நாமக்கல்லில் நடுநாயகமாக விளங்கி வருவது நாமக்கல் மலைக்கோட்டையாகும். கல்லாலான பாறையில் நாமம் போலக் காணப்பட்டதால் நாமக்கல் என்று அழைத்துள்ளனர்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் வரலாறு
நாமக்கல்லில் நடுநாயகமாக விளங்கி வருவது நாமக்கல்
மலைக்கோட்டையாகும். கல்லாலான பாறையில் நாமம் போலக் காணப்பட்டதால் நாமக்கல் என்று
அழைத்துள்ளனர்.
பின்னர் அந்தப் பெயர் மாறி (மருவி) நாமக்கல் எனப் பெயர்
பெற்றதாகக் கூறப்படுகிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் சிறு
கிராமமாகவே இருந்துள்ளது. இப்பகுதியில் பெய்யும் மழைநீர் ஓடிவந்து பாறையின்
அருகில் உள்ள பள்ளமான பகுதியில் தேங்கி உள்ளது. இந்த இடத்தைக் குளம் என்று
அழைத்துள்ளனர். இந்தக் குளத்தில் கமலம் மலர்கள் அதிகம் பூத்து இருந்துள்ளது.
கமலம் என்றால் தாமரை என்ற பெயரும் உண்டு. கல்விக்குத்
தெய்வமான லட்சுமிக்குத் தாமரை மலர்கள் உகந்த மலராகும். அதனால்தான் தாமரைப் பூவில்
லட்சுமி அமர்ந்துள்ளார். தாமரைப் பூவில் அமர்ந்தவளே என்றும்பாடப்படுவதும் உண்டு.
அதனால், அந்தக்
குளத்தைக் கமலாலய குளம் என அழைத்து வந்துள்ளனர். தாமரை நிறைந்த குளத்தின் அருகிலேயே,
லட்சுமி தாயார் கோவிலை அமைத்து மக்கள் வழிபட்டு
வந்துள்ளனர். அந்தக் காலக்கட்டத்தில், நேபாளத்தில் உள்ள கண்டக நதியில் ஆஞ்சநேயர் புளித நீராடிய
போது. ஒரு சாளக்கிராமம் (திருமாலின் வடிவமாக கருதப்படும் புனிதமான கல்) ஒன்று
கிடைத்துள்ளது. அதனை பூசைக்காக எடுத்துக்கொண்டு வான் வழியாகப் பறந்து வந்து கொண்டு
இருந்தபோது, இங்குள்ள
கமலாலய குளத்தைக் கண்டுள்ளார்.
அதில் நீராட நினைத்த ஆஞ்சநேயர் கீழே இறங்கியுள்ளார். கையில்
எடுத்துவந்த சாளக்கிரகாமத்தைக் கீழே வைக்க முடியாமல், என்ன செய்வது என யோசித்துக் கொண்டு இருந்தபோது,
குளக்கரையின் அருகில் மகாலட்சுமி தாயார் தவம் இருப்பதைக்
கண்டுள்ளார். அங்கு சென்ற ஆஞ்சநேயர், மகாலட்சுமி தாயாரைப்
பார்த்து வணங்கி, தாங்கள்
தவம் இருப்பதற்கான காரணம் என்னவோ எனக் கேட்டுள்ளார். அதற்கு,
திருமாலை நரசிம்மன் வடிவில் நான் பார்த்தது இல்லை. அந்த
வடிவத்தைக் காண தவம் இருப்பதாக மகாலட்சுமி தாயார் கூறியுள்ளார்.
ஆஞ்சநேயர், மகாலட்சுமி தாயாரின் கையில் சாளக்ராமத்தைக் கொடுத்துவிட்டு,
குளத்தில் நீராடிவிட்டு வந்து வாங்கிச் செல்வதாகக் கூறிச்
சென்றுள்ளார். அதற்குக் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்து வாங்கிக் கொள்ள வேண்டும்.
அப்படி வாங்கிக் கொள்ளாவிட்டால், சாளக்கிராமத்தைக் கீழே வைத்து விடுவேன் என லட்சுமி தாயார்
நிபந்தனை விதித்துள்ளார். குளத்தில் நீராடச் சென்ற ஆஞ்சநேயரால் குறிப்பிட்ட
நேரத்திற்குள் வரமுடியாமல் ஏனோ காலதாமதம் ஆனது. இதனால், சாளக்கிராமத்தை லட்சுமி தாயார் கீழே வைத்துவிட்டார்.
தாமதமாக வந்த ஆஞ்சநேயர். சாளக்கிராமத்தைக் கையில் எடுத்தபோது அது முடியாமல் போனது.
அது பெரியமலையாக உருவெடுத்துள்ளது. இந்த மலையில் நரசிம்மர் தோன்றி லட்சுமி
தாயாருக்கு அருள்பாலித்துள்ளார். அது முதல் இவர் லட்சுமி நரசிம்மர் என அழைக்கப்பட்டார்.
ஆஞ்சநேயரும் இங்கேயே தங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. சாளக்கிராமத்தைக் கொண்டு வந்த
ஆஞ்சநேயருக்கு நரசிம்மர் கோவில் எதிரே தனிக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்
18 அடி உயரத்தில்
எழுந்தருளி இருக்கிறார்.
நல்லெண்ணையால் செய்யப்பட்ட உழுந்து வடையிலான வடமாலை
சாற்றுதல். சந்தனக்காப்பு, வெண்ணெய்க் காப்பு, புஷ்பங்கள். விசேஷ திரவியங்கள், அனைத்து வகையான காய்களால் செய்யப்படும் அலங்காரம்,
முத்தங்கி அலங்காரம், கல் முத்தங்கி அலங்காரம் ஆகியவை ஆஞ்சநேயருக்கு
உகந்தவையாகும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
ஆன்மீகம்: ஆஞ்சநேயர் : நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் வரலாறு - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spirituality: Anjaneya : History of Namakkal Anjaneyar Temple - Notes in Tamil [ spirituality ]