திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது நாங்குநேரி வானமாமலை பெருமாள் ஆலயம்.
நோய் தீர்க்கும் எண்ணெய் கிணறு!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது நாங்குநேரி
வானமாமலை பெருமாள் ஆலயம். தாமாகத் தோன்றிய ஸ்வயம்வக்த தலங்களில் இதுவும் ஒன்று. இங்கு
தோத்தாத்ரி நாதர் அருள்கின்றார். இத்தலத்தில் 25 அடி நீளமும், 15 அடி அகலமும் கொண்ட ஒரு மருத்துவத் தைலக் கிணறு உள்ளது.
இங்கு தினமும் தோத்தாத்ரிநாதருக்கு
6 படி நல்லெண்ணெயும், சந்தன எண்ணெயும் கலந்து திருமஞ்சனம்
செய்கிறார்கள். அந்த எண்ணெய் பெருமாளின் பீடத்தின் அடி வழியாக வந்து இந்தக் கிணற்றில்
சேர்கிறது. பக்தர்களுக்கு கால்படி எண்ணெயை பிரசாதமாகத் தந்து, பதிலுக்கு அவர்களிடம் கால்படி எண்ணெய்
வாங்கி அதில் சேர்ப்பது வழக்கமாக உள்ளது. இந்த எண்ணெய் தீராத நோய் தீர்க்கும்
அருமருந்தாகத் திகழ்கிறது
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
பெருமாள் : நோய் தீர்க்கும் எண்ணெய் கிணறு! - வானமாமலை பெருமாள் ஆலயம் [ பெருமாள் ] | Perumal : Healing oil well! - Vanamamalai Perumal Temple in Tamil [ Perumal ]