இன்றைய வாழ்வில் நல்லதுக்கும் கெட்டதுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? நல்லது நடக்குது தள்ளாடி. கெட்டது போகுது முன்னாடி.
நல்லவை நாற்பது கேள்வி - பதில்
1. இன்றைய வாழ்வில் நல்லதுக்கும் கெட்டதுக்கும் உள்ள
வித்தியாசம் என்ன?
நல்லது நடக்குது தள்ளாடி. கெட்டது போகுது முன்னாடி.
2. யாருக்கு அறிவு வளர்ச்சி அதிகம்?
மனித இனத்தை தவிர எறும்பு முதல் யானை வரை உள்ள அனைத்து
உயிர்களுக்கும் அறிவு வளர்ச்சி அதிகம். அவைகள் இயற்கை கொடுத்த சமைக்காத உணவுகளை
மட்டும் சாப்பிட்டு வாழ்வதால் இயற்கை அறிவை இழக்காமல் இன்பமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்கிறது. மனித இனம் மட்டும் இயற்கையுடன் இணைந்து வாழவில்லை. இயற்கை உணவுகளும் உண்பதில்லை. அதனால்தான் இயற்கை அறிவை இழந்து நிம்மதியில்லாமல் பலவகையான துன்பங்களை
அனுபவித்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.
3. இயற்கைக்கு மரியாதை கொடுப்பது யார்?
மனித இனத்தைத் தவிர மற்ற எல்லா உயிர்களும் தங்களை வாழவைக்கும் இயற்கைக்கு நன்றி மறவாமல் மரியாதை கொடுக்கிறது.
4. மழை வளத்தை குறையச் செய்தது யார்?
எண்ண முடியாத அளவுக்கு பாவங்கள் செய்து வாழும் மனித இனம் தான். இதை யாரும் மறுக்க முடியாது.
5. கவலை இல்லாமல் வாழ்வது யார்?
மனித இனத்தை தவிர மற்ற எல்லா உயிர்களும் கவலை இல்லாமல் வாழ்கின்றன.
6. நாம் யாருக்கு பயந்து வாழ வேண்டும்?
மனிதன் மனிதனுக்கு மட்டும் தான் பயந்து வாழ வேண்டும். மற்ற எந்த ஜீவராசிகளுக்கும்
நாம் பயந்து வாழ வேண்டியதில்லை. அவைகள் நமக்கும், மற்ற உயிர்களுக்கும், இயற்கைக்கும் எந்த வகையிலும் தீங்கு செய்யாது. இதுவே இயற்கை ரீதியான
உண்மை.
7. மழை-பனி-வெயில்-ஓசோன் காற்று போன்ற இயற்கை இன்பங்களை அனுபவிப்பது யார் ?
மனித இனத்தை தவிர மற்ற எல்லா உயிர்களும் இயற்கை இன்பங்கள் அனைத்தையும் முழுமையாக அனுபவித்து வாழ்கின்றன.
8. எறும்புகள், காகங்கள், சிட்டுக்குருவிகள், அணில்கள் இவைகள் மட்டும் ஏன் மனிதர்கள் வாழும் பகுதிகளில்
மட்டும் வாழ்கின்றன?
புத்திகெட்ட மனிதர்களுக்கு அறிவு புகட்டத்தான். ஒற்றுமையையும், சுறுசுறுப்பையும் உங்களின் இரு கண்களாக பாதுகாத்து வாழுங்கள் இந்த இரண்டு கண்களையும் பாதுகாக்காவிட்டால் நீங்கள் குருட்டு வாழ்க்கை தான்
வாழ வேண்டும் என்று தினமும் மனிதர்களுக்கு அறிவுப்பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
9. உலகில் எத்தனை கடவுள்கள் இருக்கிறார்கள்? எத்தனை ஜாதிகள் இருக்கின்றன?
உலகிற்கு ஒரே கடவுள் இயற்கை. இயற்கை படைத்த ஒரே ஜாதி மனித ஜாதி. பல ஜாதிகளையும் உருவாக்கியது மனிதர்கள் தான்.
