""தயக்கமே தோல்விக்குக் காரணம்; துணிவு இருந்தால் வெற்றி வசமாகும்.. முடியாது என்பது மூடத்தனம்; முடியும் என்பது தன்னம்பிக்கை; என்னால் மட்டுமே முடியும் என்பது கர்வம். கடின உழைப்பால் வருவது வெற்றி. மனத்துணிவும், தன்னம்பிக்கையும் இருந்தால், ஒவ்வொருவரும் சாதிக்கலாம் ஒரு கிராமத்தில் பெரிய, சிறிய வயதுடைய பல சிறுவர்கள் ஒன்று கூடி விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அதில் பெரிய பையன்கள், சிறிய பையன்கள் எல்லோரும் இணைந்து பல விதமான விளையாட்டுகளை விளையாடிக் கொண்டு இருந்தனர். கிராமத்தில் உள்ள மரங்களில் ஏறுவது, குதிப்பது என்றும் ஆடிப் பாடிக் கொண்டு இருந்தார்கள் ,சிலர் பயத்தில் மரத்தில் ஏற மறுத்து விட்டனர்.பிறகு சிறுவர்கள் வீடு திரும்பினார்கள்.. அப்போது ஓரிடத்தில் ஒரு ஓடையைக் கடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது ஓடையின் அகலம் நான்கு அல்லது ஐந்து அடி இருக்கும் ஓடையில் தண்ணீர் நிறைந்து ஓடிக் கொண்டு இருந்தது. ஓடையை சில சிறுவர்கள் அனாவசியமாக தாண்டிக் குதித்துச் சென்றனர்.
"தயக்கமே தோல்விக்குக் காரணம்.''
""தயக்கமே தோல்விக்குக் காரணம்; துணிவு இருந்தால் வெற்றி வசமாகும்..
முடியாது என்பது மூடத்தனம்; முடியும் என்பது தன்னம்பிக்கை; என்னால் மட்டுமே முடியும் என்பது கர்வம்.
கடின உழைப்பால் வருவது வெற்றி. மனத்துணிவும், தன்னம்பிக்கையும் இருந்தால், ஒவ்வொருவரும் சாதிக்கலாம்
ஒரு கிராமத்தில் பெரிய, சிறிய வயதுடைய பல சிறுவர்கள் ஒன்று கூடி விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.
அதில் பெரிய பையன்கள், சிறிய பையன்கள் எல்லோரும் இணைந்து பல விதமான விளையாட்டுகளை விளையாடிக் கொண்டு இருந்தனர்.
கிராமத்தில் உள்ள மரங்களில் ஏறுவது, குதிப்பது என்றும் ஆடிப் பாடிக் கொண்டு இருந்தார்கள் ,சிலர் பயத்தில்
மரத்தில் ஏற மறுத்து விட்டனர்.பிறகு சிறுவர்கள் வீடு திரும்பினார்கள்..
அப்போது ஓரிடத்தில் ஒரு ஓடையைக் கடக்க வேண்டிய
நிலைமை ஏற்பட்டது
ஓடையின் அகலம் நான்கு அல்லது ஐந்து அடி இருக்கும்
ஓடையில் தண்ணீர் நிறைந்து ஓடிக் கொண்டு இருந்தது.
ஓடையை சில சிறுவர்கள் அனாவசியமாக தாண்டிக் குதித்துச்
சென்றனர்.
ஆனால் ஒரு சில சிறுவர்கள் பயந்த சுபாவமாக இருந்தவர்கள்
தண்ணீருக்குள் விழுந்து விடுவோமோ என்ற பய உணர்வில்
தாண்டிக் குதிக்க மறுத்து விட்டனர்.
எதிர்க்கரையில் இருந்தவர்கள் உற்சாகமூட்டியும்
அவர்கள் தாண்டிக் குதிக்கவில்லை.
அதற்கான முயற்சியை கூட அவர்கள் மேற்கொள்ளவில்லை
சிறிது தூரம் நடந்து சென்று தண்ணீர் குறைவாகச்
சென்ற இடத்தில் இருந்து ஓடையைக் கடந்து மறுபக்கம் சென்றனர்,
சிறுவர்களில் பலர் அபாரத் துணிவு மிக்கவர்களாக
காணப்பட்டார்கள்.
எதையும் செய்து பார்த்து விடலாம் என்ற மனத்துணிவு, தன்னம்பிக்கையும் கொண்டு விளங்கினார்கள். அதனால் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.
இங்கே சில சிறுவர்களுக்குப் போதிய துணிவு அவர்களிடம்
இல்லை .
நம்பிக்கையுடன் நாம் தாவிக் குதித்து விடுவோம்
என்ற எண்ணம் ஏற்படாததால் அவர்கள் ஓடையைத் தாவிக் குதிக்க
முடியவில்லை..
“வாழ்வில்
வெற்றி பெறுவதற்கு மனஉறுதியுடன் செயல்பட வேண்டும். மன உறுதி பெறுவதற்கு எதிரியாக இருப்பது
பயம்.
நாம் மன உறுதி பெறும் போது நம்மிடம் உள்ள பயம்
நம்மை விட்டுப் பறந்தோடி விடுகிறது”
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
தன்னம்பிக்கை : தயக்கமே தோல்விக்குக் காரணம் - குறிப்புகள் [ ] | self confidence : Hesitation is the cause of failure - Notes in Tamil [ ]