தெய்வம் நின்று கொல்லும் !!?? எப்படி?

வேண்டுவதை பெறுவது எப்படி ?? வேண்டாதவை தர்விப்பதும் எப்படி ??

[ ஆன்மீக குறிப்புகள் ]

God stop and kill !!?? How? - How to get what you want?? How to get rid of unwanted things?? in Tamil

தெய்வம் நின்று கொல்லும் !!?? எப்படி? | God stop and kill !!?? How?

அப்படி என்றால் எல்லாம் கொல்லப்பட இருப்பவை தானே ?? வயோதிகம் கொல்கிறது !! நோய் கொல்கிறது !!

தெய்வம் நின்று கொல்லும் !!?? எப்படி?

அப்படி என்றால்

எல்லாம் கொல்லப்பட இருப்பவை தானே ??

 

வயோதிகம் கொல்கிறது !!

நோய் கொல்கிறது !!

விபத்து கொல்கிறது !! என்று எப்படியும் கொல்ல இருப்பவை தானே உலாவிக்கொண்டு இருக்கின்றது !!

இதில் தெய்வம் நின்று கொல்லும் என்பதின் அர்த்தம் என்ன ??

 

மறுபிறவி என்று ஒன்று இருக்கிறது !!

புல்லில் தொடங்கி இப்போது இப்படிவரை வந்து தானே இருக்கின்றது !!

அப்போது

தெய்வம் கொன்று இருந்தால் நாம் எப்படி அடுத்தநிலையாய் பிறக்கவும் முடியும் ??

இந்த பிறவியிலேயே நம் யோக்கியதை நமக்கு தெரியும் தானே ..

அப்போது சென்று பிறவியில் மட்டும் என்ன பெரிய உத்தமபுத்திரனாகவா வாழ்ந்து இருக்க போறோம் ??

அப்படி தெய்வம் கொன்று இருந்தால் ??

இப்போது இந்த சட்டை என்ற புது உடல் !! புது படிப்பு ?? உறவுகள் ?? எல்லாம் எப்படி பெற்றோம் ??

 

அப்போது தெய்வம் கொல்வது எதை ?? அது கண்டிப்பாக உயிரை இல்லை .. அதற்க்கு நாமே சாட்சி தானே ..

 

இங்கே தெய்வம் நின்று கொல்வது என்பது அகந்தையை மட்டுமே ..

நான் ?? எனது ?? என் மதிப்பு ?? என் குலம் ?? என் சொத்து ?? என் பதவி ?? என் அதிகாரம் ?? என்பதை தான் ..

 

அதுவும் நின்று கொல்லும் என்பது ??

நம் உடல் என்னும் கூடாய் !!

உயிர்ப்பு என்ற துடிப்பாய் !!

வந்தது !! போனது !! இருப்பது !! மாறுவது !! போன்ற அனைத்துமாய் ..

உள்நின்று இயக்கி !!

எதை ?? எந்த நேரத்தில் ?? எப்படி செயல்பட ?? வேண்டுமோ ..

அதை அப்படி !! அங்கே !! செயல்படுத்தி ..

 

எதுவும் உனது இல்லை என்று நம்முள்ளே நின்று உணர்த்தி தெளிவித்து அருளி ..

நான் ?? எனது ?? என்ற அகந்தகை கொன்று கொண்டே இருக்கின்றது ..

இதில் ஏதோ ஒன்று ?? இரண்டில் மட்டுமே !! தெளிவு கொள்ளும் ஆன்மா ..

மேலும் மேலும் தெளிவுறவே அதன் விருப்பத்தின் பெயரில் பிறவி எடுத்தவண்ணம் இருக்கின்றது ..

முழுவதும் தெளிய ..

 

உயிரை பரம அணுதான் .. அதாவது பரமனின்  அணுதான் என்று ஆனவன் நீங்கி !! அகந்தை அழிந்து !! நான் செத்து .. முத்தியில் சித்திக்கும் ..

 

தெய்வம் நின்று கொன்றுகொண்டே தானே இருக்கின்றது ..

அனுபவித்து கொண்டு இருப்பவர் ..

எதையோ சுட்டி காட்டி !!

தெய்வம் நின்று கொல்லும் என்று தான் ஏமாந்து !! பிறரை பயமுறுத்துவதாக நினைத்து கொள்கிறார்கள் அவ்வளவே ..

 

திருச்சிற்றம்பலம் 

வேண்டுவதை பெறுவது எப்படி ?? வேண்டாதவை தர்விப்பதும் எப்படி ??

எல்லாம் எண்ணத்தின் விளைவே !!

எண்ணியதை எண்ணியவாறே அருளும் அருளும் இறைக்கருனையால்..

 

வேண்டும் என்று அடிக்கடி நினைத்துகொள்ளுகள் !! சொல்லாய் சொல்லுங்கள் !!

இருந்தால் எப்படி அனுபவிப்போம் என்று சிந்தையாய் வாழுங்கள் !!

தினமும் காலை எழுந்தவுடன் !!

இரவு படுக்கும் முன்னும் !!

முடிந்த அளவுக்கு ஒவ்வொரு மணியிலும் ஓர் நிமிடமும் !! நினைக்க !! சொல்ல !! சிந்திக்க !!

வேண்டுவது வேண்டும்படியே வசப்படும் ..

 

அதேபோல

வேண்டாம் என்பதும் நடவாதிருக்க !!

நினைப்பில் !! சிந்தையில் !! சொல்லில் !! அதன் தொர்புடையவைகளை கொண்டு செல்லாது இருந்தாலே போதும் ...

 

ஆனால்

நாமோ இதற்க்கு மாறாக இருக்கிறோம் என்பது தான் உண்மையே ..

வேண்டாம் என்பதையே நினைத்து ?? வேண்டாம் என்பதையே ஊருக்கு எல்லாம் சொல்லி !!

வேண்டாம் என்பதும் வந்தால் அது உங்களை என்ன செய்யவேண்டும் என்பதை சிந்தையில் கொண்டு கற்பனையை யூகித்து வாழ்ந்து !! அதை நடக்க செய்துகொண்டு இருக்கிறோம் ..

 

அதையே

வேண்டும் என்பதில் நாம் அப்படி இருக்கு பட்சத்தில் அவையனைத்தும் நமக்கு சத்தியமாக சாத்தியம் ஆகுமே ..

 

படித்துவிட்டு கடப்பதும் !! கடைபிடிப்பதும் !! உங்களுக்கு இறைவன் அருளிய சுதந்திரமே ..

அதை பயன்படுத்தும் விதத்தில் தான் அனைத்துமே ..

 

எண்ணம் சொல் செயல் சிந்தை போன்ற அனைத்தும் ஒன்றின் மீதே இருக்க !!

உங்களை இருக்கவைத்த இறை ஈர்த்தருளுமே ..

 

ஓம் நமசிவாய


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : தெய்வம் நின்று கொல்லும் !!?? எப்படி? - வேண்டுவதை பெறுவது எப்படி ?? வேண்டாதவை தர்விப்பதும் எப்படி ?? [ ] | Spiritual Notes : God stop and kill !!?? How? - How to get what you want?? How to get rid of unwanted things?? in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்