10. கடவுளை எத்தனை வடிவங்களில் காணலாம்?
ஆகாயம் – பூமி – மழை – சூரியன் – காற்று – ஆறு – கடல் – நதி – மலை –
மரம் - செடி – கொடி – காய் – கனி - உணவு இன்னும் பல வடிவங்களில் கடவுளை காணலாம். அன்பு,
பாசம், பண்பு, பணிவு, கருணை, நன்றி, உழைப்பு இவைகளிலும் கடவுளை காணலாம்.
11. எங்கும் நிறைந்திருக்கும்
கடவுள் யார்?
இயற்கை தான். இயற்கையின் எல்லா சக்திகளையும் வணங்குங்கள். நலமாக
வாழ்வீர்கள்.
12. யாரை அறிவாளியாக ஏற்றுக்
கொள்ள வேண்டும்?
நம்மை வாழ வைக்கும் இயற்கை சக்திகளை வணங்குபவர்களை மட்டும்.
13. இயற்கையை அழிக்கும் இனம்
எது?
மனித இனம் தான் இயற்கையை அழிக்கிறது.
14. இயற்கையை மாசுபடுத்துவது
யார்?
மனித இனம் மட்டும் தான் இயற்கையை மாசுபடுத்துகிறது.
15. கடல் உப்பு சாப்பிடும் இனம்
எது?
மனித இனம் மட்டும் தான்.
16. சமைத்து உண்ணும் இனம் எது?
அறிவில் குறைந்த மனித இனம் மட்டும் தான்.
அன்பு, நன்றி, கருணை, பாசம், இரக்கம், தாய்மை உள்ளவர்கள் யார்?
அதுதான் இயற்கை.
17. மனிதர்களால் இயற்கையை வெல்ல
முடியுமா?
இயற்கையை வெல்ல நினைத்தால் அழிந்து போவார்கள். சூரியனை நெருங்கமுடியுமா?
18. எவைகளை பாச உணர்வுடன் வளர்க்க
வேண்டும்?
மரம்-செடி-கொடிகள் இவைகளை பாச உணர்வுடன் வளர்க்க வேண்டும். அவைகள் தான்
நாம் உயிர் வாழ உணவு தருபவைகள்,
செய்நன்றி மறவாதீர்கள்.
19. எவைகளை பாதுகாக்க வேண்டும்?
இயற்கை செல்வங்கள் அனைத்தையும் பாதுகாக்க வேண்டும். உடனே தயாராகுங்கள்.
20. இயற்கை உணவுகளைப்
பற்றி சொல்லுங்கள்?
இயற்கை உணவைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். இயற்கை உணவுகள் உண்பவர்கள்
கடவுள் தான். சமைக்காமல் உண்ணும் மற்ற உயிர்கள் அனைத்தும் கடவுள் தான். இயற்கை உணவு
உண்ணுங்கள். கடவுளாக வாழுங்கள்.
21. நல்ல ரத்தம் எந்த உணவில்
உற்பத்தியாகும்?
இயற்கை உணவில் மட்டும் தான் சுத்தமான ஆரோக்கியமான ரத்தம் உற்பத்தியாகும்.
சைவ உணவில் ஆரோக்கியம் குறைந்த ரத்தமும், மாட்டுப்பால் மாமிச உணவுகளில் துர்நாற்றமுடைய
கெட்ட ரத்தமும் உற்பத்தியாகும்.
22. உடல் ஆரோக்கியத்திற்கு தேவையானது
சூடான உணவா? குளிர்ச்சியான உணவா?
குளிர்ச்சியான உணவுகளான கஞ்சியையும், சில இயற்கை உணவுகளையும்
நம் முன்னோர்கள் சாப்பிட்டதால் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். சமையல் உணவாக இருந்தாலும்
லேசான வெதுவெதுப்புடன் சாப்பிடுங்கள். சூடாக சாப்பிடக்கூடாது. அதிக உஷ்ணம் ஆபத்து..
