உங்கள் குருவை நினைத்து இப்படி பூஜை செய்தால், அறியாமல் செய்த பாவத்திற்கு கூட விமோசனம் பெறலாம். உங்களுடைய குரு என்று நீங்கள் யாரை நினைக்கிறார்களோ, கட்டாயம் அவரது திருவுருவப் படம் உங்கள் வீட்டில் இருக்கும். அந்தப் படம் உங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு சிறியதாக இருந்தால் கூட போதும். எடுத்துக்காட்டாக சில பேர், சில சித்தர்களை தங்களது குருவாக நினைத்து, அந்த சித்தரின் திருவுருவப்படத்தை வைத்து வீட்டில் பூஜை செய்து வருவார்கள். சில பேர் ராகவேந்திரா, சாய்பாபா, சுவாமி விவேகானந்தர் இப்படிப்பட்ட மகான்களை தங்களுடைய குருவாக நினைத்து வழிபடுவார்கள். உங்களது குரு யாராக இருந்தாலும் பரவாயில்லை. வியாழக்கிழமை அன்று, உங்கள் குருவுடைய திருவுருவப் படத்திற்கு முன்பாக அமர்ந்து, உங்கள் குருவின் திரு உருவப் படத்தை பார்த்தவாறு, 2 மண் அகல்களில், நெய் தீபங்கள் ஏற்றி வைக்க வேண்டும். அதன் பின்பு உங்களது குருவிற்கு மனதார நன்றியை தெரிவிக்க வேண்டும். ஆனால், இந்த வழிபாட்டின் போது உங்களது மனது எக்காரணத்தைக் கொண்டும் அலைபாய கூடாது. மனதை ஒரு நிலைப்படுத்தி குருவை வணங்கும் போது நீங்கள் வைக்கும் வேண்டுதலானது கட்டாயம் உங்களது குருவின் ஆன்மாவின் செவிகளில் விழும் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு தீபங்கள் ஏற்றி வைத்த பின்பு, உங்கள் மனதார ‘ஓம் குருவே சரணம்’ என்ற மந்திரத்தை ஐந்து முறை உச்சரிக்க வேண்டும். ஜீவசமாதி அடைந்த அவர்களிடம், நாம் வைக்கும் வேண்டுதல்கள் உடனே நிறைவேறும் என்பதையும் நாம் இந்த இடத்தில் நினைவில் கொள்ள வேண்டும். அதன் பின்பு நீங்கள் செய்த பாவத்திற்கான மன்னிப்பைக் கேட்டுக் கொள்ள வேண்டும். ‘என்னுடைய வாழ்க்கையில், நான் கடந்து செல்லும் பாதையில், அறிந்தோ அறியாமலோ, மற்ற உயிர்களுக்கு நான் செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட வேண்டும்’ என்றவாறு சொல்லி மன்னிப்பு கேட்கலாம்.’ அடுத்தபடியாக உங்களது வாழ்க்கையில் முன்னேற்றத்திற்காக தேவைப்படக் கூடிய வேண்டுதலை வைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 11 வாரம் வியாழக்கிழமை உங்களது குருவை வழிபட்டால் நல்ல பலன் உண்டு.
குருவினுடைய ஆசிர்வாதம் மிகவும் அவசியம் !
உங்கள் குருவை நினைத்து இப்படி பூஜை செய்தால், அறியாமல் செய்த பாவத்திற்கு கூட விமோசனம் பெறலாம்.
உங்களுடைய குரு என்று நீங்கள் யாரை நினைக்கிறார்களோ, கட்டாயம் அவரது திருவுருவப் படம் உங்கள் வீட்டில் இருக்கும். அந்தப் படம் உங்கள்
பாக்கெட்டில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு சிறியதாக இருந்தால் கூட போதும்.
எடுத்துக்காட்டாக சில பேர், சில சித்தர்களை தங்களது குருவாக நினைத்து, அந்த சித்தரின் திருவுருவப்படத்தை வைத்து வீட்டில் பூஜை செய்து வருவார்கள்.
