ஒருவரை ஒருவர் தாங்கி ஒருவருக்கொருவர் உதவி புரிந்து வாழும் வாழ்வு உன்னதமானது, உதவும் பண்பு வளர்ந்தோங்கிவிட்டால் தன்நலம், பேராசை, திருட்டுத் தனம், போன்ற தீய பண்புகள் இல்லாமல் போய்விடும்...
உதவும் மனப்பான்மை...!
ஒருவரை ஒருவர் தாங்கி
ஒருவருக்கொருவர் உதவி புரிந்து வாழும் வாழ்வு உன்னதமானது, உதவும்
பண்பு வளர்ந்தோங்கிவிட்டால் தன்நலம், பேராசை, திருட்டுத் தனம், போன்ற தீய பண்புகள் இல்லாமல்
போய்விடும்...
வெயிலின் ஒளி எந்தப் பொருள்
மீது பட்டாலும் அந்தப் பொருள் அழகுடையதாகத் தோன்றும் என்றான் ஆங்கிலப் பெருங்
கவிஞன் ஷெல்லி...
அதேபோல் தூய அன்புடன் பிறருக்கு நாம் கொடுக்கிற எந்தப்
பொருளும் அதி உன்னத மதிப்புடையதாகவே கருதப்படும்...
தேவைப்படுகிற உதவி கிடைக்க
வேண்டிய நேரத்தில் கிடைக்க வேண்டும். அதுதான் பெறுகிறவர்களுக்குப் பேருதவி, தருகிறவர்களுக்கும்
பெருமை...!
சிறிய உதவியோ பெரிய உதவியோ
மனமுவந்து செய்யவேண்டும். அதற்கு மிகப்பெரிய பலன் உண்டு, உதவுகின்ற
உள்ளங்கள் இருக்கின்ற இடங்கள் எவையோ அவையே உன்னதமான பூமி.
அதனால்தான்!,
உடல் நோயற்று இருப்பது முதல்
இன்பம்,
மனம் கவலையற்று இருப்பது
இரண்டாம் இன்பம்,
பிற உயிர்க்கு உதவியாக
வாழ்வது மூன்றாவது இன்பம் - என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள்...
ஆனால்!, மனிதன்
காலப்போக்கில் மனிதநேயம் மறந்து, பொருட்களின்மீது
நாட்டம்கொண்டு மனிதன் மனிதனாக வாழ மறந்து வருகிறான்...
பொருட்கள் நிரந்தரம் அல்ல, மனித
வாழ்வும் நிரந்தரம் அல்ல. நாம் பெரும் நற்பெயர், நல்ல சந்ததி
இவை யாவும் தொடர்ந்து நிலைக்கும்...
நீங்கள் வாழும் காலம்
அனைவருக்கும் உதவி செய்து மகிழ்ச்சியோடு வாழ வேண்டும். மகிழ்ச்சியில் மிகப்பெரிய
மகிழ்ச்சி மற்றவரை ஆனந்தப் படுத்தி பார்ப்பதுதான்.
ஆம்!, நம்மை
நாடியவருக்கு உதவும் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்...
அறிவு வளர்ச்சி
இல்லாதவர்களுக்கு எந்தவித ஆதாயம் பாராமல் உதவ வேண்டும். ஆதரவு இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும்
ஆறுதல் அளிக்கும்படி இயன்ற அளவு உதவ வேண்டும்...!
மாற்றுத்திறனாளிகளுக்கு, ஒதுக்கப்பட்டவர்களுக்கு
உள்ளுணர்வோடு, ஒருமனதோடு உதவ வேண்டும்...!
கல்லாதவர்களுக்கும், நம்மை நாடி
வந்தவருக்கு கள்ளமில்லாமல், நல்லுணர்வு காட்ட வேண்டும்...!
தன்னை உணராதவருக்கும், மனதால்
பாதிக்கப்பட்டவர்க்கும், முழு மனதோடு தன்னலமில்லாமல் பரிவு
காட்ட வேண்டும்...!
ஆம் நண்பர்களே...!
மனிதனுக்கு மனிதன் உதவி
செய்வது எவ்வளவு அவசியமோ, அதேபோல்
ஒட்டு மொத்த சமூக நலனுக்காக நாம் உதவி புரிவதும் மிக அவசியம்...!
