கிழக்கு நோக்கிய களிறு!

முருகன்

[ முருகன்: ]

Green to the east! - Murugan in Tamil

கிழக்கு நோக்கிய களிறு! | Green to the east!

அறுபடை வீடுகளில் திருத்தணி சிறப்பு வாய்ந்த தலம்.

கிழக்கு நோக்கிய களிறு!

 

அறுபடை வீடுகளில் திருத்தணி சிறப்பு வாய்ந்த தலம். வள்ளியை முருகப்பெருமான் திருமணம் புரிந்த இடம்! எல்லா முருகன் கோயில்களிலும் மூலவர் முன்பும், உற்சவர் முன்பும் மயில் இருப்பதைக் காணலாம். ஆனால் இங்கு யானை வீற்றிருக்கிறது. அதுவும் முருகனை நோக்காமல் கிழக்கு நோக்கி நிற்கிறது. இந்திரன் தனது வாகனமான இந்த ஐராவத யானையைத் திருமண பரிசாக முருகனுக்கு அளித்தான். ஐராவதத்தை பிரிந்ததால் இந்திரனின் செல்வம் சரியத் துவங்கியது. முருகன் யானையைத் திருப்பித்தர சம்மதித்தும் இந்திரன் அதனை ஏற்கவில்லை. "யானை உள் சந்நிதியிலேயே இருக்கட்டும். ஆனால் கிழக்கே உள்ள என் இந்திரலோகத்தை நோக்கியபடி இருந்தால் எனது செல்வாக்கு குறையாது'' என்று கூறிவிட்டுச் சென்றான் இந்திரன். எனவே தான் ஐராவதம் கிழக்கு நோக்கி அமைந்திருப்பதாக ஐதீகம்!


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

 

முருகன்: : கிழக்கு நோக்கிய களிறு! - முருகன் [ முருகன் ] | Murugan: : Green to the east! - Murugan in Tamil [ Murugan ]


தொடர்புடைய வகை





தொடர்புடைய தலைப்புகள்