இத்தலங்கள் வைணவத் தலங்களாயினும் போத்திகளால் பூஜை செய்யப்படுகின்றன.
மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
இத்தலங்கள் வைணவத்
தலங்களாயினும் போத்திகளால் பூஜை செய்யப்படுகின்றன. பிரஸாதமாக சந்தனம். துளசி
மற்றும் புஷ்ட முதலியவற்றையும் கைபடாமல் தருகின்றார்கள். பெருமாளை ஆழ்வார்கள் அழைத்த பெயர்களை விட்டு வேறு
பெயரால் அழைப்பார்கள். பெரும்பாலும் தாயார் ஸந்நிதிகளே கிடையாது. திருவல்லவாவில்
விபூதி ப்ரஸாதம் கூடக் கொடுக்கிறார்கள். மஹாராஜாக்கள் உள்பட பெரிய மனிதர்கள் -
சிறிய மனிதர்கள் என்கிற பாகுபாடின்றி வேஷ்டியும் துண்டும் அணிந்து தான்
செல்லுகிறார்கள். சில கோயில்களில் கடைகளில் வேஷ்டிகள் வாடகைக்குக்
கொடுக்கிறார்கள். கோயில்களை மிகவும் தூய்மையாய் வைத்திருக்கிறார்கள்.
76) திருநாவாய்
சென்னை - கள்ளிக்கோட்டை ரயில் மார்க்கத்தில் உள்ள இந்த
ஸ்டேஷனிலிருந்து ஊரும் கோயிலும் 2 கி.மீ. தூரத்தில் உள்ளன. ஷோரனூரிலிருந்து பஸ்ஸில்
குட்டீபுரம் வந்து அங்கிருந்து வேறு பஸ்ஸில் திருநாவாய் வந்ததும் கோயிலை அடையலாம்.
சிறிய ஊர். வசதிகள் கிடையாது.
மூலவர் : நாவாய் முகுந்தன், நின்ற திருக்கோலம்
77) திருவித்துவக்கோடு
(திருவிச்சிக்கோடு, திருவிஞ்சிக்கோடு)
ஷோரனூர் - கள்ளிக்கோட்டை மார்க்கத்தில் பட்டாம்பி ரயில்
நிலையத்திலருந்து 3
கி.மீ. தூரம். ஷோரானூரிலிருந்து குருவாயூர் போகும். பஸ்ஸில் 15 கி.மீ. தூரம் சென்று இறங்கி ஒரு குறுகிய சாலையில் 2 கி.மீ. நடக்க வேண்டும்
மூலவர் : உய்யவந்த பெருமாள், நின்ற திருக்கோலம்.
78) திருக்காட்கரை (த்ரிக்காக்கரா)
ஆலவாய் - திருச்சூர் ரயில் மார்க்கத்தில் இருஞாலக்கொடி
(இரிஞ்சாலக்குடா) ஸ்டேஷனிலிருந்தும் அங்கமாலி ஸ்டேஷனிலிருந்தும் வடகிழக்கே சுமார் 15கி.மீதாத்திலிருக்கிறது. ஆலவாய் போகும் பாதையில் 7 கி.மீ சென்று, அங்கிருந்து வேறு பஸ்ஸில் ஒரு கிளைப்பாதையில் போக வேண்டும்.
கொச்சி, எர்ணாகுளத்தில்
தங்கிப் போகலாம்.
மூலவர் : காட்கரையப்பன், நின்ற திருக்கோலம்,
79) திருமூழிக்களம் (மூழிக்களம்)
ஆல்வாய் டவுனில் தங்கி அங்கிருந்து பஸ் ஏறி திருமூழிக்களம்
வரலாம். சாலையிலிருந்து சற்று தூரத்தில் பாரதப்புழை ஆற்றங்கரையில் கோவில் உள்ளது.
அங்கமாலி ரயில்வே ஸ்டேஷனிலிருந்தும் இங்கு பஸ்ஸில் வரலாம். இங்கு வசதிகள் எதுவும்
இல்லை.
மூலவர் : திருமூழிக்களத்தான், நின்ற திருக்கோலம்
80) திருவல்லவாழ் (திருவள்ளலா ஸ்ரீ வல்லப
க்ஷேத்ரம்)
கொல்லம் - எர்ணாகுளம் ரயில் மார்க்கத்தில் திருவல்லா ரயில்
நிலையத்திலிருந்து 5
கி.மீ தூரம், பஸ்
வசதிகளும் உள்ளது. திருவல்லாவில் சத்திரம் இருக்கிறது. எண் 80 முதல் 85 வரை உள்ள ஆறு ஷேத்திரங்களையும் ஸேவிக்கலாம்.