உதவும் மனப்பான்மை பெருகப்
பெருக மனிதநேயமும் மனித சமூகமும் செழிப்படையும்; உலகம்
சீர்பெறும்...!!
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்...
"நன்மையும் தீமையும்
செயல்களில் இல்லை. செய்யும் செயல் என்னென்ன விளைவுகளைத் தருமோ அந்த விளைவைக்
கொண்டு தான் நன்மையும் தீமையுமாக பிரித்துப் பார்க்கிறோம். அது நன்மையான விளைவாக
இருந்தால் புண்ணியம் என்றும், தீமையான விளைவாக இருந்தால் பாவம் என்றும் கூறுகிறோம்.
பசி எடுக்கிறது. உணவு சாப்பிட்டுப் பசியைப் போக்கிக் கொள்கிறோம். ஆனால் நாவுக்குச்
சுவையாகவும், நன்றாகவும் இருக்கிறது என்பதற்காக அதிகப்படியாக
உண்டால் என்ன ஆகும்? இந்த உண்ட உணவே தீமையை உண்டாக்குகிறது.
அதாவது அளவு முறை மாறும் போது இன்பமே துன்பமாக மாறுகிறது.
ஆகவே செயலில் பாவம்
புண்ணியம் இல்லை. செயல்களின் விளைவைத்தான் கவனிக்க வேண்டும். இதற்கு ஒரு சாம்யம் (Formula) கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது பாவம் எது? புண்ணியம் எது? என்று
சிந்திக்க வேண்டும்.
புண்ணியம் எது?
எண்ணம், சொல்,
செயல் ஆகிய ஏதொன்றாலும் தனக்கோ, பிறர்க்கோ,
தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, அறிவிற்கோ, உடலுக்கோ துன்பம் தராது, விழிப்போடு துன்பங்கள் நீக்கும் வகையில் செய்யப்படும் செயல்கள் யாவும்
புண்ணியத்தின் பாற்படும்.
பாவம் எது?
ஒருவரது எண்ணம், சொல்,
செயல் இவைகளினால் எதனாலேனும் தனக்கேனும் பிறருக்கேனும், அன்றைக்கோ பிற்காலத்திலோ
உடலுணர்ச்சிக்கோ பகுத்தறிவுக்கோ துன்பம் விளைவதாக இருந்தால் அத்தகைய செயல்கள்
பாவம் என்பதாகும்.
* * * * * * * * * * * * * *
*
உதவி:
"இவ்வுலகில்
எவர்க்கெனினும் துன்பம் உண்டுபண்ண
எந்த அளவோ ஒருவர் உயிர்நலம்
பறிக்க
எவ்வகையிலும்
ஒருவர்க்குரிமையில்லை இல்லை.
இயற்கையின் சட்டமிது
காப்புமிது வாகும்.
செவ்வியஉன் அறிவாலே
செயல்திறமையாலே
செய்வது பிறர்க்குதவி சிறந்த
வாழ்வு ஆகும்.
ஒவ்வும்வகை யுற்றுணர்ந்து
உயிர்க்கினிமை செய்ய
உயிரனைத்தும் வாழ்த்தும் உனை
நீ யுலகை வாழ்த்து."
"உருவம் வரைக்கும்
குறுகிநின்ற
உணர்ச்சி நிலையே நர அகமாம்
அருவ மென்னும் பேரண்டம்
அறிந்த நிலையே
சுவர்அகமாம் பெருமையுள
விண் என்ற அணுவறிந்தோன்
விண்ணவனாம். ஆராய்ந்து
விண்கடந்து வான் அறிந்த
விவேகியே வானவனாம்."
- தத்துவஞானி வேதாத்திரி
மகரிஷி.
"மனிதனாக வந்த பிறகும்
பேரமைதிக்கு உரிய ஆறாவது அறிவு முதலிலேயே வளர்ச்சி பெறுவது இல்லை. புலன்
உணர்ச்சிகளிலேயே இச் சிறந்த நிலையான ஆறாவது அறிவு முடக்கப் பெற்று இயற்கை வளங்களை
உருமாற்றியும் நிலைமாற்றியும் அழகுபடுத்தியும் துய்க்கும் ஆற்றலாகச்
செயல்படுகிறது.
