ஓர் ஊரில் ஒரு பெரியவர் இருந்தார். அவர் மிகவும் நல்லவர். அந்த ஊர் மக்களால் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார். எல்லோருக்கும் நல்லதையே செய்வார்.
நல்ல பாடம்
ஓர் ஊரில் ஒரு பெரியவர் இருந்தார்.
அவர் மிகவும் நல்லவர்.
அந்த ஊர் மக்களால் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார்.
எல்லோருக்கும் நல்லதையே செய்வார்.
எல்லோருக்கும் நல்லதே நடக்க வேண்டும் என்று நினைப்பார்.
நல்லதையே பேசுவார்.
பொய் சொல்வது அவருக்குப் பிடிக்காது.
களவெடுக்கக் கூடாது என்று புத்தி சொல்லுவார்.
களவெடுப்பவர்களுக்கு அந்த ஊரில் கடுந்தண்டனை வழங்கப் பட்டது. ஊர்த்
தலைவராக இருந்த அந்தப் பெரியவர் வழங்கும் கடுமையான தண்டனைக்குப் பயந்து யாரும்
களவெடுப்பதில்லை.
அந்தப் பெரியவர் ஒரு அழகான குதிரை வைத்திருந்தார்.
அந்தக் குதிரையில் தான் அவர் எல்லா இடங்களுக்கும் செல்வார்.
ஒருநாள் அவர் தனது குதிரையில் ஏறிக்கொண்டு ஒரு கடைத் தெருவிற்குச்
சென்றார்.
கடைக்குப் பக்கத்தில் ஒரு மரத்தின்கீழ் குதிரையை நிறுத்திவிட்டு
கடைக்குச் சென்றார்.
கடையிலே பொருட்களை வாங்கிக் கொண்டு நின்ற போது ஓர் இளைஞன் அந்தக்
குதிரையையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்றான்.
அவனுக்கு அந்தக் குதிரையின் மேல் ஆசை வந்துவிட்டது.
திடீரெனக் குதிரையில் ஏறிக்கொண்டு ஓடத் தொடங்கினான்.
அவன் குதிரையைக் களவெடுத்துக் கொண்டு போவதைக் கண்டவர்கள்.
**கள்வன்! கள்வன்!..." என்று சத்தமிட்டார்கள்.
அந்தப் பெரியவர் திரும்பிப் பார்த்தார்.
தனது குதிரையை ஒரு இளைஞன் கொண்டு போவதைக் கண்டார். பக்கத்திலே
நின்ற ஒருவரிடம் கேட்டு அவருடைய குதிரையைப் பெற்றுக் கொண்டு துரத்திச் சென்றார்.
குதிரைச் சொந்தக்காரரான பெரியவர் தன்னைத் துரத்திக் கொண்டு வருவதைக்
கண்ட அந்த இளைஞன் மிகவும் பயந்தான்.
அவனால் வேகமாகக் குதிரையைச் செலுத்திக் கொண்டு தப்பிச் செல்ல
முடியவில்லை.
குதிரை அவனைக் கீழே விழுத்தி விட்டது.
பெரியவர் விரைவாக வந்து சேர்ந்தார்.
அவர் திருடர்களுக்கு வழங்கி வந்த தண்டனையைப் பற்றி அவன்
அறிந்திருந்ததால் மிகவும் பயந்தான்.
''குதிரையைத் தந்துவிடுகிறேன். என்னை மன்னித்துக்
கொள்ளுங்கள்" என்று கெஞ்சினான்.
கதறி அழுதான்.
நடுக்கத்தோடும் அச்சத்தோடும் நின்ற அந்த இளைஞனைப் பார்த்து
"நான் உன்னைத் துரத்திக் கொண்டு வந்தது, உன்னைப் பிடித்து, உனக்குத் தண்டனை தருவதற்கல்ல” என்றார்.
அவன் ஆச்சரியத்தோடு அவரது முகத்தைப் பார்த்தான்.
"நீ விரும்பிய இந்தக் குதிரையை நானே உனக்கு
அன்பளிப்பாகத் தந்து விடுகிறேன்'' என்றார்.
அவன் பிரமித்துப் போனான்.
''கள்வன் என்ற பெயரோடு நீ எப்படி நிம்மதியாக
வாழ்வாய். ஊர் உலகம் உன்னைப் பழிக்கும் அல்லவா. உன் மனச்சாட்சியே உன்னைக் கொல்லும்
அல்லவா..."
அவன் குனிந்த தலை நிமிராமல் மௌனமாகக் கேட்டுக் கொண்டு நின்றான்.
"அதனால் யாராவது கேட்டால் நான் அன்பளிப்பாக
இந்தக் குதிரையைத் தந்ததாகச் சொல். இதற்காகத்தான் நான் உன்னைத் துரத்திக் கொண்டு
வந்தேன்' என்றார்.
அவன் அவரது காலடியில் விழுந்து கண்ணீர் சிந்தினான்.
"இல்லை... நான் கஷ்டப்பட்டு உழைத்துச்
சம்பாதித்து ஒரு குதிரை வாங்கிக் கொள்கிறேன். நான் இனிக் களவெடுக்கவும் மாட்டேன்.
இனாமாகப் பெறவும் மாட்டேன்" என்றுஅவருக்கு அவன் சத்தியஞ் செய்து கொடுத்தான்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
சிந்தனை சிறு கதைகள் : நல்ல பாடம் - குறிப்புகள் [ ] | Thought short stories : Good lesson - Tips in Tamil [ ]