அதிர்ஷ்டம் கொட்டும் 'குபேர வழிபாடு

குபேரன் - ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: குபேரன் ]

Good luck 'Kubera worship' - Kuberan - Spiritual notes in Tamil

அதிர்ஷ்டம் கொட்டும் 'குபேர வழிபாடு | Good luck 'Kubera worship'

குபேரன் என்றதும் செல்வத்தால் உயர்ந்தவன் என்ற நினைவு தான் நமக்கு வரும்.

அதிர்ஷ்டம் கொட்டும் 'குபேர வழிபாடு


குபேரன் என்றதும் செல்வத்தால் உயர்ந்தவன் என்ற நினைவு தான் நமக்கு வரும். நிறைய செல்வங்கள் பெற்று ஒருவன் வாழ்ந்தால் அவனை குபேரனாக வாழ்கின்றான் என்று கூறுகிறோம்.


குபேரன் செல்வத்திற்கு அதிபதி. பணம் படைத்த தெய்வமான திருப்பதி ஏழுமலையானுக்கே திருமணத்திற்கு கடன் கொடுத்தவன் குபேரன். நாம் திருப்பதி உண்டியலில் செலுத்தும் பணம், நகை அனைத்தும் ஏழுமலையான் குபேரனுக்கு வட்டி கட்டுவதற்கு செலுத்துவதாக ஐதீகம். மஹாலட்சுமியை மார்பிலே வைத்திருக்கின்ற மாதவனுக்கே கடன் கொடுத்தவன் என்றால் குபேரனுடைய பெருமைகளைச் சொல்லவா வேண்டும்!


மகாலட்சுமியின் அருட்கடாட்சத்தை பெற்றவர்கள் இருவர். அவர்களில் ஒருவர் குபேரன். மற்றொருவர் தேவதச்சன். பணம் படைக்க, ஆடை ஆபரணங்கள் தேவையான அனைத்தையும் பெற குபேரனுடைய தயவும் நாடு நகரங்கள் அமைக்க ஏரி, குளம், ஆறு, கடல் முதலியவற்றை நிர்மாணிக்க தேவதச்சனும் உலக மக்களுக்கு உதவட்டும் என தன்னுடைய அருட்கடாட்சத்தை வழங்கினார் மகாலட்சுமி.


குபேரன் இராவணனின் சகோதரன். அதாவது குபேரனின் தந்தையும் இராவணனின் தந்தையும் ஒருவரே! குபேரனின் விமானம் எங்கு பறந்தாலும், அவ்விமானம், தங்கம், வெள்ளி, பொன், முத்து இவைகளை சிந்திக் கொண்டே செல்லும்.


ரிக் வேதத்தில் குபேரனே தன தேவதையாக வருணிக்கப்படுகிறார்.


குபேரன் சாதாரணமான நிலையில் சிவந்த குள்ள உருவத்துடன் விகாரமான தோற்றத்தில் நான்கு கோரப் பற்களையும் மூன்று கால்களுடன் சாதுவாக இருப்பார்.


குபேரன் இன்னொரு சமயத்தில் தாமரை மலர் மீது மீனாசனத்தில் மெத்தை மீது வலது காலை மடக்க வைத்துக் கொண்டு இடது காலை தொங்க விட்டுக் கொண்டு இடது கையில் சங்கநிதி, பதும நிதி அடங்கிய ஒரே கலசத்தை அணைத்துக் கொண்டு வலது கையை வலது தொடையின் மீது வைத்துக் கொண்டு சிரித்த முகத்தோடு காட்சியளிக்கிறான்.


மானிட வர்க்கத்தால் தாங்கப்படுகின்ற சிறந்த ஒள் வீசிய விமானத்தில் அமர்ந்திருப்பவர். மரகதம் போன்ற ஒளியை உடையவர். நவநிதிகளின் தலைவர், சிவபெருமானின் தோழர். சிறந்த சக்தி மிகுந்த கதாயுதத்தை கையில் ஏந்திக் கொண்டிருப்பவர். பொன்முடி முதலிய ஆபரணங்களை அணிந்துவரும் தொந்தியையுடையவர். உற்ற அழகிய உருவங்கொண்ட குபேரன் உருவம் விகாரமாக மாறுவதற்கு பார்வதியை மோகங் கொண்டதால், பார்வதி சபித்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.


வெள்ளை நிறம், பெரிய வயிறு,தெற்றுப்பல் என விகாரத் தோற்றத்துடன் உள்ளவன் தான் குபேரன் என புராணங்கள் தெரிவிக்கின்றன.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: குபேரன் : அதிர்ஷ்டம் கொட்டும் 'குபேர வழிபாடு - குபேரன் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual notes: Kuberan : Good luck 'Kubera worship' - Kuberan - Spiritual notes in Tamil [ spirituality ]