1912 ஆம் ஆண்டில், அன்னா ஜார்விஸ் "மே மாதத்தில் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை" மற்றும் "அன்னையர் தினம்" ஆகிய வாக்கியங்களைப் பதிவுசெய்து அன்னையர் தின சர்வதேச அமைப்பை உருவாக்கினார் உலகில் தாய்க்கு ஈடாக ஒப்பிட எதுவுமே இல்லை' அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்றும், ‘தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை என்ற வரிகள் தாய்மையின் புனிதத்துவம், தாய்மையின் பெருமை, தாய்மையின் தியாகம் போன்றவற்றை உணர்த்துகிறது.. குழந்தையுடன் இருக்கும் தாய்க்கு நிகரான அழகான காட்சி உலகில் ஏதும் இருக்கமுடியாது.. இறைவன் அனைத்து உயிர்களுக்கும் உடனிருக்க முடியாது என்ற காரணத்தால் தன் பிரதிநிதியாக தாயைப் படைத்தார்..
அன்னையர் தின வரலாறு
......
1912 ஆம் ஆண்டில், அன்னா ஜார்விஸ் "மே மாதத்தில் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை" மற்றும் "அன்னையர்
தினம்" ஆகிய வாக்கியங்களைப் பதிவுசெய்து அன்னையர் தின சர்வதேச
அமைப்பை உருவாக்கினார்
உலகில் தாய்க்கு ஈடாக ஒப்பிட எதுவுமே
இல்லை' அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’
என்றும், ‘தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை என்ற
வரிகள் தாய்மையின் புனிதத்துவம், தாய்மையின்
பெருமை, தாய்மையின் தியாகம் போன்றவற்றை
உணர்த்துகிறது..
குழந்தையுடன் இருக்கும் தாய்க்கு
நிகரான அழகான காட்சி உலகில் ஏதும் இருக்கமுடியாது..
இறைவன் அனைத்து உயிர்களுக்கும்
உடனிருக்க முடியாது என்ற காரணத்தால் தன் பிரதிநிதியாக தாயைப் படைத்தார்..
பெண் தன் வாழ்நாளில் எத்தனையோ
பாத்திரங்களில் வலம் வந்தாலும் 'அன்னை' என்ற பாத்திரம்தான் மிக உன்னதமான
இடத்தை வகிக்கிறது. தாய்மை என்பது ஓர் உன்னதமான உணர்வு.
அத்தகைய தாயைப் போற்றவே மே மாதத்தின்
இரண்டாவது ஞாயிறு அன்னையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
வசந்த காலத்தின் துவக்கத்தை
கிரேக்கர்கள் பல வகைகளில் கொண்டாடினர்.
அதில் தாய் தெய்வத்தை வணங்குவதும்
ஒன்றாகும்.
கிரேக்கர்கள் தெய்வமாக வழிபட்டு வந்த
க்ரோனஸின் மனைவி ரேஹாவைத்தான் அவர்கள் தாய் தெய்வமாக வழிபட்டனர்.
கலை நிகழ்ச்சிகள் விளையாட்டு வீர
சாகசங்கள் நிகழ்த்தி அன்னையை
மகிழ்ச்சிப்படுத்தினர்...
அன்னையின் மதிப்பு நாம் வழங்கும்
அன்பினாலன்றி பணத்தினால் தீர்மானிக்க முடியாது.
அன்னையர் தினம் என்பது உண்மையான
அன்பிற்காகவும் தனது அன்னைக்கு நன்றி கூறும் விதத்திலும் இருக்க வேண்டும்
அன்னையர் தினத்தில் எங்கெங்கோ வாழும்
பிள்ளைகள் தங்களது தாயை நினைவு கூர்ந்து தங்களது நன்றியையும் வாழ்த்துக்களையும்
தெரிவிக்கின்றனர்.
அன்னையை போற்றாத எவரும் வாழ்க்கையில்
வெற்றி பெற முடியாது. சிறந்த சமுதாயத்தை உருவாக்க அன்னையர்களின் பங்களிப்பு
முக்கியமானது.
"எந்த குழந்தையும், நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, பின்பு, நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே' என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப
சமுதாயத்துக்கு நல்ல மனிதர்களை உருவாக்கி வழங்குவது அன்னை தான்.
