பூலோக சொர்க்கம்

ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Heaven on Earth - Spiritual Notes in Tamil

பூலோக சொர்க்கம் | Heaven on Earth

ஸ்ரீ கிருஷ்ணருக்கு இந்தியாவின் பல இடங்களில் கோயில் இருந்தாலும், அவர் குழந்தையாக அருள்பாலிக்கும், கேரளாவில் உள்ள கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

பூலோக சொர்க்கம்

 

ஸ்ரீ கிருஷ்ணருக்கு இந்தியாவின் பல இடங்களில் கோயில் இருந்தாலும், அவர் குழந்தையாக அருள்பாலிக்கும், கேரளாவில் உள்ள கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

 

இக்கோவில் மூலவர் உன்னிகிருஷ்ணன் என்று அழைக்கப்படுகிறார். இவரது விக்ரகம் பாதாள அஞ்சனம் எனப்படும் கலவையால் செய்யப்பட்டது. குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். அப்படிப்பட்ட சிவனின் அம்சமான குரு பகவானும், வாயுபகவானும் சேர்ந்து உருவாக்கியதுதான் இந்த குருவாயூர். இக்கோவிலின் மூலவர் சிலையை கிருஷ்ணரே செய்ததாகவும் கூறுவார்கள். அதாவது, இந்த சிலையை தனது பக்தரான உத்தவர் என்பவரிடம் கண்ணன் கொடுத்தார். துவாரகையில் வசித்து வந்த உத்தவரிடம், இந்த துவாரகையை கடல் கொள்ளும் சமயத்தில் இந்த சிலை கடலில் மிதக்கும். அதை பிரகஸ்பதியான குருபகவானிடம் ஒப்படைத்து அவர் விரும்பும் இடத்தில் பிரதிஷ்டை செய்ய சொல்ல வேண்டும் என்று கிருஷ்ணர் சொன்னார். அவர் சொன்னது போலவே நடந்தது. வாயு பகவான் கண்ணனின் கட்டளையை ஏற்று புயலாய் மாறினார். இடைவிடாத மழை கொட்டியது. கொந்தளித்த கடல் சுனாமியாய் துவாரகைக்குள் புகுந்தது. உத்தவர் வசம் இருந்த கண்ணனின் சிலை கடலில் மிதந்தது. அதை எடுத்தார் குருபகவான். பூலோக சொர்க்கமான குருவாயூரில் அதை பிரதிஷ்டை செய்தார்.

 

அதுவே குருவாயூர் உன்னிகிருஷ்ணன் விக்கிரகம். நாம் அவரை குருவாயூரப்பன் என்றும் அழைத்து மகிழ்கிறோம். இன்னும் பல்வேறு சிறப்புகளைக் கொண்டு திகழ்கிறது இந்தக் கோவில். அவற்றில் சில:

 

குருவாயூர் கோவிலில் திருமணம் செய்துகொண்டால் தீர்க்க ஆயுளுடன் கூடிய வாழ்க்கை கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் மாலையும் கழுத்துமாக வலம் வரும் புதுமணத் தம்பதியரை இங்கு தினமும் காணலாம்.

 

குழந்தைக்கு முதன்முதலாக சோறு ஊட்டும் நிகழ்ச்சியும் இங்கு பிரசித்தி பெற்றது. அவ்வாறு முதல் சோறு இங்கு ஊட்டப்பெறும் குழந்தைகளின் வாழ்வில் சவுபாக்கியங்களும் ஏற்படும் என்பது நம்பிக்கை.

 

இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் காணிக்கையாக பக்தர்கள் சார்பில் இங்கு யானைகள் வழங்கப்படுகின்றன. இக்கோவிலின் சுவாமி சன்னதியை தினமும் இங்குள்ள யானைதான் திறந்து வைக்கிறது. விழா காலங்களில் சுவாமியை யானையே சுமந்து வரும் காட்சி பரவசம் தரக்கூடியது. இங்குள்ள யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் அவைகளுக்கு ஓட்டப்பந்தயமும் நடத்தப்படுவது உண்டு. வெற்றி பெறும் யானைதான் சுவாமியை சுமக்கும் பாக்கியத்தை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இக்கோவிலில் வந்து வேண்டிக்கொண்டவர்கள். வேண்டுதல் நிறைவேறியவுடன் தங்களது எடைக்கு எடை துலாபாரம் செலுத்துவது வழக்கம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : பூலோக சொர்க்கம் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Heaven on Earth - Spiritual Notes in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்