சிறுவிளக்கம்: சூடான உணவுகளை நீங்கள் சாப்பிடும் போது உடல் முழுவதும் வியர்க்கும்.
மின் விசிறி சுற்றினால் தான் சாப்பிடமுடியும். குளிர்ச்சியான கஞ்சி குடித்துப் பாருங்கள்.
உடல் வியர்க்காது. மின்விசிறி தேவை இல்லை. இயற்கை உணவும் அப்படியே.
23. எந்த உணவில் துர்நாற்றம்
அதிகம்?
சிறு விளக்கம்: இருபது கிலோ அழுகிய காய்களை ஒரு காலி இடத்தில் கொட்டி வைப்போம். வேறொரு
இடத்தில் பத்து கிலோ எடையுள்ள ஒரு செத்துப்போன விலங்கை போட்டு வைப்போம். நான்கு நாட்கள்
சென்ற பின் அழுகிய காய்கள் கொட்டிக்கிடக்கும் இடத்திற்கு சென்று காய்களின் அருகில்
போய் நின்று குனிந்து முகர்ந்து பார்த்தால் தான் லேசான கெட்டவாடை வரும். விலங்கு செத்துகிடக்கும்
இடத்திலிருந்து காற்று அடித்தால் அந்த பகுதி முழுவதும் அதிக தூரத்திற்கு கெட்ட வாடையை
அள்ளி எரியும். அந்த காற்றை நாம் சுவாசித்தால் நாற்றம் நம் குடலையே புரட்டும். இதிலிருந்து
எந்த உணவில் நற்றம் அதிகம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
24. மரணம் வரை நோயில்லாமல் வாழ
எந்த உணவுகளை அதிகம் உண்ண வேண்டும்?
இயற்கை உணவுகளை அதிகம் உண்ண வேண்டும்.
25. நோயாளியாக வாழும் உயிரினம்
எது?
தின்னக்கூடாததை எல்லாம் தின்று விட்டு மனித இனம் மட்டும் தான் நோயாளியாக
வாழ்கிறது.
26. நோயாளியால் என்ன பயன்?
ஒரு பயனும் இல்லை. அவன் பூமிக்கு பாரம் தான்.
27. நோயில்லாமல் வாழ என்ன வழி?
பூமியில் விளையும் நலம் தரும் உணவுகளை மட்டும் உண்ண வேண்டும்.
28. மாமிசத்தையும், மாட்டுப்பாலையும் யார் உண்பார்கள்?
மனிதத் தன்மையை இழந்தவர்கள் மட்டும் உண்பார்கள்.
29. பூமியில் விளையும் உணவுகளில்
முதன்மையானது எது?
தேங்காய் தான் சிறந்த உணவு, தேங்காயை விட உயர்ந்த உணவு பூமியில்
வேறு எதுவுமே இல்லை.
30. இன்றைய தாய்மார்களின் தாய்ப்பால்
சிறந்ததா?
முன்காலத்து தாய்மார்களின் தாய்ப்பால் மிகமிக உயர்ந்ததாக இருந்தது.
இன்று தீய உணவுகளை தின்னும் தாயின் பால் குழந்தைகளுக்கு நோய்களைத் தான் உருவாக்குகிறது.
தாய்ப்பாலை விட இயற்கைத் தாயின் தேங்காய்பால் நான் மிக உயர்ந்தது.
31. குளிர்ந்த தண்ணீர் குடிக்க
வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?
வீட்டுக்கு ஒரு மண்பானை இருக்க வேண்டும்.
32. குடும்பத்திலுள்ளவர்களின்
ஆரோக்கியத்திற்கு எவைகள் தேவை?
அம்மி -உரல்-உலக்கை-தேங்காய் துருவி - தேங்காயை கீரி எடுக்கும் கத்தி - காய்கள் நறுக்குவதற்கு சில்வர் அறிவாள் மணை - சில்வர்கத்தி - சில்வர்
கத்திரி - சமையலுக்கு மண்பாண்டங்கள் அல்லது சில்வர் பாத்திரங்கள் - முக்கியமாக குடும்பத் தலைவியின் சுறுசுறுப்பும் அறிவுக் கூர்மையும்
இருந்தால் அக்குடும்பத்திலுள்ளவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.