தீய வழியில் செல்லும் குழந்தைகளை
திருத்தி நல்வழிக்கு கொண்டு வருவதும் அன்னை தான். இகோவிலுக்கு சென்று கடவுளை
வணங்குவதை விட, நாம் இந்த உலகுக்கு வர காரணமாய் இருந்த
அன்னையை இந்த நாளில் மனதார போற்றி வணங்குவோம்.
சொர்க்கம் அன்னையின் காலடியின்
இருக்கிறது என்பது
ஆன்றோர் மொழி
சில வெளி நாட்டுப் பிள்ளைகள்
படிக்கும்போது விடுதியிலோ,
வயது வந்தபின் தனித்தோ வாழும்போது, ‘அன்னையர் தினம்’ நாளில் மட்டுமே
சந்தித்து பரிசளித்து வாழ்த்துக்கூறி கொண்டாடப்படும் கலாச்சாரம் நிலவுகிறது...
உயிருடன் இருக்கும்போது முதியோர்
இல்லத்திலும் தனிமையிலும் தவிக்கவிட்டுவிட்டு இறந்தபின் திதிகொடுத்து தானம் செய்து
பெருமையை பறைசாற்றிக்கொள்கிறார்கள்..
தாயென்னும் கோவிலை காக்கமறந்திட்ட
பாவியடி கிளியே என்று சோக ராகம் பாடுகிறார்கள்..
தாயார் கும்பகோணத்தில் பசியில்
தவிக்கையில் பிள்ளை காசியில் அன்னதானம் செய்கிற
மாதிரி !
குடும்ப உறுப்பினர்களும் அன்னையர் தின வாழ்த்துக்கள் மட்டும்
சொல்லிகடந்து விடாமல் இன்றிலிருந்தாவது தாயிடம் மனம் விட்டு பேசுவதுடன் அவள்
மனதில் என்ன நினைக்கிறாள் என்று அவள் கருத்தையும் கேட்டு அவளையும் சகமனுஷியாக
மதித்து அவள்தான் குடும்பத்தின் ஆணி வேர் என்பதை உணர்ந்து நடந்து கொள்வதே அவளுக்கு
நாம் தரும் சிறந்த அன்னையர் தின பரிசாகும்.✍🏼🌹
தாய் தந்தையரை வயசான காலத்திலும் கூட
வச்சிருந்து பணிவிடைகள் செய்வது தான் பெத்த கடனுக்கு வட்டியாவது கட்டியதாகும்...
என்று முதியோர்
இல்லங்கள் மூடப்படுகின்றனவோ அன்று தான் உண்மையான 'தாய் - தந்தையர்' தினம்...!_
அன்னையர் தின வாழ்த்துக்கள்.✍🏼🌹
அன்னையர் தினம் பற்றி இதுபோன்ற ஒரு கவிதையை படித்திருக்க
மாட்டீர்கள் படித்துப் பாருங்கள் கண்களில் கண்ணீர் கசியும்
சூரியனுக்கே
முகவரி கொடுப்பது போல்... !
தேனுக்கே
சுவையூட்டுவது போல்... !
மல்லிகைக்கே
மனத்தை சேர்ப்பதுபோல்....!
கடலிடமே ஆழத்தை பற்றி
பேசுவது போல்....!
அன்னைக்கே
தினம் கொண்டாடுகிறோம்...
தினம் தினம்
கொண்டாட வேண்டிய
அன்னையை
ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடுகிறோம்... !
அன்னைக்கு....
கவிதைகள்
ஆதரவு அளித்தது போல்
பெற்றெடுத்த பிள்ளைகள்
ஆதரவளித்திருந்தால்.....
முதியோர் இல்லங்களும்
பெற்றோர் காப்பங்களும்
தோன்றியிருக்குமா...?
உதிரத்தை
பாலாக ஊட்டியவலுக்கு
ஒருவேளை
கஞ்சி ஊத்த
முடியாமல் போய்விட்டதே
இதயம் என்ன இரும்பா ?
மனம் என்ன கல்லா ?
யாரென்றே
தெரியாதது போல்
தெருவீதியில்
அநாதையாய்
விட்டுவிட்டுப் போகிறார்களே !
எங்கே
அழியுங்கள் பார்க்கலாம்
தொப்புள் கொடியின்
அடையாளத்தை...?
வயிற்றையே ! அறையாக்கி
வளர்த்தெடுத்த அன்னைக்கு
வீட்டில் ஒரு அறை
இல்லாமல் போய்விட்டதே....!!
