும் அனுமனின் திருவுருவம், சீதாப் பிராட்டிக்கு அனுமன் அசோகவனத்தில்
காட்டிய அதே விஸ்வரூபத் திருக்கோலம் தரிசனமாகக் கிடைக்கின்றது! சேலம் கந்தாஸ்ரமத்தில்
18.அடி உயரம் கொண்ட பஞ்சமுக அனுமனைத் தரிசிக்கலாம்! இது அனைத்து
பாவங்களையும் தோஷங்களையும் நீக்கக்கூடியது!
காஞ்சி சங்கர மடம் எதிரே தனி மண்டபத்தில்
அருள்பாலிக்கிறார் சக்தி ஆஞ்சநேயர். காஞ்சி மாமுனிவர்
செல்லும் முன்பு அவரைத் தரிசித்து விட்டே செல்வது வழக்கம்!
ராமேஸ்வரத்தில் அத்திமரத்தால் ஆன அனுமனையும், வாலறுந்த நிலையில் உள்ள அனுமனையும்
தரிசிக்கலாம். மிகப் பிரசித்தி பெற்ற இந்த அனுமன் சிலைகள் வரலாற்றுச் சிறப்பு பெற்றவை.
தரிசித்ததும் பலன்!!.
திருக்கழுக்குன்றத்திலிருந்து இரண்டு
கி.மீ தொலைவில் உள்ள கொத்திமங்கலத்தில் உள்ளது மங்கள மாருதி ஆலயம், இந்தல அனுமனுக்குக் கொய்யா, வாழை, பலாக் கனிகளை நிவேதனமாகப் படைக்கின்றனர்.
வேலூர் மாவட்டம், சோளிங்கபுரத்தில் உள்ள சின்ன மலையில் சதுர் புஜங்களுடன் சங்கு சக்கரம் ஏந்தி
அமர்ந்த நிலையில் மூல அனுமனும், நின்ற
நிலையில் உற்சவ அனுமனும் அருள்கின்றனர்.
பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து
பத்து கி.மீ. தொலைவிலுள்ள காளி ஆஞ்சநேயர், மனநலம் குன்றியவர்களைக் காப்பாற்றும் சக்தி வாய்ந்தவர். நாட்டின்
அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இங்கே மனநலம் குன்றியவர்களை அழைத்து வந்து, அனுமன் அருள் பெற்று நலமுடன் செல்கிறார்கள்!,
சென்னை தாம்பரத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில், தைலா வரத்தில் மனைவியுடன் அருளும் கல்யாண
ஆஞ்சநேயரைத் தரிசிக்கலாம்!
ஈரோடு மாவட்டம், அந்தியூரிலிருந்து அத்தாணி செல்லும் வழித் தடத்தில், பவானி பிரிவு என்ற இடத்தில் அனுமனுக்கு
மிகப் பெரிய உருவச்சிலை பாதை ஓரத்திலேயே உள்ளது. சமய சஞ்சீவி யாகப் பலவித நோய்களையும்
இந்த அனுமன் தீர்த்து வைக்கிறார்!. சென்னை- ராமாபுரம் பாலாம்பிகைநகர், இரண்டாவது தெருவில் அருள் புரியும்
பிரசன்ன ஆஞ்சநேயர், கையில்
சௌகந்திக மலர் ஏந்திக் காட்சி அளிக்கிறார். குழந்தைப் பேறு வரம் அருளுகிறார்
திருக்கடையூருக்கு அருகில் உள்ள அனந்த
மங்கலத்தில் பிரம்மா. விஷ்ணுவின் ஆயுதங்களுடன், ஈசனின் முக்கண்களுடன், சூலமும், ஆதிசக்தியின்
சுத்தியும், ராமபிரானின் வில் அம்பும் கொண்டு, யத்துக் கைகளுடன் இடுப்பில் வாளுடன்
அனுமன் காட்சி தருகின்றார் இவரை வழிபட, சனி- செவ்வாய் ராகு கேது கிரகங்களின் தோஷங்கள் விலகி நலம் பெறலாம்!
சென்னை அருகே, திருவள்ளூர் பெரிய குப்பம், ஸ்ரீதேவி நகரில் அருள் பொழியும் விஸ்வரூப
பஞ்சமுக ஆஞ்சநேயர், பச்சை
திற கிரானைட் கல்லால் செதுக்கப்பட்டவர். இந்த வகையில் இவர்தான் உலகிலேயே மிக உயரமானவர்.
சென்னை சூளை கருமாரி அம்மன் கோயில்
தெருவில் உள்ள அனுமன் ஆலயத்தில் பத்து அனுமன்கள் தரிசனம் அளிக்கின்றனர். வட இந்திய
முறையில் பூஜைகள் நடக்கும் தலம் இது.
செங்கல்பட்டிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள (படாளம் கூட்ரோடு
வேடந்தாங்கல் வழி) திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில் அமைந்துள்ள
மலையின் அடி வாரத்தில் வீர ஆஞ்சநேயர் அருள் புரிகிறார். தங்கள் கோரிக்கைகளை எழுதி, மட்டைத் தேங்காயுடன் வைத்து மஞ்சள்
துணியில் கட்டி சமர்ப்பித்தால், நினைத்தது
நிறைவேறுகிறது!.
ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், ஒட்ட பாளையம் கிராமம். ஒலகடம் பருவாச்சி
சாலையில் அமைந்துள்ள திருமண் கல்யாண லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் பிரமாண்டமாக
அமைந்திருக்கும் ஆஞ்சநேயர் மிகுந்த சக்தி படைத்தவர்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆஞ்சநேயர்: பிரசித்தி பெற்ற அனுமன் ஆலயங்கள்! : பிரசித்தி பெற்ற அனுமன் ஆலயங்கள்! - ஆஞ்சநேயர் [ ஆஞ்சநேயர் ] | Anjaneya: Famous Hanuman Temples! : Famous Hanuman Temples! - Anjaneya in Tamil [ Anjaneya ]