ஐந்தரை அங்குல உருவில் கண்டெடுக்கப்பட்டு, இன்று சுமார் இரண்டு அடி உயரத்திற்கு வளர்ந்துள்ள பிள்ளையாரைப் பற்றி அறிவீர்களா?
வளரும் விநாயகர்!
ஐந்தரை அங்குல உருவில் கண்டெடுக்கப்பட்டு, இன்று சுமார் இரண்டு அடி உயரத்திற்கு
வளர்ந்துள்ள பிள்ளையாரைப் பற்றி அறிவீர்களா? சுயம்பு மூர்த்திகளாய்த் தோன்றும் தெய்வங்கள் சக்தியும், சிவனும் மட்டுமே. ஆனால் வளரும் கயம்பு
மூர்த்தியாக விநாயகர் விளங்குவது மிக மிக அரிதான ஒன்று!!. திண்டிவனம் அருகே உள்ள தீவனூர்
அருள்மிகு பொய்யாமொழி விநாயகரே அவர்!
பிரதிஷ்டை செய்தபோது, சிவலிங்கம் போன்ற தோற்றத்தில் இருந்த
இவர், நாளடைவில் பிள்ளையார் உருவில் வளர்ந்து, நர்த்தன கணபதியாக தற்போது காட்சி தருகிறார்.
பால், விபூதி, சந்தன அபிஷேகத்தின்போது மட்டுமே விநாயகரின்
முழு உருவமும் நமக்குப் புலப்படும்!!.
இந்த விநாயகரின் சந்நிதியில் வந்து
திருமணம் செய்து கொள் பவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது
நன்னம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்த சந்நிதியை ஒட்டியுள்ள குளத்தில் குளித்து எழுபவர்களின்
பிணிகள் நீங்கிவிடுகின்றன.
செஞ்சியை ஆண்ட தேசிங்கு ராஜா காலத்தில்
கண்டு எடுக்கப் பட்ட இப்பிள்ளையாரின் வரலாற்றுக் கதை ரொம்பவே ருசிகரமானது.
செஞ்சி அருகே உள்ள தீவனூர் கிராமத்தில்
ஆடு மாடுகளை மேய்க்கும் சிறுவர்கள் அருகில் உள்ள வயல்களில் நெற்கதிர்களைத் திருடி வந்து
அதைக் கல்லால் தேய்த்து அரிசியைத் தின்பது வழக்கம். ஒரு சமயம் கல் தேடிச் சென்ற சிறுவர்களுக்கு
ஐந்து அங்குல நீளமுள்ள குழவிக்கல் ஒன்று கிடைத்தது. எளிதில் உடைக்க மற்றொரு கல் தேவை
என்று நினைத்து, நெற்கதிர்களைப் பரப்பி, அதன் மேல் அந்த ஐந்து அங்குல குழவிக்கல்லை
வைத்து விட்டு வேறு கல் ஏதாவது கிடைக்கிறதா என்று தேடினார்கள்.
வேறு கல் கிடைக்காமல் திரும்பி வந்த
சிறுவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. நெற்குவியல் அரிசி உமி தவிடு என மூன்று
பிரிவாகவும், அருகே அந்த ஐந்து அங்குலக் குழவிக்கல்லும்
இருந்தன. இதைக் கண்ட சிறுவர்கள் இது சாதாரணக் கல் அல்ல என்பதை அறிந்து, 'நெல் குத்தி சாமி' என்று பெயர் வைத்து வேடிக்கையாகப் பூஜை
செய்து வழிபட ஆரம்பித்தார்கள். அதுவே பிற்காலத்தில் இந்த தீவனூர் பிள்ளையாரானது!!.
திண்டிவனம் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலைப்
பதினொரு கி.மீ. மேற்கே, இந்த
தீவனூர் பிள்ளையார் கொவில் உள்ளது. இந்த சுயம்பு மூர்த்திப் பிள்ளையார் இன்று இரண்டடி
உயரத்திற்கு வளர்ந்திருப்பது அதிசயமாக இருக்கிறது. வளரும் இந்தப் பிள்ளையாரைத் தரிசித்தால், வறுமை நீங்கிச் செல்லம் வளரும் என்கிறார்கள்!!'
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
விநாயகர் : வளரும் விநாயகர்! - விநாயகர் [ விநாயகர் ] | Ganesha : Growing Ganesha! - Ganesha in Tamil [ Ganesha ]