மனித உருவின் நோக்கம்
அறிவிற்கு எட்டாததாலும் புதிய புதிய பொருட்களை உற்பத்தி செய்தல் அனுபவித்தல்
என்பதில் பெறும் உணர்ச்சி மயக்கத்தாலும், விளைவறியாது பல செயல்களைப் புரிந்து, அவை பழக்கப் பதிவுகளாகவும் எண்ணப் பதிவுகளாகவும் பரம்பரைக் குண
அமைப்பாகவும் களங்கங்களை மனிதன் ஏற்படுத்திக் கொள்கிறான்.
மேலும் எந்த உணர்ச்சியையும்
துய்க்கும்போது விழிப்பு நிலையின்றி புலன் மயக்கில் இருப்பதால் அதே வித துய்ப்பில்
ஆசை பெருகிக்கொண்டேயிருக்கும். இதனால் நிறைவு ஏற்படுவதில்லை. இவ்வாறு நிறைவுபெறாமை, பாவப்
பதிவுகள், மனிதனாக வந்த நோக்கம் அறியாத மயக்கநிலை, இம்மூன்றும் மனித அறிவின் முதற்பகுதியில் உயிர்க் களங்கங்களாக அமைகின்றன.
துன்பங்களும் வாழ்க்கை சிக்கல்களும், சோர்வும் பெருகுகின்றன.
இங்குதான் மனிதன் சிந்திக்கிறான். இங்குதான் இயற்கைக்கும் அறிவிற்கும் உள்ள
தொடர்பு சிறிது சிறிதாக விளங்குகிறது. விழிப்புணர்வு பெற்று உடலுக்கும்
உயிருக்கும் அறிவிற்கும் உள்ள தொடர்பை உணர்கிறான். உடலை நன்கு நோயுராது
பாதுகாக்கவும் மனதின் வளத்தைப் பெருக்கிக் கொள்ளவும் மன அமைதியினை பாதுக்காக்கவும்
அக்கறை உண்டாகிறது. ஆற்றலும் பெருகுகிறது. விழிப்பு நிலையில் உலக இன்பங்களைத்
துய்த்து அறிவைப் பெருக்கி நிறைவு பெறுகிறான். பொருள் மயக்கத்திலிருந்து
விடுபடுகிறான்.
இயற்கையோடு ஒத்து
"தனக்கும் பிறர்க்கும் தற்காலத்துக்கும் பிற்காலத்துக்கும், உடலுக்கும்,
அறிவிற்கும் துன்பம் விளையாத முறையிலும் அளவிலும் செயலாற்றி"
பழிச் செயல்களை விளங்கிக் கொள்வதோடு மட்டுமின்றி முன்னம் அறியாமையால் அமைந்த
பழிச்செயல் பதிவுகளையும் மாற்றிக் கொள்கிறான். பொருள் மயக்கமும், பாவப் பதிவுகளும் போன பின் உயிரின் நிலையென்ன? தூய்மையடைந்து
விட்டது என்பதுதான். பேரறிவு, ஒளிவிடத் தொடங்குகின்றது. இந்த
அறிவின் ஒளியிலே தனது மூலமாகிய மெய்ப்பொருள் நிலையை உணர்ந்து கொள்கிறான். உணர உணர
உணர்ந்ததில் நிலைக்க நிலைக்க, அவனும் மெய்ப்பொருளாகவே
விளங்குகிறான். "ஐயப்படாது அகத்தது உணர்வானைத் தெய்வத்துள்
வைக்கப்படும்" என்ற வள்ளுவப் பேரறிஞரின் விளக்கம் இத்தகைய பேரறிவின் அமைதி
நிலையினைத்தான் விளக்குகிறது. அமைதியும் நிறைவும் பெற்றவன் தான் உண்மையான
அமைதிக்கு வழிகாட்ட முடியும்.
༺🌷༻தமிழர்
நலம்༺🌷༻
💥நன்றி!
கற்போம் கற்பிப்போம்!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
🌷🌷முக
மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்
எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
நல்லதே
நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல
எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...
இந்த
நாள் இனிய நாளாகட்டும்...
வாழ்க
🙌
வளமுடன்
அன்பே🔥இல்லறம்
🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி.
வணக்கம்.
- தமிழர் நலம்
💦💦💦💦💦💦💦💦💦💦💦💦
ஊக்கம் : உதவும் மனப்பான்மை...! - பாவமும் புண்ணியமும், சுவர்க்கம் நரகம் [ ஊக்கம் ] | Encouragement : Helping attitude...! - Sin and virtue, heaven and hell in Tamil [ Encouragement ]