விச்ரவசு என்ற ஒரு மகரிஷி இருந்தார். சதா சர்வ காலமும் சதாசிவனை நினைத்து தவம் பண்ணிக் கொண் டிருந்தார்.
இல்லத்தில் குபேரா வந்தால் மகிழ்ச்சி விச்ரவசு என்ற ஒரு மகரிஷி இருந்தார். சதா சர்வ காலமும் சதாசிவனை நினைத்து தவம் பண்ணிக் கொண் டிருந்தார். தக்க வயது வந்தவுடன் பரதிவாஜ மகரிஷியோட மகளைத் திருமணம் செய்து கொண்டார். உரிய காலத்தில் உன்னதமான நேரத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வைஸ்ரவணன் என்ற பெயரிட்டு ரொம்ப செல்லமாக வளர்த்து வந்தார். அப்பாவுக்கு கொஞ்சமும் தப்பாமல் பிறந்த பிள்ளையாக எப்பவும் பூஜை புனஸ்காரம் என்று இருந்தான் வைஸ்ரவணன். ஓரளவு அவனுக்குப் புரியக்கூடிய வயது வந்ததும் "பிரம்ம தேவனை நினைத்து தவம் செய்யப் போகிறேன். என்னை ஆசீர்வதியுங்கள்" என்று கிளம்பினான். ஆரம்ப காலத்தில் வெறும் தண்ணீரை மட்டும் குடித்துக் கொண்டும் காற்றை மட்டும் சுவாசித்துக் கொண்டும் கடும் தவமிருந்த வைஸ்ரவணன் போகப் போக தண்ணீர் குடிப்பதையும் நிறுத்திவிட்டு வெறும் காற்றை மட்டும் சுவாசித்துக் கொண்டு ரொம்பக் கடுமையாக விரதம் இருந்தான். பல வருடங்கள் கழித்து மனமிரங்கினார் பிரம்மன். தேவர்களோடும் பூலோகத்திற்கு வந்து வைஸ்ரவணனுக்கு காட்சி கொடுத்தார். வைஸ்ரவணனை நோக்கி என்ன வரம் உனக்கு வேண்டும் என்று கேட்டார். உங்களை தரிசித்ததில் ரொம்ப பாக்கியம்! இதுவே எனக்கு போதும். நான் வரமாக எதைக் கேட்பது என்று வைஸ்ரவணன் கூறினான். நான்முகனுக்கும் அவரோட வந்திருந்த தேவர்களுக்கும் ரொம்ப சந்தோஷமாயிருந்தது. இவ்வளவு சின்ன வயதிலே பற்று இல்லாமல் பக்தியுடன் இருக்கிறான் இந்தப் பாலகன். இவனுக்கு நாம் ஒரு பெரிய பதவியைக் கொடுக்க வேண்டும் என்று அனைவரும் நினைத்தார்கள். அப்போது பிரம்மா, 'அஷ்டதிக்கு பாலகர்களில் ஒருத்தராக அதாவது வடக்கு திசைக்கு காவலனாக இந்தப் பாலகனை நியமிக்க வேண்டும். எல்லா செல்வங்களையும் பாதுகாக்கும் அதிபதியாகவும் ஆக்க வேண்டும்'' என்று கூற, எல்லா தேவர்களும் சம்மதம் தெரிவிக்கிறார்கள். அப்படியே வரம் கொடுத்தார் நான்முகன். அன்று முதல் எல்லா செல்வங்களுக்கும் அதிபதியானான வைஸ்ரவணன். அஷ்டதிக்கு பாலகர்களில் ஒருவராக விளங்கும் அவன் பேரும் குபேரன் என்று ஆனது. குபேரன் மாதிரி கடுமையான தவமோ, விரதமோ இருக்க முடியாது. என்றாலும், எளிமையான லட்சுமி குபேர விரதத்தைக் கடைப்பிடித்தாலே போதும். குபேரனைப் போன்றே நாமும் அஷ்ட ஐஸ்வரியங்களுக்கும் அதிபதியாகலாம். பூரணமான ஒரு வெள்ளிக்கிழமை. அதாவது அமிர்த யோகம் இல்லையென்றால் சித்தயோகம் உள்ள அஷ்டமி, நவமி, இதெல்லாம் இல்லாத ஒரு வெள்ளிக் கிழமையில் இந்த விரதம் அனுஷ்டிக்கலாம். லட்சுமி படம், குபேரன் படம், குபேர யந்திரம், சுத்தம் செய்து வைக்க