திருநெல்வேலியில் ஒருதடவை பன்னிரண்டாண்டு காலம் மழையின்மையால், நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் பசியால் வாடித் துன்புற்றுத் துயருற்றனர்.
நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்
திருநெல்வேலியில் ஒருதடவை பன்னிரண்டாண்டு காலம்
மழையின்மையால், நாட்டில்
கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் பசியால் வாடித் துன்புற்றுத் துயருற்றனர்.
பசியால் பலர் உயிரிழந்தனர். வேதசன்மா என்னும் சிவமறையோன், நாம் இருக்கும் நெல்லை நகர் வருவாயின். துயர் நீங்கும் எனச்
சிவபெருமான் அருள் செய்தார்.
இதனால் வேதசன்மா இறைவன் பாதம் போற்றித் தொண்டு செய்வதற்கு
நெல்லைநகர் வந்து சேர்ந்தான். வற்றாது வளம் கொழிக்கச் செய்யும் சீவந்தி பொருநையில்
நீராடி, நெல்லையப்பரை
வணங்கி நிற்க இறைவன் அவருக்கு நிறையவே செல்வங்களை வழங்கினார்.
அது முதல் அவன் இறைவன் வழங்கிய செல்வங்களைக் கொண்டு,
தினமும் செந்நெல் அறுத்துச் சிவபெருமானுக்கு அமுதாக்கி பூசை
செய்து வந்தார். பஞ்சகாலத்தில் இறைவன் வேதசன்மாவின் பக்தியைச் சோதிக்க எண்ணி,
தாம் அளித்த செல்வத்தைக் குறைவுறச் செய்தார்.
நாளடைவில் பூசைக்கு ஏதுமில்லா நிலைக்கு ஆளான வேதசன்மா,
இறைவனை வேண்டி மழை பொழிந்து அருள்புரியுமாறு வேண்டினார்.
இறைவனுக்கு அமுது படைக்க வேண்டிய நெல்லைச் சந்நிதி முன் உலர போட்டுவிட்டுப்
பொருநையை நோக்கி நீராடச் சென்றார். அது சமயம் இறைவன் திருவருளால் மேகம் திரண்டது;
மழை பொழிந்தது. நீராடிக் கொண்டிருந்த வேதசன்மா இறைவன்
அமுதுக்கு உலர்த்திய நெல் என்ன ஆயிற்றோ எனக் கலங்கி. நெல்லை வெள்ளம் கொண்டு
சென்றால் என்ன செய்வது? இறைவன் பசித்திருப்பாரே! வீடு வீடாகச் சென்று சேகரித்த
நெல்லான இதனை இழந்தால், வேறு நெல்லும் இல்லையே எனச் சிந்தித்து மனம்கலங்கி
ஆலயத்தில் நுழைந்தார்.
அப்பொழுது தாம் உலர்த்திய நெல்லைச் சுற்றி மாரிநீரே
உயர்ந்து வேலியாகக் காத்து நிற்பதையும், நடுவே வெயில் காய்வதையும் கண்டு அதிசயித்து பாண்டிய
மன்னனிடம் சென்று கூறினான்.
மன்னன் அதைக் கண்டு அதிசயித்து வேணுவன நாதர் தாள் பணிந்து
உலகுக்காக மழை பெய்வித்து, நெல் மட்டிலும் நனையாது காத்த பரம்பொருளே! உனதுபெயர் இன்று
முதல் நெல்வேலி நாதரென்று வழங்குவதாக என்று வேண்டினான். அது முதல் வேணுவன நாதர்
திருப்பெயர் நெல்வேலிநாதர் எனவும் வழங்கலாயிற்று. இத்திருவிளையாடல் தை மாதம் பூச
விழாவில் நான்காம் திருநாளன்று வருகின்றது.
சுவேத கேதுவுக்கு எமபயம் ஒழித்த திருவிளையாடல்
சூரிய குலத்தில் உதித்த சுவேதகேது மன்னன்,
உலகமெல்லாம் ஒரே குடைக்குக் கீழ் அரசு செலுத்தி
இன்புற்றிருந்த வேளையில், முதுமையின் காரணமாக அரசு பீடத்தைத் தன்மைந்தனிடம்
ஒப்படைத்துத் தவம் செய்யும் பொருட்டு வானப்பிரத்த ஆசிரமத்தை அடைந்தான்.
அவனுடன் நீங்கா நிழல்போல மனைவியும் தொடர்ந்தாள். பல
தலங்களும் சென்று இறைவளை வணங்கி வரும் நாளில் மனைவி உயிர்துறந்தாள். மனைவி
இறக்கும்போது பட்ட மரண வேதனையைக் கண்ட மன்னன், இத்துன்பம் தமக்கும் ஒரு நாள் வரும் என்று மனதில் கொண்டு
மனைவிக்கு ஈமச்சடங்குகளைச் செய்தான்.
பின்னர் மரண வேதனையை எண்ணி வெள்ளியினடத்தே சென்று முறையிட,
அது கேட்ட வெள்ளி மிருத்துஞ்சய விஞ்சையை உபதேசம் செய்து,
அதனைத் தினமும் ஓதி சிவபெருமான் வாழும் தலங்கள் எல்லாம்
வழிபட்டு வந்தால் எமவாதை நீங்கும் எனத் தெரிவித்தார்.
சுவேதகேதுவும் பல தலங்கள் சென்று வழிபட்டுத் தாமிரபரணி
பாயும் திருநெல்வேலி வந்தார். தல மகிமைதனை உணர்ந்து தானே ஒரு லிங்கத்தை ஏற்படுத்தி
வழிபட்டு வரும் நாளில், ஒரு நாள் எமன் அவரது உயிரைக் கவரத் தோன்றினான். சுவேதகேது
ஐந்தெழுத்தை ஓதி அரனைச் சரணடைந்தார்.
எமன் அவரை நோக்கி நகைத்து நீ இறைவனைப் பற்றினாலும்,
உன்னை விடேன் என்று கூறி எம பாசத்தை வீசினான். அது கண்ட
சுவேதகேது முன்னிலும் பன்மடங்கு உறுதியோடு ஐந்தெழுத்தை ஓதி அபயம் வேண்டினார்.
அந்த அளவில், இறைவன் லிங்கத்திடையே தோன்றி எமனைக் காலால் உதைக்கவும்.
இடியுண்டநாகம் போல் அலறி விழுந்து எமன் உயிர் துறந்தான். அவ்வளவில் சுவேதகேது
இறைவனை நோக்கி வந்து, பிறந்துழலா
வண்ணம் உன்பதம் அருள் புரிய வேண்டும் என வேண்டினான்.
இறைவன், இந்நெல்லையில் இருப்போர், வாழ்வோர். சிந்தையில் நினைப்போர், பிறந்தோர், இறந்தோர் ஆகிய எல்லோரும் பந்தமாம்பிறவி நீங்கிப் ப்ரகதி
அடைவர். இதுவே தென்கைலாயம்; சிவலோகமும் இதுவே என அருளினார்.
சுவேதகேது வேண்டுதலால் எமனை எழச்செய்தார். சுவேதகேது எமபயம்
ஒழிந்து, திருமூலலிங்கப்
பேரொளியோடு இறைவனுடன் கலந்து நின்றான். இத்திருவிளையாடல் வைகாசி மாதம் நடைபெற்று
வருகிறது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
ஆன்மீகம்: சிவன் : நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual: Shiva : Fenced rice paddy game - Notes in Tamil [ spirituality ]