பைரவர் தன்னை வழிபடும் அடியவர்களின் பயத்தைப் போக்குவார்.
பைரவர் மகிமை : பைரவர் தன்னை வழிபடும் அடியவர்களின் பயத்தைப் போக்குவார். தன்னை வழிபடும் அடியார்களுக்கு துன்பம் கொடுக்கும் எதிரிகளுக்கு பயத்தை அளிப்பது (கொடுப்பார்) என்பது இவரின் செயலாகும். சிவாலயங்களில் காலையில் வழிபாடு துவங்கும் முன்னரும் இரவில் அர்த்த ஜாம வழிபாடு நிறைவு பெற்ற பின்னரும் திருக்கோயிலின் அனைத்து சன்னதிகளையும் பூட்டி அந்த சாவிகளை பைரவரின் திருவடியில் சமர்ப்பித்து கோயிலை பூட்டுவது மரபு. சிவ ஆலயத்தின் காவலராக இருந்து ஆலயத்திற்கு எந்தவித இடையூறுகளோ. இழப்புகளோ ஏற்படாமல் பாதுகாக்கின்றதால் இவருக்கு ஷேத்திரபாலகர் என்றும் ஒரு பெயர் வழங்கப்பெறுகிறது. சூரியனின் மகனான சனீஸ்வரன் தனது சகோதரன் எமதர்மனால் அலட்சியப்படுத்தப்பட்டு கௌரவக் குறைவு அடைந்து அவமானம் அடைந்த போது சனிபகவானின் தாயார் சாயாதேவியின் அறிவுரைப்படி காசியில் கால பைரவரை வழிபட்டு அவர் திருவருளால் நவக்கிரகங்களில் ஒருவராக கிரகப் பதவி அடையப் பெற்று, ஈஸ்வர பட்டமும் பெற்றார். ஆகையால் சனீஸ்வரருக்கு குருவாகவும் அதிதெய்வமாகவும் விளங்குபவர் பைரவர். ணா பிஸ்தித பைரவர். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்சனீஸ்வரரின் குருவான பைரவர் :
ஆன்மீக குறிப்புகள்: பைரவர் : பைரவர் மகிமை - சனீஸ்வரரின் குருவான பைரவர் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Bhairava : Glory to Bhairava - Bhairava, Guru of Shaniswar in Tamil [ spirituality ]