தீவினை அச்சம்

அதிகாரம் : 21

[ திருக்குறள்: பொருளடக்கம் ]

Fear of fire - Authority : 21 in Tamil



எழுது: சாமி | தேதி : 16-07-2023 08:30 pm
தீவினை அச்சம் | Fear of fire

201. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்றும் செருக்கு.

தீவினை அச்சம்

அதிகாரம் : 21

201. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்

தீவினை என்றும் செருக்கு.

மற்றவர்களுக்குக் கொடுமை செய்வதற்கு கொடியவர்கள் அஞ்சமாட்டார்கள்; சான்றோர்கள் அஞ்சுவார்கள்.

202. தீயவை தீய பயத்தால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.

தீயவையாகிய தீயசெயல்கள் பின்னால் தீயைவிடக் கொடுமையானவை. ஆதலால் தொட்டவரைச் சுடும், தீயைவிட தீயச்செயல்கள் செய்ய அஞ்சவேண்டும்.

203. அறியினுள் எல்லாம் தலையென்ப திய

செறுவார்க்கும் செய்யா விடல்.

பகைவர்களுக்கும் தீமை செய்யாதிருப்பது அறிவிற்கெல்லாம் அறிவாகும்.

204. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.

மறந்தும் பிறருக்குக் கேடு நினைக்கக் கூடாது. நினைத்தால் அறக்கடவுளே கெடுத்து விடுவான்.

205. இலன்என்று தீயவை செய்யற்க: செய்யின்

இலன்ஆகும் மற்றும் பெயர்த்து.

செல்வம் இல்லாத ஏழையென்று தீமையானவற்றைச் செய்யக்கூடாது. செய்தால் உள்ளதும் போய் வறுமை மிகும்.

206. தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நொய்ப்பால

தன்னை அடல்வேண்டா தான்.

தனக்குத் துன்பம் வரக்கூடாது என்று எண்ணுபவன் பிறருக்குத் துன்பந்தரும் செயல்களைச் செய்யக்கூடாது.

207. எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை

வியாது பின்சென்று அடும்.

எவ்வளவு பெரிய பகைமையில் இருந்தும் தப்பலாம். ஆனால் தீவினையாகிய பகைமட்டும் நீங்காது நின்று கொல்லும்.

208. தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வியாது அடிஉறைந் தற்று.

தீவினையானது அவனைத் தொடருவது. ஒருவரின் நிழல், அவரைத் தொடருவதைப் போன்றதாகும்.

209. தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்

துன்னற்க தீவினைப் பால்.

தன் நன்மையைத் தான் விரும்புகிறவன், மற்றவருக்குச் சிறிய அளவு கெடுதல் செய்வதையும் விட்டு விடவேண்டும்.

210. அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்

தீவினை செய்யான் எனின்.

ஒருவன் தீயவழிகளில் நடந்தாலும், பிறருக்குத் தீமை செய்யாது இருந்தால், அவனைத் துன்பம் பற்றாது என்பது ஆகும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

திருக்குறள்: பொருளடக்கம் : தீவினை அச்சம் - அதிகாரம் : 21 [ திருக்குறள் ] | Tirukkural: Table of Contents : Fear of fire - Authority : 21 in Tamil [ Tirukkural ]



எழுது: சாமி | தேதி : 07-16-2023 08:30 pm