நீங்கள் எந்தக் குளத்திற்குச் சென்றாலும் தங்கத் தாமரையைப் பார்க்க முடியாது. ஆனால் மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றால் நிச்சயம் தங்கத் தாமரையைக் காணலாம்!
தங்கத் தாமரை!
நீங்கள் எந்தக் குளத்திற்குச் சென்றாலும்
தங்கத் தாமரையைப் பார்க்க முடியாது. ஆனால் மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயிலுக்குச்
சென்றால் நிச்சயம் தங்கத் தாமரையைக் காணலாம்!
இங்கு அமைந்துள்ள பொற்றாமரைக் குளத்தில்
ஒரு காலத்தில் தங்கத் தாமரைகள் பூத்ததாகவும் அதைக் கொண்டு இந்திரன் சுந்த ரேஸ்வரரை
பூஜித்ததாகவும் வரலாறு. அதை நினைவுபடுத்தும் வகையில் இப்போதும் தங்க முலாம் பூசப்பட்ட
தாமரையை குளத்தில் மிதக்க விட்டு இருக்கிறார்கள்!
இந்தக் குளத்தின் அகலம் 165 அடி; நீளம் 240 அடி. பரப்பளவு ஒரு ஏக்கர். மீனாட்சி
அம்மன் கோயில் கட்டுவதற்கு முன்பே இந்தக் குளம் அமைந்து இருந்தது!
சுந்தரேஸ்வரருக்கு கருவறை கட்டிய பாண்டியனின்
உருவம் இந்தக் குளத்தின் வடகரையில் உள்ள தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்தப்
படித்துறை 'பாண்டியன் படித்துறை’ என்று அழைக்கப்படுகிறது.
இந்தக் குளத்தில் தவளையும், மீனும் இருப்பது இல்லை. இக்குளத்தின்
தென் கிழக்கு மூலையில் இருந்தபடிச் சுவாமி மற்றும் அம்மன் சன்னிதிகளின் தங்கக் கோபுரங்களை
நாம் வழிபடலாம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
அம்மன்: வரலாறு : தங்கத் தாமரை! - பாண்டியன் படித்துறை [ அம்மன் ] | Amman: History : Golden lotus! - Pandyan Patiduara in Tamil [ Amman ]