எளிமையான சமையல் டிப்ஸ் உங்களுக்காக இதோ!

சளி, இருமல், தொண்டைப்புண், தொண்டை கரகரப்பு, தொண்டைக்கட்டு போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி நிவாரணம் தரும் கருப்பட்டி காபி.

[ சமையல் குறிப்புகள் ]

Here are some easy cooking tips for you! - Blackcurrant coffee gives instant relief for colds, coughs, sore throats, hoarse throats, and sore throats. in Tamil

எளிமையான சமையல் டிப்ஸ் உங்களுக்காக இதோ! | Here are some easy cooking tips for you!

சப்பாத்தி மிருதுவாக, சுவையை வருவதற்கு கோதுமை மாவு அரைக்கும் போது சோயா பீன்ஸை சேர்த்து அரைக்கவும்.

எளிமையான சமையல் டிப்ஸ் உங்களுக்காக இதோ!

 

சப்பாத்தி மிருதுவாக, சுவையை வருவதற்கு கோதுமை மாவு அரைக்கும் போது சோயா பீன்ஸை சேர்த்து அரைக்கவும்.

 

பனீர் சூடான உப்பு தண்ணீரில் போடு எடுத்தால் மென்மையாகிவிடும், அதன் பின்னர் கிரேவி செய்தால் சுவையாக இருக்கும்.

 

இட்லி கல்லு போல இருந்தால், இட்லி மாவில் இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து இட்லி சூட்டால் சாப்டாக இருக்கும்.

 

எலுமிச்சை பழ சேர்ப்பதில் சிரித்தவு இஞ்சி சாறு சேர்த்தால் சர்ப்பத்தின் சுவை அதிகரிக்கும்.

 

அசைவ குருமா செய்யும் போது துருவிய தேங்காயுடன், முந்திரி சேர்த்து அரைத்து பேஸ்டாக குருமாவில் சேர்த்தால் திக்காகவும், சுவையாகவும் இருக்கும்.

 

பாயசத்தில் முந்திரிக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை சிறு துண்டாக நறுக்கி நெய்யில் வறுத்து பாயசத்தில் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

 

சளி, இருமல், தொண்டைப்புண், தொண்டை கரகரப்பு, தொண்டைக்கட்டு போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி நிவாரணம் தரும் கருப்பட்டி_காபி.

 

தேவையான பொருட்கள்:

தண்ணீர் – 1 கப்

சுக்கு பொடி – 1 தேக்கரண்டி

கருப்பட்டி – 1 மேஜை கரண்டி

 

சுக்கு பொடிக்கு…

உலர்ந்த இஞ்சி/சுக்கு தூள் – 1/2 கப்

மல்லி – 2 மேஜைக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

மிளகு – 1 தேக்கரண்டி

பனங்கற்கண்டு – 3 மேஜைக்கரண்டி

 

செய்முறை:

முதலில் சுக்கு பொடி தயாரிக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அதனை காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுக்குப் பொடி ஒரு டீஸ்பூன் மற்றும் கருப்பட்டியை சேர்த்து, 2-3 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். பின்பு அதனை இறக்கி வடிகட்டினால், சூடான கருப்பட்டி காபி ரெடி!!!

 

வாழ்க வளமுடன்


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம் 

 

சமையல் குறிப்புகள் : எளிமையான சமையல் டிப்ஸ் உங்களுக்காக இதோ! - சளி, இருமல், தொண்டைப்புண், தொண்டை கரகரப்பு, தொண்டைக்கட்டு போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி நிவாரணம் தரும் கருப்பட்டி காபி. [ ] | cooking recipes : Here are some easy cooking tips for you! - Blackcurrant coffee gives instant relief for colds, coughs, sore throats, hoarse throats, and sore throats. in Tamil [ ]