ஒரு ஜென் ஞானியின் மனைவி காலமானார். அப்போது ஞானியின் வீட்டில் ஒரே சோகம் கவலை. அதனால் மக்கள் அனைவரும் துக்கம் கேட்க ஊரே திரண்டு சென்றார்கள்.
வாழும்போதே இறப்பதற்குப் பழகு:
*~ பிளேட்டோ*
ஒரு ஜென் ஞானியின் மனைவி காலமானார். அப்போது
ஞானியின் வீட்டில் ஒரே சோகம் கவலை. அதனால் மக்கள் அனைவரும் துக்கம் கேட்க ஊரே திரண்டு
சென்றார்கள். ஆனால், அந்த ஞானியோ கைகளால் தாளம் போட்டபடி பாட்டுப் பாடிக் கொண்டிருந்த மாதிரி முகத்தில்
எந்த விதமான கவலையும் இல்லாமல் காணப்பட்டார். எப்போதும் போல இயல்பாக இருப்பதை பார்த்த
மக்கள்களுக்கு அதிர்ச்சி அதில் ஒருவன் அவரிடமே காரணம் கேட்டான். அதற்கோ அந்த ஞானி
இப்படி பதில் அளித்தார். பிறப்பில் சிரிக்கவோ, இறப்பில் அழவோ என்ன இருக்கிறது சொல்லுங்கள்.
அந்த இரண்டு நிகழ்ச்சிகளுமே நம்மிடம் இல்லையே. மேலும் என் மனைவிக்கு பிறப்பதற்கு முன்பே
உடலோ அல்லது உயிரோ இல்லை. அதற்குப் பிறகு தானே இந்த உடலும் உயிரும் வந்தது.
இப்போது அந்த வந்த உடலும், உயிரும் காணாமல் போய் விட்டது. அந்த உடல், உயிர் இரண்டும்
இடையில் வந்தவை அதனால் அவைகள் இடையிலே போய் விட்டது அவ்வளவு தான். இதில் என்ன வருத்தப்பட
இருக்கிறது? நாம் அழுது புரண்டாலும் எப்போதும் மாண்டவர் ஒரு
போதும் மீண்டும் இந்த மண்ணில் வருவதில்லை என்பது அனைவருக்கும் தெரியும் என்றார்.
அதே போல் பிறப்பு என்ற ஒன்று உண்டெனில்
கண்டிப்பாக மனிதருக்கு இறப்பு என்பதும் உண்டு. இந்த சம்பவங்களை இதே மாதிரி நிகழ்ச்சிகளை
நம்முடைய மகான்கள் முதல் மன்னர்கள் வரை யாருமே இன்றுவரை எவரும் மரணத்தை வென்றதே
கிடையாது என்பதும் தெரிந்ததே ஆகும். மேலும் மனிதனுடைய திட்டமிட்ட வாழ்க்கை, திடீர் மரணத்தால் மனிதனின்
அனைத்தும் பொருளற்றுப் போகும் எல்லாமே ஒரு நொடிப் பொழுதில் அனைத்தும் மறைந்து
விடும். அதனால் இன்றே, இக்கணமே, இக்காலமே நல்ல விதமாக வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தையும் இந்த மரணம் தான் நமக்குக் கற்றுத் தருகின்ற பாடம்
ஆகும்.
மேலும் தூக்கம் என்பதும் ஒரு வகையில் மரணத்தின்
சாயலே என்று சொல்லலாம். அந்த தூக்கம் என்பது உடம்பு இருக்கும் போதே மரணத்தை ருசி
பார்க்கிற ஒரு விஷயம் என்றே சொல்லலாம். இதைத் தான் பிளேட்டோ மரணப் படுக்கையில்
இருந்தபோது, அவர்
தன் நெருங்கிய நண்பரிடம் சொன்ன அனுபவ வார்த்தைகள். அதை தான் *"வாழும்போதே
இறப்பதற்குப் பழகு”* எவ்வளவு அர்த்தமுள்ள வார்த்தை இது. எப்படி சொல்லி இருக்கிறார்.
இதுவே ஞானி ஒருவரிடம் கற்றுக்கொண்ட வாழ்வியல் பாடம் ஆகும்.
ஆகவே *இன்றைய தினம் உங்களது இறுதி நாளாக கூட ஒருவேளை இருக்கலாம்
என்று அது உங்களுக்கு நினைவூட்டுகிறது. அதனால் அந்தந்த நாளை நாம் முழுவதுமாக ரசித்து வாழ்ந்து அனுபவிக்குமாறு உங்களைத்
துாண்டுகிறது.*
மேலும் எவரையும் காயப்படுத்தி
பார்க்காதீர்கள். வாழாதீர்கள். வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் முடியலாம்.
