உலகாளும் சக்தி, நெல்லையில் காந்திமதி அம்மன் என்ற திருநாமத்தில் அருள் புரிகிறார். நெல்லையப்பர் கோவிலில் தனி ஆலயத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளிய காந்திமதி அம்மன், இங்கே தவமிருந்துதான் நெல்லையப்பரை மணம் புரிந்து கொண்டார் என்பதால், இக்கோயிலுக்கு வந்து வணங்குவோருக்கு திருமணம் கைகூடி வரும் என்பது ஐதீகம்.
தவம் இருந்த காந்திமதி
உலகாளும் சக்தி, நெல்லையில் காந்திமதி அம்மன் என்ற திருநாமத்தில் அருள்
புரிகிறார். நெல்லையப்பர் கோவிலில் தனி ஆலயத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளிய
காந்திமதி அம்மன், இங்கே
தவமிருந்துதான் நெல்லையப்பரை மணம் புரிந்து கொண்டார் என்பதால்,
இக்கோயிலுக்கு வந்து வணங்குவோருக்கு திருமணம் கைகூடி வரும்
என்பது ஐதீகம். காந்திமதி அம்மன் கோயிலில் மார்கழிபூஜை கிடையாது. அதற்குப்பதிலாக,
கார்த்திகை மாதத்தில் அதிகாலை நான்கு மணிக்குக் கோவில்
திறந்து, பூஜை
நடக்கிறது. சிவனும், அம்பிகையும்
ஒன்று என்பதன் அடிப்படையில் பிரதோஷத்தின்போது இங்கு அம்பாள் சன்னதியிலுள்ள
நந்திக்கும் பிரதோஷ பூஜை நடக்கிறது.
இதேபோல் சிவராத்திரியன்று நள்ளிரவில் நெல்லையப்பருக்கு
மட்டுமின்றி, அம்பிகைக்கும்
நான்கு ஜாம அபிஷேகம், பூஜைகள்
நடக்கிறது. இக்கோயிலில் காந்திமதி அம்மன், சுவாமி நெல்லையப்பருக்கு உச்சிக் காலத்தில் அன்னம் பரிமாறி
உபசரிப்பதாக ஐதீகம்.
இதனால் அம்மன் சன்னதி அர்ச்சகர்கள், விதவிதமான நைவேத்யங்களை சிவன் சன்னதிக்குக் கொண்டு செல்ல,
சிவன் சன்னதி அர்ச்சகர்கள் அவற்றைச் சிவனுக்குப்
படைக்கின்றனர். இப்பூஜை முடிந்தபின், அம்பாளுக்கு அதே நைவேத்யம் படைத்துப் பூஜை நடக்கிறது. கணவன்
உண்டு முடித்த பிறகு மனைவி சாப்பிடுவதாக இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள்
திருக்கோவிலில் அட்சய திருதியை தினத்தையொட்டி. அருள்மிகு குபேரலிங்க சுவாமிக்குச்
சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் குபேரலிங்கம் சன்னதி அமையப்பெற்ற 3 சிவாலயங்களில் நெல்லையப்பர் திருக்கோவிலும் ஒன்று.
இக்கோவிலில் அமைந்துள்ள குபேரலிங்கத்துக்கு அட்சய திருதியை நாளையொட்டி காலை 7.30 மணிக்கு அபிஷேகமும். 8.45 மணிக்கு தீபாராதனையும், தொடர்ந்து சுவாமிக்கு ஐஸ்வர்யேஸ்வரர் அலங்காரமும்
செய்யப்படுகிறது. அட்சய திருதியை நாளில் குபேரனுக்கு ஐஸ்வர்யம் வழங்கிய
ஐஸ்வர்யேஸ்வரரை, பக்தர்கள்
வழிபட்டு நன்மை பெறக் கோவில் நிர்வாகம் சார்பில் இந்தச் சிறப்பு பூஜைகளுக்கு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
ஆன்மீகம்: சிவன் : தவம் இருந்த காந்திமதி - குபேரலிங்கம் [ ஆன்மீகம் ] | Spiritual: Shiva : Gandhimati who was penitent - Kuberalingam in Tamil [ spirituality ]