கந்த சஷ்டி கவசம் உருவாகிய வரலாறு

ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீகம் ]

History of Kandha Shashti Kavasam - Spiritual Notes in Tamil



எழுது: சாமி | தேதி : 30-10-2022 12:32 am
கந்த சஷ்டி கவசம் உருவாகிய வரலாறு | History of Kandha Shashti Kavasam

முருகப்பெருமான் பற்றி துதி பாடும் பாடல்கள் எத்தனையோ ஆயிரங்கள் இருந்த போதிலும், அனைவரும் மதி மயங்கி கேட்கக் கூடிய அற்புதமான பாடல் தான் இந்த சஷ்டி கவசம் ஆகும்.

கந்த சஷ்டி கவசம் உருவாகிய வரலாறு.



 

முருகப்பெருமான் பற்றி துதி பாடும் பாடல்கள் எத்தனையோ ஆயிரங்கள் இருந்த போதிலும், அனைவரும் மதி மயங்கி கேட்கக் கூடிய அற்புதமான பாடல் தான் இந்த சஷ்டி கவசம் ஆகும்.

பால தேவராய சுவாமிகள் அவர்கள் இந்தக் கந்த சஷ்டி கவசத்தை உருவாக்கிய சூழ்நிலை தான் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது. ஒருசமயம் அவர் வயிற்று வலியால் கடுமையாக அவதிப்படுகிறார்கள். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்று வலிக்கு ஒரு விடிவு இல்லமால் போனது. வாழ்க்கையே வெறுத்துப் போகி இனி இந்த வேதனையில் உயிர் வாழவே விரும்பாமல் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவோடு அப்பன் முருகப் பெருமானுடைய அருபடைகளில் ஒருபடையான திருச்செந்தூருக்கு வந்தார். அனால் அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. ஏற்கனவே பாலதேவராய சுவாமிகள் அதி தீவிர முருக பக்தர் என்பதால் காணாததை கண்ட சந்தோசத்தால் வேதனைகள் மறந்து அந்த திருவிழாக் காட்சிகளைப் பார்த்து சற்றே கொஞ்சம் மனம் மாறினார். திருவிழா முடிந்த பிறகு தற்கொலை முடிவை எடுத்துக்கொள்ளலாம் என்றும் மனதில் நினைத்து முருகப் பெருமானையும் மனதில் எண்ணி,  வேண்டி சஷ்டி விரதம் இருக்கத் தொடங்கினார்.

 

முதல் நாள் ஆரம்பத்தில் அவர் கடலில் புனித நீராடி முருகப்பெருமானை வழிபட்ட பிறகு, அந்தக் கோயில் மண்டபத்தில் சற்றே கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் அமர்ந்தார். முருகப்பெருமானும் அவர் முன் தோன்றி காட்சி தந்து அவருக்கு அருள் புரிந்ததோடு மட்டுமல்லாமல் தனக்காக சஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்கு அளித்தார். அடுத்த சில நிமிடங்களே பாலதேவராய சுவாமிகள் மனதில் பக்தி வெள்ளமானது பெருக்கு எடுத்து ஓடியது. அந்த மன ஓட்டத்தில் சஷ்டியை நோக்க சரவண பவனர் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்... என்று துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார்...! அதற்கு அடுத்த 5 நாட்களுக்கு, முருகப்பெருமானின் அடுத்தடுத்த அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை திருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களை இயற்றி முடித்தார். ஆறு படையப்பன் சஷ்டி கவசங்களையும் பாலதேவராய சுவாமிகள் இயற்றி முடித்த போது, அவருடைய கடுமையான வயிற்றுவலியும் முடிந்து விட்டது. ஆம்  முற்றிலும் காணாமல் பறந்து போய் விட்டது. சுவாமிகள் சஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னை முருகப்பெருமான் சோதித்து அவருடைய திருவிளையாடல்களை தமக்கு புரிந்துள்ளார் என்பதை புரிந்துக் கொண்டார். கடைசியில் சென்னிமலை முருகப் பெருமான் சன்னதியில் பாடி அங்குத் தான் அரங்கேற்றம் செய்தார். திருவாசகத்திற்கு மனம் உருகாதவர்கள் யாரும் இல்லை என்றால், அவருடைய சஷ்டி கவசத்திற்கும் இன்றும் தங்கள் மனதை பறிகொடுக்காதவர்கள் உலகில் எவரும் இலர் என்பதே உண்மையும் கூட. இந்தக் கவசம் தெரியாதவர்கள் யாரும் கிடையாது. இது நம்முடைய வாழ்க்கைக்கு கூட கவசமாக அமைகிறது என்று சொல்லலாம். அத்தனை அபார சக்தி மிக்க பாடல் வரிகள் கொண்டது தான் இந்த சஷ்டி கவசம் ஆகும்.

 

பாம்பன் சுவாமிகள்

பாம்பன் சுவாமிகள் அவர்கள் அடிக்கடி மனம் உருகி கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார்கள். அப்படி ஒரு முறை பாராயணம் செய்கிற போது தானும் ஒரு கவசம் பாடலாம் என்று எண்ணியே அவர் பாடியது தான் இந்த சண்முக கவசம் ஆகும். இதுவும் ஆறு வகைகள் ஆகும். முருகனுக்கு சஷ்டி விரதம் 6 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதாவது, சஷ்டி விரதம் என்பது ஐப்பசித் திங்கள் பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து, ஆறாம் நாளான சஷ்டி திதியில் முடித்து சஷ்டி விரதத்தை நிறைவு செய்வது ஆகும். இதேபோல், இந்த ஆறு என்பதும் ஒரு விசேசம் ஆகும். அதாவது முருகப்பெருமானுக்கு முகங்களும் 6. படை வீடுகளும் 6. வளர்த்த கார்த்திகைப் பெண்களும் 6, சரவணபவ என்ற திருமந்திரமும் 6 எழுத்து ஆகும். பொதுவாக ஜாதகத்தின் ஆறாம் இடம் என்பது விரோதம், கடன், ரோகம், சத்ரு போன்றவற்றை குறிக்கும் இடம் ஆகும். அந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவரும் முருகப்பெருமான்தான். அதனால் நாம் அனைத்து படைகளின் சஷ்டி கவசம் பாடி வேண்டுதல் அபார சக்திகளை கொடுக்கும் வல்லமை வாய்ந்தது.