வேண்டும். மஞ்சள் தூள், குங்குமம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, சந்தனம், பழம், பூ, சாம்பிராணி, கற்பூரம், நவதானியம், தலை வாழையிலை ஆகிய இவற்றையெல்லாம் வாங்கி வைக்க வேண்டும். விரதம் இருக்கும் வெள்ளிக்கிழமை அன்று காலை எழுந்து குளித்துவிட்டு சுத்தமான ஆடையை உடுத்திக் கொண்டு நெத்திக்குப் பொட்டு வைத்து விட்டுத் தயாராக இருக்க வேண்டும். நல்ல நேரத்தில் லக்ஷ்மி குபேரன் படம், குபேர யந்திரம், இதையெல்லாம் எடுத்து மஞ்சள், குங்குமம் வைத்து பூஜையில் வைக்க வேண்டும். குபேரன் யந்திரம் படம் மட்டும் இருந்தால் வடக்குத் திசையில் வைக்க வேண்டும். படத்துக்கு முன்னால் தலை வாழை இலையை வைக்க வேண்டும். அதன்மேல் நவதானியத்தையும் ஒன்றாக கலக்காமல் சுற்றி வர பரப்பி வைக்க வேண்டும். அதற்கு நடுவில் ஒரு செம்பை வைத்து சுத்தமான தண்ணீரால் நிரப்பி அதில் கொஞ்சம் மஞ்சள் தூளைப் போட்டு வைக்க வேண்டும். செம்பு மேல் மஞ்சள் பூசிய ஒரு தேங்காயை வைத்து சுற்றிலும் மாவிலையைச் சொருகி கலசம் மாதிரி அமைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, பழம் இத்துடன் (ஒரு ரூபாயாக இருந்தாலும் போதும். உங்கள் ஏற்றபடி வைக்க வேண்டும்) எல்லாவற்றையும் கலசத்துக்கு முன்னால் வைக்க வேண்டும். கொஞ்சம் மஞ்சள் தூளை எடுத்து லேசாக தண்ணீர் விட்டு சிறியதாக பிள்ளையார் பிடித்து வைத்து குங்குமப் பொட்டு வைக்க வேண்டும். படம், யந்திரம், கலசம், மஞ்சள் பிள்ளையார் எல்லாவற்றிலும் வாங்கி வைத்துள்ள பூவைப் போட வேண்டும். அதன் பிறகு ஊதுபத்தி கொளுத்தி வைக்க வேண்டும். இனி, கிழக்கு பார்த்து உட்கார்ந்து உங்களுக்குத் தெரிந்த பிள்ளையாரின் மந்திரத்தை, பாட்டை சுலோகத்தைச் சொல்லலாம். சொல்லிவிட்டு அடுத்து உங்களுக்குத் தெரிந்த லக்ஷ்மி ஸ்லோகத்தை, பாட்டு துதியைச் சொல்ல வேண்டும். லக்ஷ்மியைத் துதித்து முடித்ததும் குபேரனைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த பாட்டு ஸ்லோகம் மந்திரத்தைச் சொல்ல வேண்டும். எந்த மந்திரமும் தெரியாதவர்கள் மகாலக்ஷ்மியே போற்றி, அஷ்ட லக்ஷ்மியே போற்றி, ஆனந்த லக்ஷ்மியே போற்றி, குபேர லக்ஷ்மியே போற்றி என்று சேர்த்துச் சொல்லி வழிபட்டாலும் போதும். குபேரனை போற்றித் துதிக்கும்போது கீழ்க்கண்ட குபேர போற்றி துதியைச் சொல்லி தியானிக்க வேண்டும். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்பூஜைக்கு ஏற்ற நாள் எது?
பூஜைக்குத் தேவையான புனிதப் பொருட்கள்
பூஜை அனுஷ்டிப்பது எப்படி?
ஆன்மீக குறிப்புகள்: குபேரன் : இல்லத்தில் குபேரா வந்தால் மகிழ்ச்சி - குபேரன் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual notes: Kuberan : Happiness is when Kubera comes to the house - Kuberan - Spiritual notes in Tamil [ spirituality ]