சாவுகின்ற நாள் ஒருவருக்குத் தெரிந்தால் அவருடைய வாழும் வாழ் நாள்கள் நரகம்
ஆயிடும் என்பதும் உண்மையே. நீங்கள் காயப்படுத்தி பார்க்கும் மனிதர்கள் உங்கள்
சந்திப்பின் கடைசி நாட்கள் ஆக கூட இருக்கக் கூடும். வாழும் வரை அனைவரும் வாழ்த்தும்
படி வாழ்ந்து விட்டு போக வேண்டும். அதே நேரத்தில் அனைவருக்கும் பிடித்த மாதிரி
இருக்க வேண்டுமென்றால் இப்போதைய காலங்களில் பணமாக தான் பிறக்க வேண்டும்.
விமர்ச்சனங்கள் அனைவருக்கும் உண்டு. அனைவருமே அவமானம் மற்றும் விமர்சனம் தாங்க மனதைப்
பழக வேண்டும்.
நல்லவை, கெட்டவை
கலந்தது தானே வாழ்க்கை:
உணவில் இனிப்பு மட்டுமே இருந்தால் சுவை அளவுக்கு
அதிகமாகி திகட்டி விடும் நிலைக்குப் போய்விடும். அளவுக்கு மீறினாலே அமுதமே நஞ்சாகும்
போது மற்றது எல்லாம் எம்மாத்திரம். அதுபோல் தான் வாழ்க்கை போராட்டம் இல்லை எனில் திகட்டி
விடும் என்பதும் உண்மை அல்லவா? ஞானி ஒருவரிடம் சீடனாகச் சேர ஒருவன் விரும்பினான். அப்போது அவரிடம் குரு என்ன
சொன்னார் தெரியுமா? அதாவது நீ என்னிடம் சேர்ந்த முதல் ஆறு மாதங்கள் வரை நீ கவனமற்று விழிக்கும்
நேரம் மற்றும் வேற சிந்தனை மனதில் வரும் போது மற்றும் இருக்கும் போதெல்லாம் நான் உன்னை
அடிப்பேன். ஆனால் ஒரு விஷயம் நீ எப்போலாம் தடுப்பு செய்கிறாயோ நான் உன்னை அடிக்க மாட்டேன். இந்த Dealing ஒத்து
வருகிறாய் என்றால் அதற்குத் தயாரா என்று கேட்க சீடனும் அவ்வாறே ஒத்துக் கொள்கிறான்.
பயிற்சி ஆரம்பம் ஆனது முதலில் பகலில்
கவனமுடன் இருக்கும் அவனால் இரவில் தூங்கும் போது அடி விழுவதைத் தவிர்க்கவே அவனால்
முடியவில்லை. மேலும் எப்படியெல்லாம் தடுக்கலாம் என்று அதற்கான வழிகளை யோசித்தான். அவன்
முன்பு போலவே துாங்கினான். ஆனால் எப்போது குரு அறைக்குள் நுழைகிறாரோ அப்போது அவன்
மனம் விழிப்புணர்வை அடைய ஆரம்பித்தது மேலும் அவர் வருவதை அவனுடைய உள் மனம்
அவனுக்கு உணர்த்தியது. அப்போதில் இருந்தே அவன் அடி வாங்குவதில் இருந்து
தப்பித்துக் கொண்டான். அப்போது குரு சொன்னார். இப்போது நீ விழிப்புணர்வு அடைந்து
விட்டாய். இனி நீ எனக்கு சீடன் இல்லை. இப்போது நீயே ஞானி என்று சொன்னாராம். இதில்
இருந்து என்ன தெரிகிறது என்றால் நமக்கும் கூட இத்தகைய விழிப்புணர்வு நிச்சயமாக அவசியம்
தேவைப்படுகிறது. விழிப்புணர்வு மற்றும் அதீத கவனம் உள்ளவர்களை இந்த உலகில் எவரும்
வீழ்த்துதல் என்பது மிகவும் கடினமே! மேலும் உடலை கடினமான வேலைக்குப் பழக்க
வேண்டும். அதுபோல உள்ளத்தை கஷ்டமான சூழ்நிலையில் எதிர்கொள்ளவும் பழக்க வேண்டும்.