வயிற்றில்
மடியில்
தோளில்
மார்பில்
இடுப்பில்
மனதில்
சுமை என்று
ஒருநாளும்
நினைக்காமல்
தூக்கி வளர்த்த
தாயைத் தான்.....
ஒவ்வொரு நாளும்
சுமை என்று
நினைக்கிறார்களே...!
அவள்
தூங்கிய
நாட்களைவிட
பிள்ளைகளுக்காக
விழித்திருந்த
நாட்கள்தான் அதிகமடா...
அவள்
உண்டு மகிழ்ந்ததை விட
பிள்ளைகள்
உண்பதைக் கண்டு
மகிழ்ந்து தான் மிகுதியடா...!
தனக்காக அழுத
நாட்களை விட
பிள்ளைகளுக்காக
அழுத நாட்களே அதிகமடா...!
அகிலமே !
கெட்டவன் என்று
சொன்னாலும்.....
தாயின் அன்பில்
அணுவளவும்
பிள்ளை மீது
அன்பு குறைந்தது உண்டா?
தன்னை
அநாதை என்று
ஆசிரமத்தில் விட்டாலும்...
பார்க்க முடியவில்லை என்று
முதியோர் காப்பகத்தில்
சேர்த்தாலும்....
எந்த தாயாவது
பிள்ளைகளை
சபித்தது உண்டா.....?
பிள்ளைகள்
நடப்பதற்காக
நடவண்டியாய்....
உறங்கும்போது
தாலாட்டாய்...
தவளும் போது தரையாய்...
குளிக்கும் போது
பணிப்பெண்ணாய்....
பேசும்போது
பயிற்சியாளராய்....
விளையாடும்போது
விளையாட்டு பொம்மையாய்....
படிக்கும்போது
ஆசிரியராய்....
சோகத்தின் போது
தோழியாய்...
சுமையின் போது
தூணாய் இருந்த அனைக்கு. ...
பிள்ளைகள்
கடைசி காலத்தில்
துணையாகக் கூட இருக்க
மனம் இல்லாமல்
போய்விட்டதே.....!
வயதானத் தாயை
மலத்தைப் போல்
அறுவெறுருப்பாக பார்க்கின்ற பிள்ளைகளே.....!
நீ குழந்தையாக
இருக்கும் போது
உன் மலத்தை
முகம் கூட சுளிக்காமல் அப்புறப்படுத்தியவள் என்பதை
நீ அறிவாயா...?
முடியாத காலத்தில்
படுக்கையில்
ஒரு முறையேனும்
சிறுநீர் கழித்து விட்டால்....
சீற்றத்தோடு
முப்பது நிமிடம் திட்டும்
பிள்ளைகளே...!
உன் குழந்தை பருவத்தில்
உன் தாயின்
மடியிலேயே நீ
சிறுநீர் கழித்தாலும்....
"என் செல்லம்
சிறுநீர் வந்திருச்சா? "என்று
உச்சி முகர்ந்து
முத்தம் கொடுப்பதோடு
மட்டுமல்லாமல்.....
அந்த ஈரத்தோடே
நாளெல்லாம் இருப்பாளே!
அதை என்றாவது
நீ நினைத்துப்
பார்த்திருக்கிறாயா....?
தான்
மழையில்
நனைந்தாலும்
வெயிலில்
காய்ந்தாலும்
தன்பிள்ளை
நனையக் கூடாத
காயக் கூடாதென்று
முந்தானையில் மூடி
பாதுகாப்பாக
உன்னை வீடுவரை
கூட்டி வருவாளே.....
அதை உன்னால்
எப்படி மறக்க முடிந்தது...?
அவளை எப்படி
உன்னால்
வெறுக்க முடிந்தது....?
அன்னையர் தினத்தைப் போல்
இனியாவது
அன்னையையும்
கொண்டாடுவோம்.....!
அன்னைக்காக
எழுதிய கவிதையை
தவறாமல் வாசிப்பது போல்
அன்னையையும் தவறாமல்
நேசிப்போம்......!
♥அன்னையராயிருக்கும் அனைவருக்கும் எனது அன்னையர் தின நல்வாழ்த்துகள்
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி! வணக்கம்.
- தமிழர் நலம்
அம்மா : அன்னையர் தின வரலாறு - தாயிற் சிறந்த கோவிலும் இல்லை [ ] | Mother : History of Mother's Day - There is no better temple for Mother in Tamil [ ]