கொய்யாப் பழம்

கொய்யா பலன்கள்

[ ஆரோக்கியம் குறிப்புகள் ]

Guava fruit - Guava benefits in Tamil

கொய்யாப் பழம் | Guava fruit

மாம்பழத்தை அடுத்து மார்க்கெட்டில் விற்பனைக்கு வரக்கூடிய பழம் கொய்யாப் பழமாகும்.

கொய்யாப் பழம்

மாம்பழத்தை அடுத்து மார்க்கெட்டில் விற்பனைக்கு வரக்கூடிய பழம் கொய்யாப் பழமாகும்.

கொய்யாப்பழம் பந்து போன்று உருண்டு திரண்டிருக்கும். 200 கிராம் முதல் 15 கிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். பொதுவாக இதன் நிறம் மஞ்சளாகவே இருக்கும். கொய்யாப் பழத்தில் பல வகை உண்டு. கொய்யாப்பழத்தின் மேல் பகுதி மஞ்சள் நிறமாக இருந்தாலும் சிலவகைப் பழங்களின் உள் பகுதி வெண்ணிறமாகவும், சில வகைப் பழங் களின் உள் பகுதி ரோஜாப் பூ நிறத்திலுமிருக்கும். கொய்யாப்பழத்தின் நடுபாகத்திலுள்ள சதைப் பகுதியில் ஏலரிசியின் வடிவத்தில் வெண்ணிறமான சிறு விதைகள் நிறைந்திருக்கும். இந்த விதையுடன் தான் சாப்பிட வேண்டும். இந்த விதைகளை மென்று தின்றால் நல்ல ருசியாக இருக்கும். இந்தப் பழத்திலிருந்து ஒரு வகை நறுமணம் வெளியேறிக் கொண்டேயிருக்கும். கொய்யாப்பழம் உள்ள இடத்தில் இந்த வாசனையும் இருக்கும். கொய்யாப்பழம் இனிப்புடன் துவர்ப்பு கலந்த ருசியாக இருக்கும்.

கொய்யாப் பழத்தில் வைட்டமின் - A உயிர்ச் சத்து சிறிதளவும் கிடையாது. வைட்டமின்—C உயிர்ச் சத்துதான் அதிக அளவில் இருக்கிறது. வேறு எந்தப் பழத்திலுமில்லாத அளவு வைட்டமின் C உயிர்ச்சத்து கொய்யாப்பழம் ஒன்றில் தானிருக்கிறது.

வளரும் சிறுவர்களின் எலும்பு பலம் பெற்று உறுதியுடன் வளர்ந்தால் தான் உடல் வளர்ச்சி ஏற்படும். சில சிறுவர்களின் உடல் வளர்ச்சியடையாமல், அதே நிலையில் நின்று விடுவதற்குக் காரணம் அவர்களுடைய வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் C உயிர்ச்சத்து அவர்களுடைய ஆகாரத் தில் கிடைக்காத நிலைதான். எனவே, வளரும் குழந்தைகளுக்கு வைட்டமின் C உயிர்ச்சத்து நிறைந்த ஆகாரத்தையே நிறையக் கொடுத்து வரவேண்டும். வைட்டமின் - சி உயிர்ச்சத்து எலும்புகளுக்கு பலத் தையும், உறுதியையும் அளித்து அதோடு அதை வளரச் செய்யவும் பயன்படுகிறது. எனவே, எந்த ஒரு பழவகையிலும் இல்லாத அளவு வைட்டமின் C உயிர்ச் சத்து நிறைந்த கொய்யாப் பழத்தை வளரும் சிறுவர்களுக்கு அடிக்கடி கொடுத்து வர வேண்டும்.

 

மலச்சிக்கல் நீங்க

அடிக்கடி மலச்சிக்கலால் கஷ்டப்படுகிறவர்கள் நன்றாகப் பழுத்த, பெரிய கொய்யாப் பழத்தில் இரண்டை தேவையான போது எந்த நேரத்தில் சாப்பிட்டாலும் மறுநாள் சரளமாக மலமிறங்கும்.

கொய்யாப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சொறி சிரங்கு குணமாகும். உடலில் ஏற்பட்டுள்ள எந்த வகையான புண்களையும் ஆற்றும். இரத்த சோகை குணமாகும். பற்களுக்கு நல்ல பலத்தைத் தரும்.

 

கொய்யப்பழத்தில் அடங்கியுள்ள வைட்டமின் உயிர்ச்சத்துக்களின் விபரம்

வைட்டமின் A உயிர்ச்சத்து - சிறிதளவு கூட இல்லை.

வைட்டமின் B-1 A உயிர்ச்சத்து – 8 மில்லி கிராம்.

வைட்டமின் B-2 உயிர்ச்சத்து – 9 மில்லி கிராம்.

வைட்டமின் C உயிர்ச்சத்து – 82 மில்லி கிராம்.

சுண்ணாம்புச்சத்து - 3 மில்லி கிராம்.

இரும்புச்சத்து - 0.3 மில்லி கிராம்.

காலரி என்னும் உஷண சக்தி - 19


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி! வணக்கம்.

- தமிழர் நலம்

ஆரோக்கியம் குறிப்புகள் : கொய்யாப் பழம் - கொய்யா பலன்கள் [ ஆரோக்கியம் ] | Health Tips : Guava fruit - Guava benefits in Tamil [ Health ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்