உலகில் பிறந்த பலருக்கும் பலவிதமான சங்கடங்கள்-துன்பங்கள்-தோன்றுவது இயற்கை. இந்தச் சங்கடங்களிலிருந்து விடுபடுவது எப்படி என்று புரியாமல் பலர் குழம்புகின்றனர். குடும்பத்தில் ஏற்படும் தர்ம சங்கடத்தைத் தீர்க்க அவசரமாகக் கடன் வாங்குவர். பணம் வந்ததும், திரும்பத் தந்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் வட்டிக்கு வாங்குவார்கள்.
கடன் மற்றும் கஷ்டம்
தீர்க்கும் ஹேரம்ப கணபதி வழிபாடு!
உலகில் பிறந்த பலருக்கும் பலவிதமான
சங்கடங்கள்-துன்பங்கள்-தோன்றுவது இயற்கை. இந்தச் சங்கடங்களிலிருந்து விடுபடுவது
எப்படி என்று புரியாமல் பலர் குழம்புகின்றனர்.
குடும்பத்தில் ஏற்படும் தர்ம
சங்கடத்தைத் தீர்க்க அவசரமாகக் கடன் வாங்குவர். பணம் வந்ததும், திரும்பத் தந்து விடலாம் என்ற
நம்பிக்கையுடன் வட்டிக்கு வாங்குவார்கள்.
இந்த அவசரத் தன்மையை அறிந்த கடன்
கொடுப்பவர்கள் இரண்டு வட்டி, ஐந்து
வட்டி, பத்து வட்டி, மீட்டர் வட்டி என்று ஏதேதோ பெயர்களில்
தாராளமாகத் தருவார்கள்! இதற்கு கந்து வட்டி என்ற பெயரும் உண்டு.
இப்படி வட்டிக்குக் கடன் வாங்குபவர்கள்
சில மாதங்கள் வட்டியைத் தவறாமல் கட்டுவார்கள். பிறகு மெல்ல மெல்ல தர முடியாத சூழல்
ஏற்படும். வட்டி குட்டிமேல் குட்டிப் போட்டு அது வாங்கியதற்கு மேல் விஸ்வரூபம்
எடுத்து விடும்.
இப்படித் தாங்க முடியாத சங்கடங்களில்
மாட்டிக் கொண்டு முழிப்போரும், ருணத்தால்
விழி பிதுங்குவோரும் எல்லா நலமும் பெற வழிபட வேண்டியவர் ஹேரம்ப கணபதி.
இவருக்கு நான்கு தலைகள்! கடன்களையும், சங்கடங்களையும் தீர்க்கும் சுபாவம்
கொண்டவர்.
இவரைக் குளிரக் குளிர அபிஷேகம் செய்து
அவருக்க உரிய ஸ்லோகத்தை, குறைந்தது பதினாறு தடவை சொன்னால்
சங்கடங்கள் விலகும். ருணம் (கடன்) தீரும்.
இவருக்குரிய ஸ்லோகம்:
ஓம் நமோ ஹேரம்ப
மத மோதித மம சங்கடம்ச
மஹா சங்கடம்ச
நிவாரய ஸ்வாஹா!
ஓம் நமோ ஹேரம்ப
மத மோதித மம ருணம்
அதி ஸீக்ரமேவ
நிவாரய ஸ்வாஹா!
சங்கடத்தில் தவிப்பவர்கள் முதல்
ஸ்லோகத்தையும், ருண (கடன்)த்தால் தவிப்பவர்கள்
இரண்டாவது ஸ்லோகத்தையும் கூறவேண்டும்.
கூடியவரை அபிஷேகத்தை சங்கடஹர சதுர்த்தியில் செய்வது நலம்.🌹
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
விநாயகர்: வரலாறு : கடன் மற்றும் கஷ்டம் தீர்க்கும் ஹேரம்ப கணபதி வழிபாடு - குறிப்புகள் [ ] | Ganesha: History : Heramba Ganesha Puja for Solving Debt and Trouble - Tips in Tamil [ ]