இஞ்சி பூண்டு தேன் சாறு

தேவையான பொருட்கள், செய்முறை

[ சமையல் குறிப்புகள் ]

Ginger Garlic Honey Juice - Ingredients, recipe in Tamil

இஞ்சி பூண்டு தேன் சாறு | Ginger Garlic Honey Juice

இந்த ஆரோக்கியமான இஞ்சி பூண்டு பானத்தை வாரம் ஒரு முறை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் பித்தம், கொழுப்பு அளவு மற்றும் இரத்த அழுத்தம் குறையும்.

இஞ்சி பூண்டு தேன் சாறு

 

தேவையான பொருட்கள்

 

இஞ்சி - 100 கிராம்

பூண்டு - 10 பல்

கொத்தமல்லி விதை (தனியா) - 2 டேபிள் ஸ்பூன்

தேன் - 1/4 கப்

 

செய்முறை

 

1. இஞ்சியை நன்றாக தோலை நீக்கிவிட்டு கழுவிக் கொள்ளவும். பின்  சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோலுரித்துக் கொள்ளவும்.

 

2. ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி விதை (தனியா), நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

 

3. அரைத்த கலவையை  வடிகட்டியைப் பயன்படுத்தி சாறு எடுத்துக் கொள்ளவும். அரைத்த சாறை  அப்படியே அசையாமல் 20 நிமிடங்கள் வைத்திருக்கவும்.

 

4. பின்பு மேலே தெளிந்துள்ள நீரை மட்டும் பொறுமையாக மாற்றிக் கொள்ளவும். இந்த சாறுடன் தேன் கலந்து பருகவும். கீழே படிந்துள்ள வெள்ளை நிறத்தில் கசடை நீக்கி விடவும்.

 

இந்த ஆரோக்கியமான இஞ்சி பூண்டு பானத்தை வாரம் ஒரு முறை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் பித்தம், கொழுப்பு அளவு மற்றும் இரத்த அழுத்தம் குறையும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

சமையல் குறிப்புகள் : இஞ்சி பூண்டு தேன் சாறு - தேவையான பொருட்கள், செய்முறை [ ] | cooking recipes : Ginger Garlic Honey Juice - Ingredients, recipe in Tamil [ ]