மருத்துவக் கடவுள்!

பெருமாள்

[ பெருமாள் ]

God of Medicine! - Perumal in Tamil

மருத்துவக் கடவுள்! | God of Medicine!

தன்வந்திரி பகவான் மருத்துவக் கடவுள் என்றழைக்கப் படுகிறார்.

மருத்துவக் கடவுள்!

 

தன்வந்திரி பகவான் மருத்துவக் கடவுள் என்றழைக்கப் படுகிறார். இவருக்கு வேலூர் மாவட்டம் வாலஜா பேட்டையில் தனிக்கோயில் அமைந்துள்ளது.

 

இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில், முப்பது ஆயிரம் சதுர அடியில் இக்கோயிலைக் கட்டியிருக்கிறார்கள்!.

 

கர்ப்பக் கிரகத்தின் அடியில் பக்தர்கள் எழுதிய 50 கோடி மந்திரங்கள் எழுதிய நோட்டுக்களே இயந்திரமாக வைக்கப்பட்டுள்ளது. தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்தபோது, அமிர்த கலசம், மூலிகையான சீந்தில் கொடியுடன் மஹா விஷ்ணுவின் அவதாரமாகத் தோன்றியவர்தான் தன்வந்திரி. மக்களின் நோய் தீர்க்கும் முதல் மருத்துவர் இவர். ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் பிணியைப் போக்கியவர் என்பதால் 'வைத்தியநாதர்' என்றும் அழைக்கப்படுகிறார்!.

 

வாலஜா பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பகவானின் மூலவர் சிலை மாமல்லபுரம் சிற்பக் கூடத்தில் வடிவமைக்கப்பட்டது. இது ஏழு அடி உயரத்தில் திருமகள் மார்பில் வீற்றிருக்க, அமிர்த கலசம், சீந்தில் கொடி, அட்டைப் பூச்சியுடன் அற்புதமாகக் காட்சியளிக்கிறது. தன்வந்திரி கடவுளுக்கு என்று தனிச் சன்னிதி வேலூர் மாவட்டம் வாலஜாபேட்டையில் மட்டுமே இருக்கிறது. எந்தவிதமான நோய்நொடி உள்ளவர்களும் இங்கு சென்றால் குணமடையலாம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

பெருமாள் : மருத்துவக் கடவுள்! - பெருமாள் [ பெருமாள் ] | Perumal : God of Medicine! - Perumal in Tamil [ Perumal ]