மூலவர் : கோலப்பிரான், நின்றக் கோலம்
81) திருக்கடித்தானம்
திருவல்லாவிலிருந்து கோட்டயம் சாலையில் 8 கி.மீ. பஸ்ஸில் சென்று, செங்கணச்சேரியில் இறங்பி, அங்கிருந்து வேறு சாலையில் கிழக்கே இரண்டு மைல் சென்று
இவ்வூரை அடையலாம். இங்கு வசதி ஒன்றும் கிடையாது.
மூலவர் : அத்புத நாராயணன், நின்ற திருக்கோலம்
82) திருச்செங்குன்றூர் (திருச்சிற்றாறு)
திருவனந்தபுரத்திலிருந்து கொல்லம் வழியாக எர்ணாகுளம்
செல்லும் ரயில் பாதையில் செங்கண்ணூர் திருவல்லாவிலிருந்து தெற்கே 10 கி.மீ. ஸ்டேஷன் இருக்கிறது.
மூலவர் : இமையவரப்பன், நின்ற திருக்கோலம்
83) திருப்புலியூர் (குட்ட நாடு)
செங்கண்ணூரிலிருந்து (மார்க்கம் 82 காண்க) மேற்கே 5 கி.மீ. தூரத்திலுள்ளது. வண்டியில் போகலாம். பஸ் வெகு
அரிதாகப் போகிறது. வசதி ஒன்றுமில்லை.
மூலவர் : மாயப்பிரான், நின்ற திருக்கோலம்
84) திருவாறன்விளை (ஆரம்முளா)
செங்கண்ணூரிலிருந்து கிழக்கே 9 கி.மீ, பஸ்ஸில் போகலாம், வசதிகள் குறைவு. ஆனால் தேவஸ்தான சத்திரம் இருக்கிறது.
மூலவர் : திருக்குறளப்பன், நின்ற திருக்கோலம்
85) திருவண்வண்டூர் (திருவமுண்டூர்)
ஷோரனூர் கள்ளிக்கோட்டை மார்க்கத்தில் பட்டாம்பி ரயில்
நிலையத்திலருந்து 3
கி.மீ. தூரம். ஷோரானூரிலிருந்து குருவாயூர் போகும் பஸ்ஸில் 15 கி.மீ. தூரம் சென்று இறங்கி ஒரு குறுகிய சாலையில் 2 கி.மீ. நடக்க வேண்டும்
மூலவர் : பாம்பணையப்பன், நின்ற திருக்கோலம்
86) திருவனந்தபுரம்
சென்னை - திருவனந்தபுரம் ரயில் மார்க்கத்தில்
திருவனந்தபுரம் ஹென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து சுமார் 1 கி.மீ. தூரத்தில் கோயில் இருக்கிறது.
மூலவர் : அநந்தபத்மநாபன், புஜங்கசயனம்
87) திருவாட்டாறு
திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோயில் போகும் பஸ்ஸில்
சென்று தொடுவெட்டி என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து வேறு பஸ்ஸல் 9 கி.மீ. சென்று இவ்வூரை அடைய வேண்டும். திருவனந்தபுரம் -
கன்னியாகுமரி ரயில் பாதையில் உள்ளது.
மூலவர் : ஆதிகேசவப் பெருமாள், புஜங்கசயனம்.
88) திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்)
திருவாட்டாற்றிலிருந்து தொடுவெட்டி வந்து,
பஸ் மாறி, நாகர்கோவில் - திருநெல்வேலி பஸ் மார்க்கத்தில் நாகர்கோவில்
வந்து, அங்கிருந்து
4 கி.மீ. தூரம் வடக்கே
சென்று இவ்வூரை அடைய வேண்டும்.
மூலவர் : திருக்குறளப்பன், வீற்றிருந்த திருக்கோலம்
89) திருக்குறுங்குடி (வாமன க்ஷேத்ரம்)
திருநெல்வேலியிலிருந்து நேர் பஸ் வசதியுள்ளது (அல்லது)
திருநெல்வேலியிலிருந்து 25 கி.மீ. நாங்குனேரிக்கு பஸ்ஸில் வந்து அங்கிருந்து வேறு
பஸ்ஸில் 12 கி.மீ.
கடந்து இங்கு வரலாம். இவ்வூரில் ராமாநுஜ கூடங்களும் மடங்களும் உள்ளன.
மூலவர் : நின்ற நம்பி, நின்ற திருக்கோலம்
90) திருச்சிரீவரமங்கை
(திருச்சிரீவரமங்கல
நகர், வானமாமலை,
நாங்குனேரி,
தோதாத்ரி க்ஷேத்ரம்)
திருநெல்வேலியிலிருந்து திருக்குறுங்குடி வரும் வழியில் நாங்குனேரியில்
இறங்கியோ அல்லது திருக்குறுங்குடியிலிருந்து திரும்புகையிலோ பெருமாளை ஸேவிக்கலாம்.