உடலையும், உள்ளத்தையும் அப்படி பழக்கி கொண்டால் உலகில் உள்ளதை எல்லாம் தனக்கு
உள்ளதாக்கி கொள்ளலாம்.
நமக்கு வாதம் செய்து எதிர் கருத்து சொல்பவர்கள்
எல்லாம் நமக்கு எதிரிகள் அல்ல. அதே மாதிரி
நமக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் அனைவரையுமே நமக்கு நல்லவர்கள் என்று நினைக்கத்
தோன்றுகிறது. அப்படி தானே! சொல்லப்போனால் இந்த வாழ்வு சற்று விசித்திரமானது தான். நாம்
சொல்லும் மற்றும் சொல்ல நினைக்குற கருத்துக்கும், நாம் வாழ்கின்ற வாழ்க்கைக்கு யார்
துணை நிற்கிறார்களோ அவர்களையே நண்பர்களாக ஏற்றுக் கொள்கிறோம். மாறாக அதிலிருந்து
மாறுபட்டு, வேறுபட்டு நினைப்பவர்கள் பெரும்பாலும் நமக்கு எதிரியாகவே தோனும். ஆனால்
மாறுபாடு உள்ள கருத்துடையவர்கள் எல்லோரும் நம்மீது அன்பு செலுத்தாதவர்கள் என்று உறுதியாக
சொல்ல முடியாது. நமக்கு மிகப் பிடித்தவர்கள் நிச்சயமாக நம்மைத் தவறான பாதைக்கு எப்போதும்
கூட்டிச் செல்ல மாட்டார்கள். மேலும் அந்த வகையில் நாம் செல்லும் பாதையில் எதாவது தவறு
என்றால் அதையும் சுட்டிக் காட்டுபவர்கள் நல்ல நண்பர்களாகத்தான் இருக்க வேண்டும்
என்பதில்லை. ஆனால் என்ன ஒரு சிறப்பு என்றால், நண்பர்களை விட நாம் எதிரியாக கருதும்
நபர்கள் அதை மிகச்சரியாக செய்வார்கள். ஆனால் ஒருமுறை நாம் செய்யும் தவறுகளைச்
சுட்டிக் காட்டும் போதே நாம்
நல்லவர்களிடமிருந்து எப்போதும் விலகி
வந்து விடுகிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது? என்ற
மனோபாவமே நம்முடைய ஒவ்வொரு தவறுக்கும் காரணமாகி விடுகிறது. சுருங்கக் கூறின் அதுவே
நமது அடுத்தடுத்த தவறுகளுக்கும் அஸ்திவாரம் போட்டு விடுகிறது என்பதே உண்மை ஆகும்.
நாம் அனைவரோடும் இணைந்து வாழும் வாழ்வு மட்டும்
தான் நமக்கு எப்போதும் அழகிய இனிய நினைவுகளையும் இனிய அழகிய நிகழ்வுகளையும் தரும்.
அந்த அற்புதமான வாழ்வு சாத்தியமாக வேண்டும் என்றால், நாம் நமது எதிரிகளாக நினைத்துக்
கொண்டிருப்பவர்கள் சொல்லும் நல்ல கருத்துக்களையும் நாம் ஏற்க வேண்டும். அதை நாம்
ஒத்துக் கொண்டு நாம் வாழ்வில் சுகம் பெற வேண்டும். இதையே மிகப்பெரிய அரசியல்
தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள்
அனைவரும் மேலும் எல்லா துறையில் இருக்கக்கூடிய பெரிய பெரிய ஜாம்பவான்கள் அனைவரும்
முதலில் தனது நிலை குறித்து எதிரிகள் என்ன நினைக்கிறார்கள் என்று முதலில் தெரிய
ஆசை படுவார்கள், விமர்சனம் சரியா என்று தன்னை ஆராய்ச்சி பண்ணுவார்கள். மேலும் அதை
அறியவே ஆசைப்படுவார்கள். அதற்காகவே தன்னை
சுற்றி அறிவார்ந்த அமைச்சர்கள் மற்றும் நண்பர்களை அருகில் வைத்துக் கொள்வார்கள். பல்வேறு
காலகட்டங்களில் இந்த மண்ணில் வாழ்ந்த மாபெரும் தலைவர்கள், மன்னர்கள், ஜாம்பவான்கள்
எப்போதும் தனக்கு அருகிலேயே தன் தவறுகளை தைரியமாக சுட்டிக்காட்டும்
அமைச்சர்களையும், அமைச்சர்கள் வடிவிலிருந்த நல்ல நல்ல நண்பர்களையும் வைத்திருப்பதை
கொள்கையாக கொண்டார்கள்..