சில பேர் ராகவேந்திரா, சாய்பாபா, சுவாமி விவேகானந்தர் இப்படிப்பட்ட மகான்களை தங்களுடைய
குருவாக நினைத்து வழிபடுவார்கள். உங்களது குரு யாராக இருந்தாலும் பரவாயில்லை.
வியாழக்கிழமை அன்று, உங்கள் குருவுடைய திருவுருவப் படத்திற்கு முன்பாக அமர்ந்து, உங்கள் குருவின் திரு உருவப் படத்தை பார்த்தவாறு, 2 மண் அகல்களில், நெய் தீபங்கள் ஏற்றி வைக்க வேண்டும். அதன் பின்பு உங்களது குருவிற்கு மனதார நன்றியை
தெரிவிக்க வேண்டும்.
ஆனால், இந்த வழிபாட்டின் போது உங்களது மனது எக்காரணத்தைக் கொண்டும் அலைபாய கூடாது. மனதை
ஒரு நிலைப்படுத்தி குருவை வணங்கும் போது நீங்கள் வைக்கும் வேண்டுதலானது கட்டாயம் உங்களது
குருவின் ஆன்மாவின் செவிகளில் விழும் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு தீபங்கள் ஏற்றி வைத்த பின்பு, உங்கள் மனதார ‘ஓம் குருவே சரணம்’ என்ற மந்திரத்தை ஐந்து முறை உச்சரிக்க வேண்டும்.
ஜீவசமாதி அடைந்த அவர்களிடம், நாம் வைக்கும் வேண்டுதல்கள் உடனே நிறைவேறும் என்பதையும் நாம் இந்த இடத்தில் நினைவில்
கொள்ள வேண்டும்.
அதன் பின்பு நீங்கள் செய்த பாவத்திற்கான மன்னிப்பைக்
கேட்டுக் கொள்ள வேண்டும். ‘என்னுடைய வாழ்க்கையில், நான் கடந்து செல்லும் பாதையில், அறிந்தோ அறியாமலோ, மற்ற உயிர்களுக்கு நான் செய்த பாவங்கள் அனைத்தும்
மன்னிக்கப்பட வேண்டும்’ என்றவாறு சொல்லி மன்னிப்பு கேட்கலாம்.’
அடுத்தபடியாக உங்களது வாழ்க்கையில் முன்னேற்றத்திற்காக
தேவைப்படக் கூடிய வேண்டுதலை வைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 11 வாரம் வியாழக்கிழமை
உங்களது குருவை வழிபட்டால் நல்ல பலன் உண்டு.
11 வியாழக் கிழமைகள் இந்த வழிபாட்டை செய்து விட்டு, அப்படியே விடாமல், தொடர்ந்து வரும் வியாழக்கிழமைகளில் செய்து வந்தாலும்
நம்முடைய வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்கள் கட்டாயம் குறையும் என்பதில் சந்தேகமே இல்லை.
எவர் ஒருவருக்கு குருவின் ஆசீர்வாதம் முழுமையாக
கிடைக்கின்றதோ, எவர் ஒருவர் தன்னுடைய குருவை வாழ்நாள் முழுவதும்
மறக்காமல் இருக்கின்றார்களோ, அவர்களுக்கு வாழ்க்கையில் இன்னல்கள் குறையும், நிம்மதி பிறக்கும், சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வததோடு மட்டுமல்லாமல், அவர்கள் பாக்கியசாலிகளாக தங்களுடைய வாழ்க்கையை வாழ, குருவினுடைய ஆசிர்வாதம் மிகவும் அவசியம் .
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : குருவினுடைய ஆசிர்வாதம் மிகவும் அவசியம் - குறிப்புகள் [ ] | Spiritual Notes : Guru's blessings are essential - Notes in Tamil [ ]