221. வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து.
ஈகை
221. வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து.
ஏழைகளுக்கு வேண்டும்
பொருளைக் கொடுப்பதே ஈகையாகும். மற்றவை வாங்கிய அளவினைத் திருப்பித்
தருவதற்கொப்பகும்.
222. நல்ஆறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்எனினும் ஈதலே நன்று.
நன்மை
தருவதாயிருந்தாலும், பிறரிடமிருந்து பொருளைப் பெறுவது தீது. விண்ணுலகம் இல்லையென்றாலும் ஈதலே நன்று.
223. இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன்உடையான் கண்ணே உள.
வறுமையுற்றவன் என்னும்
துன்பத்தைச் சொல்லாமையும். வறுமையுற்றோருக்கு வழங்குதலும், நல்ல குடியில் பிறந்தவரின் பண்புகளாகும்.
224. இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு.
இரப்பவர் வேண்டிய
பொருளைப் பெற்று மகிழுமாறு கொடுப்பவர், கொடுக்க முடியாமல் வருந்துவது துன்பமானதாகும்.
225. ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
தமது பசியைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றல் தவ வலிமையுடைவருக்கே உரியதாகும். தவசிகளின் பசியையும் நீக்குபவரே இல்லறத்தாராவார்கள்.
226. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
பொருளற்ற ஏழையின்
பசியைப் போக்குவதே, செல்வத்தைத் தனக்குப்பின் சேமித்து வைக்கும் இடமாகும்.
227. பார்த்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.
பலரோடு பகிர்ந்துண்ணும்
பண்புடையானை பசியென்னும் கொடிய நோய் தீண்டாது.
228. ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை
வைத்துஇழக்கும் வன்க ணவர்?
வறியார்க்குக் கொடுத்து
அவர் மகிழ்வினைக் காணாத அறிவிலிகள் செல்வத்தை இழந்து விடுவர்.
229. இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.
பொருளைச் சேர்க்க
வேண்டும் என்று கருதி தானே தனித்து உண்ணுதல், பிச்சை எடுப்பதை விட துன்பமானது.
230. சாதலின் இன்னாதது
இல்லை இனிதுஅதமம்
ஈதல் இயையாக் கடை
மரணத்தை விட துன்பமானது
வேறு இல்லை,
மரணமும் வறியவர்
கேட்டதைக் கொடுக்க முடியாத போது இனியதே ஆகும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
திருக்குறள்: பொருளடக்கம் : ஈகை - அதிகாரம்: 23 [ திருக்குறள் ] | Tirukkural: Table of Contents : fly - Authority: 23 in Tamil [ Tirukkural ]