இடிப்பாரை இல்லாத ஏமரா
மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்
என்று சொன்னார் வள்ளுவப் பெருந்தகை.
அதாவது மாற்றுக் கருத்துக்கு மதிப்பு
கொடுக்காதவர்கள் இந்த உலகிலே எதையும் மிகப்பெரியதாக சாதித்ததாக வரலாறுகள் இல்லை என்பதே
உண்மை ஆகும். மாறாக அவர்களின் தற்போதய உயரத்திலிருந்து சரிந்து விழுந்து கீழே
சென்று இருக்கிறார்கள். எப்போதும் நல்லவற்றை யார் எங்கே, எப்படி சொன்னாலும்
ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவம் வந்தால் மட்டுமே நாம் மனிதர்களாக, சாதனை
சக்கரவர்த்தியாக இருக்க முடியும். மேலும் அதன் வழியாகவே இந்த சமூகத்தை, சரியாக
வழிநடத்தும் தலைவராக இருக்க முடியும். மேலும் எல்லாருக்கும் பிடிக்க
வேண்டுமென்றால் ஐஸ் கிரீம் தான் விற்க வேண்டும். தலைவனாக ஆகவேண்டுமென்றால்
விமர்சனம் தாங்க வேண்டும். ஆதரவாகப் பேசும் அனைவரையுமே நண்பர்கள் என்று நாம் தவறாய்
எண்ணிவிடக் கூடாது என்பதும் உண்மையே. நிச்சயமாக அவர்களில் நல்ல நண்பர்களும் இருக்கத்
தான் செய்வார்கள். ஆனால் அவர்களில் பலர் நாம் வகிக்கும் பதவி மற்றும் பணத்திற்காக
மட்டுமே இருந்தார்கள் என்று சொன்னால்
நிச்சயமாக அவர்களை நண்பர்கள் என்ற வட்டத்திற்குள் நாம் கொண்டு செல்லக் கூடாது. அப்படி
தவறு செய்யவும் கூடாது. அவர்கள் எதிரிகளை விட மோசமானவர்கள்தான் மாறாக துரோகிகள்
என்று அழைக்கப்பட வேண்டும். அவர்களின் பேச்சை நாம் கேட்கத் தேவையில்லை ஏன் அருகில்
கூட வைத்தல் கூடாது.
மேலும் ரத்தம் வருகிறது என்று சொன்னால்
காலில் குத்திய முள் வெளியேறிவிட்டது என்று சொல்வார்கள் கிராமங்களில் உள்ள மனிதர்கள்.
உண்மைதான் அதுபோலவே நமது கருத்து
உடைகிறது என்று சொன்னால் அந்தக் கருத்தில்
ஏதோ ஒரு தவறு இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் மாறாக அந்த தவறுகளை
திருத்திக் கொண்டு நாம் மீண்டும் சொல்லும் போது நிச்சயமாக அந்த சொல்லுக்கு
மிகப்பெரிய வலிமை இருக்கும். இந்த உலகையே மாற்ற உதவும் வல்லமை மிக்க சொல்லாக
கருதப்படும். அனைவரும் அந்தச் சொல்லையே ஈர்ப்பார்கள் இன்னும் கூடுதல் புரிதலுக்கு
சொல்ல வேண்டுமாயின் நம்முடைய பகைவர்களையும் நேசிக்க வைக்கும் சக்தியை கொடுக்கும்.
வெல்லும் சொல்லைச் சொல்வோம்.
இதுபோன்ற பல பயனுள்ள தன்னம்பிக்கை தகவல்களுடன் நமது ஆன்மீக பயணம் தொடரும்!
இறைபணியில்
அன்புடன்....
༺🌷༻தமிழர் நலம்༺🌷༻
💥நன்றி!
கற்போம் கற்பிப்போம்!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
🌷🌷முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...
இந்த நாள் இனிய நாளாகட்டும்...
வாழ்க 🙌 வளமுடன்
அன்பே🔥இல்லறம்
🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
💦💦💦💦💦💦💦💦💦💦💦💦
ஊக்கம் : வாழும்போதே இறப்பதற்குப் பழகு - மாற்றுக் கருத்தின் மகத்துவம் [ ஊக்கம் ] | Encouragement : Get used to dying while living - The greatness of the alternative concept in Tamil [ Encouragement ]