அருள் ஊடைமை

அதிகாரம் : 25

[ திருக்குறள்: பொருளடக்கம் ]

Grace is mutual - Authority : 25 in Tamil



எழுது: சாமி | தேதி : 16-07-2023 08:42 pm
அருள் ஊடைமை | Grace is mutual

241. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்; பொருட்செல்வம் பூமியார் கண்ணும் உள.

அருள் ஊடைமை

அதிகாரம் : 25

241. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்; பொருட்செல்வம்

பூமியார் கண்ணும் உள.

பொருள் செல்வம் இழிந்தவர்களிடமும் உள்ளதால் செல்வங்கள் பலவற்றுள்ளும் அருட்செல்வமே சிறந்தாகும்.

242. நல்லாற்றால் நாடி அருளாள்க: பல்லாற்றல்

தேரினும் அஃதே துணை.

பலவழிகளிலும் ஆராய்ந்து பார்த்தாலும் கருணையே உயிருக்குத் துணையாகும். எனவே ஆய்ந்தறிந்து கருணையே கொள்ள வேண்டும்.

243. அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த

இன்னா உலகம் புகல்.

கருணையுள்ளவர்கள் இருள் நிறைந்த துன்ப உலகில் புக மாட்டார்கள்.

244. மன்னுயிர் ஓம்பிஅருள் ஆள்வாற்கு இல்லென்ப

தன்உயிர் அஞ்சும் வினை.

நிலைப்பெற்ற உயிர்களைக் கருணையால் காப்பாற்ற வேண்டியவன். தன் உயிருக்குத் தீங்கு வரும் என்று அஞ்ச வேண்டியதில்லை.

245. அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை வளிவழங்கும்

மல்லல்மா ஞாலம் கரி.

கருணையுள்ள மனத்தவர்க்கு துன்பம் இல்லை, என்பதற்குக் காற்று வீசும் வளமுள்ள உலகில் வாழும் மக்களே சான்றாவார்கள்.

246. பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி

அல்லவை செய்துஒழுகு வார்.

கருணையின்றி தீமை செய்பவர்கள். செல்வத்தை இழந்து துன்பத்தை அடைவார்கள் என்று சான்றோர் கூறுவர்.

247. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

பொருளில்லார்க்கு உலக இன்பம் இல்லாதது போல, உயிர்களிடம் கருணை இல்லாதவர்களுக்கு மேலுலக இன்பம் இல்லை.

248. பொருள்அற்றார் பூப்பர் ஒருகால்; அருள்அற்றார்

அற்றார்மற்று ஆதல் அரிது.

வறியவரும், ஒரு காலத்தில் பொருள் பெற்று சிறப்புடைவர். ஆனால் அருளற்றவர் அவ்வாறு சிறப்படைதல் இயலாதாம்.

249. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்

அருளாதான் செய்யும் அறம்.

கருணையற்றவன் செய்யும் அறம், தெளிவற்றவன் மெய்ப் பொருளைக் கண்டதைப் போன்றதாகும்.

250. வலியார்முன் தன்னை நினைக்கத்தான் தன்னீன்

மெலியார்மேல் செல்லும் இடத்து.

தனதை விட மெலிந்தவரைத் தாக்கச் செல்லும் போது தன்னை விட வலிமையுடைவர்களின் முன் தான் அஞ்சி நிற்பதை நினைக்க வேண்டும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

திருக்குறள்: பொருளடக்கம் : அருள் ஊடைமை - அதிகாரம் : 25 [ திருக்குறள் ] | Tirukkural: Table of Contents : Grace is mutual - Authority : 25 in Tamil [ Tirukkural ]



எழுது: சாமி | தேதி : 07-16-2023 08:42 pm