சென்னை பல்லாவரம் ரயில் நிலையத்திலிருந்து, காந்தி நிலை நோக்கி உள்ள செந்தூர் நகரில், பன்னீர் செல்வம் தெருவில் அமைந்திருக்கிறது சக்தி தரும் கருமாரி அம்மன் ஆலயம்.
சக்தி தரும் கருமாரி அம்மன்!
சென்னை பல்லாவரம் ரயில் நிலையத்திலிருந்து, காந்தி நிலை நோக்கி உள்ள செந்தூர் நகரில், பன்னீர் செல்வம் தெருவில் அமைந்திருக்கிறது சக்தி தரும் கருமாரி அம்மன் ஆலயம்.
சகல நலன்களையும், சகலவிதமான தேவைகளையும், சகல லோகங்களுக்கும் சக்தி சொரூபமாக
வாரி வழங்குபவள் இந்த சக்தி கருமாரி.
இங்கே கோவில் கொண்டு அருள்மழை பொலியும்
கருமாரி அம்மன் எல்லாவிதமான பிணிகளையும், தீராத வினைகளையும் தீர்ப்பவளாக விளங்கி வருகின்றாள்.
மூன்று நிலை இராஜகோபுரத்தின் வழியாக
கோவிலுக்குள் நுழையும்போதே நம் மனதிற்குள் பக்திப் பரவசம் பொங்கி எழுகின்றது.
வலதுபுறம் ஸ்ரீசக்திகருமாரி அம்மனும், இடப்புறம் வலம்புரி விநாயகருக்கும், அம்மனுக்கும் இடையே பின்புறம் ஆஞ்சநேயர் வீற்றிருக்கிறார்.
இந்த மூவருக்கும் வலது பக்கத்தில் தத்ரூபமாக
ஓங்கி ஒய்யாரமாக அழகுடனும், ஒப்பில்லாத
சிரித்த முகத்துடன் நம்பினோரைக் காக்கும் நற்தெய்வமாக, இருமுடிப் பிரியனாக, நெய் அபிஷேகப் பிரியனாக, ஸ்ரீ சக்தி
ஐயப்பன் காணப்படுகிறார்!
கார்த்திகை மாதம் விரதம் இருக்கும்
இப்பகுதி ஐயப்ப பக்தர்கள், இந்த ஐயப்பனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இங்குள்ள சக்தி விநாயகருக்கு, விநாயக சதுர்த்தியிலும், மாத சதுர்த்தியிலும் சிறப்பு அலங்காரங்களும், சந்தனக் காப்பு அலங்காரங்களும் செய்யப்படுகின்றன.
சக்தி ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றியும், வடை மாலை அணிவித்தும் வழிபாடு செய்தால்
நினைத்தது நிறைவேறும் என்கிறார்கள்.
திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் தாமதமாகும். தம்பதியர்
இங்கு வந்து பக்தியுடன் வழிபட்டால் கைமேல் பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
நில மோசடி விவகாரம், ஏமாற்றிக் கையகப்படுத்திக் கொண்ட சொத்துகள்
பற்றிய நம்பிக்கை மோசடிகளையும் இங்கு வந்து இந்த அம்மனிடம் வேண்டிக் கொண்டு, தக்க பலன்களை அடைந்திருக்கிறார்கள்.
புதிதாக வீடு வாங்குவோரும் நில புலன்களைக் கிரயம் செய்வோரும் கூட இங்கு வந்து பிரார்த்தித்துச்
செல்கிறார்கள். தங்களது சொத்துகளில் எந்தவிதமான வில்லங்கமும் ஏற்படாத வகையில் அன்னையின்
அருள் பெறுகிறார்கள்.
கோயில் நடை அதிகாலை 5.30 மணி முதல் மதியம் 12 வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறக்கப்பட்டு இருக்கும்!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
அம்மன்: வரலாறு : சக்தி தரும் கருமாரி அம்மன்! - அம்மன் [ அம்மன் ] | Amman: History : Goddess Karumari gives power! - Amman in Tamil [ Amman ]