ஒரு பிச்சைக்காரன் மத்தியான வெய்யில் நேரத்தில் தெருவில் நின்று பிச்சையெடுத்துக் கொண்டு நின்றான். அந்த வழியில் ஒரு பணக்காரன் குதிரையில் வந்தான். பிச்சைக்காரனைப் பார்த்துப் பரிதாபப்பட்டான்.
பேராசை
ஒரு பிச்சைக்காரன் மத்தியான வெய்யில் நேரத்தில் தெருவில் நின்று
பிச்சையெடுத்துக் கொண்டு நின்றான்.
அந்த வழியில் ஒரு பணக்காரன் குதிரையில் வந்தான்.
பிச்சைக்காரனைப் பார்த்துப் பரிதாபப்பட்டான்.
பிச்சைக்காரனின் தட்டில் பணம் போட்டான்.
மற்றவர்கள் போடுகின்ற பிச்சைக் காசைவிட அது அதிகமாக இருந்தது.
பிச்சைக்காரனுக்கு மிகுந்த சந்தோஷம் ஏற்பட்டது.
குதிரையில் வந்தவன் பிச்சை போட்டு விட்டுச் செல்ல அவனைக்
கூப்பிட்டான்.
அவனும் அருகில் வந்து நின்றான்.
"நீங்கள் குதிரையில் தானே செல்கிறீர்கள்.
உங்களுக்கு செருப்பு அவசியமில்லைத்தானே.
அதைத் தருவீர்களா?” என்று கேட்டான்.
குதிரையில் வந்தவன் யோசித்தான்.
அவன் கேட்பது சரி என நினைத்தான்.
பாபம் கடும் வெயில். சுடுமணல். என நினைத்து தனது இரக்கக்
குணத்தினால் இரண்டு செருப்புகளையும் கழற்றிக் கொடுத்து விட்டுப் புறப்பட்டான்.
பிச்சைக்காரனுக்கு மிகுந்த சந்தோஷம் ஏற்பட்டது.
மீண்டும் கூப்பிட்டான்.
நன்றி தெரிவித்தான்.
"நீங்கள் குதிரையில் தானே போகிறீர்கள்.
உங்களுக்கு தொப்பி அவசியமில்லைத்தானே.
அதைத் தரமுடியுமா” என்று கேட்டான்.
குதிரையில் வந்தவன் யோசித்தான்.
அவன் கேட்டது சரி போல் தெரிந்தது.
“சரி இந்தாபிடி” என்று சொல்லி தொப்பியை அவனுக்குக்
கொடுத்தான். ''பாபம் பிச்சைக்காரன். வெயில் சுடுகிறது.
தொப்பியைப் போடட்டும். நான் குதிரையில் வேகமாகச் சென்று விடுவேன் என நினைத்துக்
கொண்டு குதிரையைத் தட்டிச் செலுத்தினான்.
பிச்சைக்காரன் மீண்டும் கூப்பிட்டான்.
குதிரையில் வந்தவன் வந்து நின்றான்.
“உந்தக் குதிரையையும் தந்தால் நான் அதில் ஏறிப்போய்
பிச்சை எடுக்கலாம். தருவீர்களா?" என்று கேட்டான்.
குதிரையில் வந்தவனுக்குக் கோபம் வந்து விட்டது.
குதிரைக்கு அடிக்கும் சவுக்கினால் பிச்சைக்காரனுக்கு நாலு அடி
அடித்தான்.
அடிவாங்கிய பிச்சைக்காரன் சிரித்தான்.
இப்படி அடி வாங்கியும் சிரிக்கிறானே என்று நினைத்த குதிரைக்காரன்
அவனிடம் கேட்டான்.
"அடி வலிக்கவில்லையா...? இப்படிச்
சிரிக்கிறாயே" என்று. பிச்சைக்காரன் சொன்னான்:
"ஐயா! செருப்பைக் கேட்டேன்
தந்தீர்கள்.தொப்பியைக் கேட்டேன் தந்தீர்கள். குதிரையைக் கேட்காது விட்டிருந்தால்
நான் வாழ்நாள் முழுதும் கவலைப்பட்டிருப்பேன்" என்றான்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
சிந்தனை சிறு கதைகள் : பேராசை - குறிப்புகள் [ ] | Thought short stories : Greed - Tips in Tamil [ ]