மூலவர் : தோதாத்ரிநாதன் (வானமாமலை) வீற்றிருந்த திருக்கோலம்
91 முதல் 98 வரை நவதிருப்பதி
திருத்தலங்களுக்கு விரிவான ஸ்தல புராணமும் முந்திய கட்டுரையில் எழுதி உள்ளோம். தெளிவாக
விவரித்துள்ளோம்.
99) திருவில்லிபுத்தூர் (ஸ்ரீவில்லிபுத்தூர்)
தென்காசி விருதுநகர் ரயில் பாதையில் ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்டேஷனிலிருந்து இப்பெரிய ஊர் 2-3 கி.மீ. தூரத்திலுள்ளது.
மூலவர் : வடபத்ரசாயீ (ரங்கமன்னார்). புஜங்கசயனம்
100) திருத்தண்கால் (திருத்தண்காலூர்)
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்தும் விருதுநகரிலிருந்தும் இங்கு
பஸ்ஸில் வரலாம். திருத்தண்கால் ரயில்வே நிலையம் விருதுநகர் - தென்காசி ரயில்
பாதையில் உள்ளது. சிவகாசியிலிருந்தும் வரலாம்.
மூலவர் : நின்ற நாராயணன், கிழக்கே திருமுக மண்டலம்
101) திருக்கூடல் (கூடலழகர் ஸந்நிதி - மதுரை]
மதுரை ஊருக்குள்ளே பஸ் ஸ்டாண்டு அருகாமையில் கூடலழகர்
ஸந்நிதி உள்ளது.
மூலவர் : கூடலழகர், வீற்றிருந்த திருக்கோலம்
102) திருமாலிருஞ்சோலை (அழகர் கோயில்)
மதுரையிலிருந்து 17-18 கி.மீ. பஸ்ஸில் போக வேண்டும். மதுரையில் தங்கியே
ஸேவிக்கலாம்.
மூலவர் : அழகர், கள்ளழகர், நின்ற திருக்கோலம்
103) திருமோகூர்
மதுரை பெரியார் பஸ் நிலையத்திலிருந்து டவுன் பஸ்கள் பல
நேராக திருமோகூருக்குப் போகின்றன.
மூலவர் : காளமேகப் பெருமாள், நின்ற திருக்கோலம்
104) திருக்கோட்டியூர் [கோஷ்டி க்ஷேத்ரம்]
மதுரையிலிருந்து பஸ்ஸில் திருப்பந்தூரையடைந்து அங்கிருந்து
சுமார் 10 கி.மீ.
தூரத்திலுள்ள திருக்கோட்டியூருக்கு சிவகங்கை பஸ்ஸில் செல்ல வேண்டும்.
மூலவர் : உரகமெல்லணையான், புஜங்கசயனம்
105) திருப்புல்லாணி [ராமநாதபுரம் - தர்ப்பசயனம்]
காரைக்குடியிலிருந்து ராமநாதபுரத்துக்கு நேராக பஸ்ஸில் வரலாம்.
அங்கிருந்து திருப்புல்லாணிக்கு பஸ்ஸில் போகலாம். சேதுக்கரை பஸ்ஸில் போய் ஆதிஸேது
என்ற இடத்தில் இறங்கி ஸமுத்ரஸ்நானம் செய்துவிட்டு திரும்பி பஸ்ஸில் 5 கி.மீ. வந்து திருப்புல்லாணி கோயிலை அடையலாம்.
மூலவர் : கல்யாண ஜகந்நாதன் (தெய்வச் சிலையார்) நின்ற திருக்கோலம்
106) திருமெய்யம்
புதுக்கோட்டைக்கும், காரைக்குடிக்கும் மத்தியிலிருக்கும் ரயில்வே ஸ்டேஷன்.
ஸ்டேஷனிலிருந்து கோவில் 1 மைல் தூரம், வசதிகள் நன்றாக இல்லை.
மூலவர் : ஸத்யகிரிநாதன், நின்ற திருக்கோலம்.
107) திருப்பாற்கடல் (வ்யூஹம்)
இங்கு இந்த ப்ராக்ருத சரீரத்துடன் போக முடியாது. நில உலகில்
கண்ணால் பார்க்க முடியாது.
மூலவர் : ஷீராப்தி நாதன் (வ்யூஹ நிலை), ஆதிசேஷ சயனம்.
108) திருப்பரமபதம் [ஸ்ரீவைகுண்டம், திருநாடு, பரம்]
இது பூலோகத்தில் இல்லை. இது வைஷ்ணவர்களின் லக்ஷ்யமான மோக்ஷ
நிலையாகும்.
மூலவர் : பரமபத நாதன், வீற்றிருந்த திருக்கோலம்
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : மலைநாட்டுத் திருப்பதிகள் - 13 - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Hill Country Tirupatis - 13 - Spiritual Notes in Tamil [ spirituality ]