33. இன்று நோயாளிகளை உருவாக்குவது
யார்?
பெண்கள் தான். சமையல் என்ற பெயரில் உணவுகளை சமைத்து குடும்பத்திலுள்ள அனைவரையும் நோயாளியாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
34. இன்றைய பெண்கள் செய்வது சமையல் கலையா?
அன்றைய பெண்கள் செய்தது சமையல் கலை. இன்றைய பெண்கள்
செய்வது சமையல் கொலை. குறிப்பு: அப்படி செய்பவர்கள் மட்டும்.
35. நோயாளிகள் துன்பத்தில் பள்ளத்தில் கிடக்கிறார்களே இவர்களால் எழ முடியாதா?
இயற்கை மருத்துவத்தை நாடிவிட்டால் துன்பம் என்னும் பள்ளத்தில் இருந்து
எழுந்து இன்பம் என்னும் சிகரத்தின் உச்சிக்கே சென்றுவிடலாம்.
36. தேங்காயை பற்றி சொல்லுங்கள்?
அரை விளைச்சல் அல்லது முக்காவிளைச்சல் உள்ள தேங்காயை சிறியவர்கள் முதல்
முதியவர்கள் வரை எல்லோரும் தினமும் சாப்பிட வேண்டும். ஒரு தேங்காய் முதல் இரண்டு தேங்காய்
வரை சாப்பிட வேண்டும். இதன் பயன்கள் மரணம் வரை நோய்கள் வராது. முதுமை தள்ளிப்போடப்படும்
என்றும் இளமையாக வாழலாம். உடலில் உயிர் இருக்கும் வரை உழைத்து வாழலாம். அறிவுக்கூர்மை
பலமடங்கு இருக்கும். உடல் பார்ப்பதற்கு மினுமினுப்புடன் அழகாக இருக்கும்.
37. ஒரு மனிதன் கொடூர எண்ணங்கள்
கொண்டவனாக மாறி விட்டால் மரணம் வரை அவன் அப்படியே வாழ்கிறானே ஏன்?
அதற்கு காரணம் அவன் உண்ணும் தீய உணவுகள் தான். தீய உணவுகளை உண்பதால்
நல்ல ரத்தம் கெட்ட ரத்தமாக மாறுகிறது. கெட்ட ரத்தம் மனிதத் தன்மையை இழக்க வைக்கும்.
கெட்ட ரத்தத்தை நல்ல ரத்தமாக்க வேண்டுமானால் சைவ உணவுகளையும், இயற்கை உணவுகளையும் உண்ண வேண்டும். இயற்கை உணவுகள் தான் அதிகம் உண்ண
வேண்டும். இது தான் சிறந்த வழி வேறு வழி இல்லை.
38. உடல் பயிற்சிகளில் சிறந்தது எது?
மனித உடலின் உள்ளுறுப்புகள் அனைத்தையும் பாதுகாத்து என்றும் இளமையாக
வாழ வைப்பது யோகாசனம் தான். அவரே ஆரோக்கியத்தின் குரு.
39. நாவின் சுவைக்கு அடிமையானால்
என்ன கிடைக்கும்?
நோய்கள் என்னும் பல பரிசுகள் கிடைக்கும்.
40. நரகத்தை எங்கே காணலாம்?
நோயாளியாகி விட்டால் நீ பூமியில் வாழும் போதே நரகத்தை காணலாம். மரணத்திற்குப்பின்
பிறப்பு இல்லை. பிறவி ஒன்றுதான். மரணம் ஒருமுறை தான்.
சித்தா மருத்துவம் : நல்லவை நாற்பது கேள்வி - பதில் - சித்தா மருத்துவம் [ ஆரோக்கியம் ] | Siddha medicine : Good Forty Questions - Answers - Siddha medicine in Tamil [ Health ]