லட்சுமண நாராயணசுவாமி என்னும் பக்தர் ஒருவர் கும்ப கோணம் ஸ்ரீ சாரங்கபாணியின் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார்.
பக்தனுக்காக...
லட்சுமண நாராயணசுவாமி என்னும் பக்தர்
ஒருவர் கும்ப கோணம் ஸ்ரீ சாரங்கபாணியின் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார். இறுதிக்காலம்
வரையில்சேவை செய்தார். இக்கோவிலின் கோபுரத்தைக் கட்டியவரும் இவரே. இவருக்குக் குழந்தைகள்
இல்லை.
ஒரு தீபாவளி அன்று இவர் பெருமாளின்
திருவடியை அடைந்தார். சிரார்த்தம் செய்ய குழந்தைகள் இல்லாமல் போனதால், நரகம் செல்ல வேண்டி வரும் என்பதால், தனக்கு சேவை செய்ய தன் பக்தருக்குத்
தானே மகனாக இருந்து, இறுதிச்
சடங்குகள் செய்தார் சாரங்கபாணி.
இது நடந்த மறுநாள் கோவிலைத் திறந்து
பார்த்தபோது. பெருமாள் ஈரவேட்டியுடனும், மாற்றிய பூணூலுடனும், தர்ப்பை களுடனும் காரியம் செய்து வந்த கோலத்தில் காட்சியளித்தார்.
அதாவது, பெருமாளே தன் பக்தனுக்கு ஈமகிரியை செய்து
வைத்து கருணைக் கடலாக விளங்கினார்!
இதை நினைவுபடுத்தும் விதமாக ஒவ்வொரு
ஆண்டும் தீபாவளி அன்று உச்சிக்காலத்தில் அந்த பக்தருக்கு சாரங்கபாணி திதி கொடுக்கும்
நிகழ்ச்சி இப்போதும் நடக்கிறது. ஆனால் அதை பக்தர்கள் பார்க்க முடியாது!!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : பக்தனுக்காக... - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : For devotee... - Tips in Tamil [ spirituality ]