 

சஷ்டி கவச பாராயண பலன்கள்

ஒருவர் சஷ்டி கவசத்தை நாள்தோறும் பாராயணம் செய்து வந்தால் நாம் ஏற்கனவே சொன்னபடி வியாதிகள் விலகி விடும். மனம் ஒருபொழுதும் வாடாமல் எப்போதும் மகிழும். மேலும் குறைவின்றிப் பதினாறு செல்வங்களும் பெற்று பேரும் புகழுடனும் நீண்ட நாட்கள் வாழலாம். நவக்கிரகங்களும் மகிழ்ந்து நன்மை அளித்திடுவார்கள், திருமணம் பாக்கியம் கிட்டும். குழந்தை பாக்கியம் கிட்டும்....! இப்படி இன்னும் நிறைய பலன்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. கந்த சஷ்டி கவசம் என்பது நம்மைத் தீமைகளிலிருந்தும், கஷ்டத்திலிருந்தும் காக்கும் ஒரு கவசமாகும். கவசம் என்றாலே அனைவருக்கும் தெரியுமே! நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒரு பாதுகாப்புப் பொருள் ஆகும். யுத்தக் காலத்தில் போர் வீரர்கள் தங்களை காக்க கவசம் பயன் படுத்துவதைப் போல கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும், அனைத்துக் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது.

இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள் இவர் ஒரு முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே மூச்சாக சுவாசம் செய்பவர். அவர் மிகவும் எளிய முறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார். சஷ்டி கவசத்தை தினமும் இருமுறை அதாவது காலையிலும் மாலையிலும் பாட அந்த முருகனே உங்கள் வீடுகளில் வலம் வந்து காட்சி தந்துவிடுவான். ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று தான் தொடங்குகிறது. அவரை நோக்கினால் எந்தக் கெடுதல்களும் நம்மை நோக்காது. அனைத்து நோய்களையும் தீர்க்க வல்லது. நாம் முருகனின் திருவடியை விடாது பிடித்தால் நம்மை மகிழ்ச்சி விடாது. சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள். முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே தினந்தோறும் கந்த சஷ்டி கவசம் பாடி படித்து வர, உங்கள் கவலைகள் பறந்தே போகும்.

 

சஷ்டி கவசம் பாடுவதனால் என்ன பயன்?

ஷஷ்டி விழா என்றாலே முருகனுடைய ஆலயங்கள் அனைத்தும் விழாக் கோலமாகத் தான் கட்சி தரும். முருகனின் பாடல்கள் என கோயில் முழுவதும் ஒலித்துக்கொண்டே இருக்கும். கந்த சஷ்டி கவசத்தை முப்பத்தாறு தடவை ஓதி நிறைவு செய்வது: எதற்காக? ஏன்? நன்கு சிந்தித்தோம் என்றால் சஷ்டி கவசத்தை அருளியவர் பாலதேவராயர்.

காலையில் மாலையில் கருத்துடன் நாளும்

ஆசாரத்துடன் அங்கம் துலக்கி

நேசமுடன் ஒரு நினைவதுவாகிக்

கந்தர் ஷஷ்டி கவசம்

ஒருநாள் முப்பத்தாறு உருக் கொண்டு

ஓதியே ஜெபித்து உகந்தநீறு அணிய

அஷ்ட திக்குள்ளோர் அடங்கலும் வசமாய் என்கிறார்....

ஆகவே அன்பர்களே!

தினமும் ஓதி பாட முடியவில்லையே என்று வருத்தம் அடையாமல், ஷஷ்டி ஆறுநாள் விழாவில் ஏதாவது ஒரு நாளில் ஷஷ்டி கவசத்தை முப்பத்தாறு தடவை பாடினாலே நாம் மனதில் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும்.

 

இது பலரின் அனுபவ உண்மை...

நீங்களும் ஓதி பயனடைவீர்..

 

குறிப்பு : ஷஷ்டி கவசத்தை பாராயணம் செய்யும் அன்பர்கள் ஒவ்வொரு பாராயணம் நிறைவு செய்யும் பொழுது முருகனுக்கு நறுமணம் மிக்க மலர்கள் இட்டு, தீபாராதனை செய்து, நமது  நெற்றியில் முழுக்க திருநீறு பூச வேண்டும்.....

36 தடவை பாராயணம் செய்தவுடன் தேனும், தினை மாவும் கலந்து முருகனுக்கு நெய்வேத்யம் காட்டிய பிறகு அதைப் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுத்து வந்து பூஜையை நிறைவு செய்து வர, உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறும்..

ஓம் சிவ சண்முக சிவ ஓம்

 

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்


ஆன்மீகம் : கந்த சஷ்டி கவசம் உருவாகிய வரலாறு - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | spirituality : History of Kandha Shashti Kavasam - Spiritual Notes in Tamil [ spirituality ]



எழுது: சாமி | தேதி : 10-30-2022 12:32 am

தொடர்புடைய வகை



தொடர்புடைய தலைப்புகள்