ஒருவன் காலையில் தூங்கி எழுந்தான்... இரவு தூங்க வெகுநேரம் ஆனதால் காலை எழுந்துக்கொள்ள நேரமாகிவிட்டது... சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தில் 9 ஆகிவிட்டதை காட்டும் விதமாக 9 மணிஅடித்து ஓய்ந்தது.... குளித்து முடித்து... காலண்டரில் தேதியை கிழித்தான்... 8-ம் தேதி போய்.. இன்று தேதி 9 எனக்காட்டியது... வங்கிக்கு சென்றுவரலாம் என்று வங்கிக்கு செல்ல ஆட்டோ பிடித்தார்... அதில் ஆட்டோ எண் 9 என வட்டம் போட்டு எழுதியிருந்தது... வங்கியில் இறங்கி வங்கியில் நுழையும்போதுதான் கவனித்தான் வங்கியின் கதவு எண் 99 என இருந்தது.. வங்கியின் உள்ளே சென்று கணக்கரிடம் தன்னுடை பாஸ்புக்கை காண்பித்து பண இருப்பை சரிப்பார்த்தான் அதில் 9 இலட்சங்கள் உள்ளது எனக்காட்டியது... இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது... என்ன காலையில் இருந்து நமக்கு 9 எண் மட்டுமே கண்ணில் படுகிறதே என்று அப்போதுதான் அவனுக்கு நினைவுக்கு வந்தது... இன்று ஏதோ நமக்கு இந்த 9 என்ற எண்ணில் அதிர்ஷ்டம் இருக்கிறது என்று நினைக்கிறேன்... இந்த அதிர்ஷ்டத்தை எப்படியாவது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தான்... அதன்படி அந்த 9 இலட்சத்தையும் எடுக்க செக் எழுதி கொடுத்தான்... அவனுக்கு வந்த டோக்கன் எண் 999 அவனுக்கு மிகுந்த ஆச்சரியம்...
அதிர்ஷ்டம்
ஒருவன் காலையில் தூங்கி எழுந்தான்...
இரவு தூங்க வெகுநேரம் ஆனதால் காலை எழுந்துக்கொள்ள
நேரமாகிவிட்டது...
சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தில் 9 ஆகிவிட்டதை காட்டும்
விதமாக 9 மணிஅடித்து ஓய்ந்தது....
குளித்து முடித்து... காலண்டரில் தேதியை கிழித்தான்...
8-ம் தேதி போய்.. இன்று தேதி 9 எனக்காட்டியது...
வங்கிக்கு சென்றுவரலாம் என்று வங்கிக்கு செல்ல
ஆட்டோ பிடித்தார்...
அதில் ஆட்டோ எண் 9 என வட்டம் போட்டு
எழுதியிருந்தது...
வங்கியில் இறங்கி வங்கியில் நுழையும்போதுதான்
கவனித்தான் வங்கியின் கதவு எண் 99 என இருந்தது..
வங்கியின் உள்ளே சென்று கணக்கரிடம் தன்னுடை பாஸ்புக்கை
காண்பித்து பண இருப்பை சரிப்பார்த்தான் அதில் 9 இலட்சங்கள் உள்ளது
எனக்காட்டியது...
இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது...
என்ன காலையில் இருந்து நமக்கு 9 எண் மட்டுமே கண்ணில்
படுகிறதே என்று அப்போதுதான் அவனுக்கு நினைவுக்கு வந்தது...
இன்று ஏதோ நமக்கு இந்த 9 என்ற எண்ணில்
அதிர்ஷ்டம் இருக்கிறது என்று நினைக்கிறேன்...
இந்த அதிர்ஷ்டத்தை எப்படியாவது பயன்படுத்திக்கொள்ள
வேண்டும் என்று நினைத்தான்...
அதன்படி அந்த 9 இலட்சத்தையும்
எடுக்க செக் எழுதி கொடுத்தான்...
அவனுக்கு வந்த டோக்கன் எண் 999
அவனுக்கு மிகுந்த ஆச்சரியம்...
பணத்தை எடுத்துக்கொண்டு சாலையில் நடந்துச்செல்லும்போது...
எதை எடுத்தாலும் 99 ரூபாய் என கடை கண்ணில் பட்டது..
அதில் ஒரு தொப்பி அவனை கவர்ந்தது.... அதை 99 ரூபாய் கொடுத்து
வாங்கினான்... அப்போதுதான் அவனுக்கு குதிரைப்பந்தையம் நினைவுக்கு
வந்தது...
நேராக குதிரைப்பந்தையம் நடக்கும் அந்த இடத்துக்கு
சென்றான்..
வாயில் எண் 9 வழியாக உள்நுழைந்தான்....
அங்கிருந்த முகவரை சந்தித்தான்...
ஐயா மொத்தம் எத்தனை பந்தையங்கள் நடக்க இருக்கிறது...
மொத்தம் 10 போட்டிகள் என பதில் வந்தது... அப்படி என்னறால்
நான் 9-வது
போட்டியில் பங்கெடுத்துக்கொள்கிறேன்....
பந்தையமாக நான் 9 இலட்சத்தை கட்டுகிறேன்
என்று மொத்தப்பணத்தையும் கட்டினான்...
எல்லாப் போட்டிகளையும் பார்த்த அவன் 9-வது பந்தையம் வந்தவுடன் தானும் கலந்துக்கொண்டான்...
போட்டித்துவங்கியது... 10 குதிரைகள் ஓடியதில்
குதிரை எண் 9 என எண்கொண்ட குரையின் மீது தன் மொத்தப்பணத்தையும்
கட்டினான்....
இன்று எனக்கு 9-ல் அதிர்ஷ்ம் இருக்கிறது.. இன்றைய போடியில் நாம்தான் ஜெயிப்போம் என்று முழுமனதுடன்
நம்பினான்...
அந்த முகவரும் இவரை அணுகி வினவினார்... ஏன் 9-வது பந்தையம்.. 9 எண் கொண்ட குதிரை.. 9 லட்சம்... இப்படியாய்...
என கேட்டார்...
அவன் மீண்டும் நம்பிக்கையுடன் சொன்னான் இன்று
எனக்கு 9-ல் அதிர்ஷ்டம் அதனால்தான் இப்படி என்று... போட்டி துவங்கியது..
குதிரைகள் சீறிப்பாய்ந்து ஓடின...
பந்தையம் கட்டியவர்கள் பரபரப்பாய் ஆரவாரம் செய்துக்கொண்டிருந்தார்கள்.... போட்டி முடிந்தது....
இவன் பணம் கட்டிய குதிரை ஒன்பதாவதாக வந்தது....😜😝😜😝
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஒரு குட்டிக்கதை : அதிர்ஷ்டம் - குறிப்புகள் [ ] | A short story : Good luck - in Tamil [ ]