41. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை.
இல்லறவியல் இல்வாழ்க்கை 41. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. இல்லறத்தில் உள்ளவன்தான். அறவழியில் உள்ள பிரம்மச்சாரி. வானப் பிரஸத்தன், துறவி ஆகிய மூவருக்கும் வழித்துணையானவான்! 42. துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. துறவிகளுக்கும், வறுமையுற்றோருக்கும், துணையின்றி இறப்பவர்களுக்கும் இல்லறத்தானே துணையானவான். 43. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான்என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. முன்னோர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐவருக்கும் வேண்டிய கடமையைச் செய்வதே இல்லறத்தின் சிறப்பாகும். 44. பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் அல். பழிக்கஞ்சிச் சேர்த்த பொருளைப் பலருடன் பகிர்ந்துண்ணும் பண்பும் பயனும் ஆகும். 45. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. இல்லானிடம் அன்பும் அறநெறியில் வாழும் இல்லறத்தின் பண்பும் பயனும் ஆகும். 46. அறத்தாற்றின் அல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின் போஒய்ப் பெறுவது எவன்? அறநெறியான இல்வாழ்க்கை நடத்துவதே சரியான தவ வாழ்க்கையாகும். 47. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை. வாழும் முறைப்படி இல்லறத்தை நடத்துபவன் தவத்தைச் செய்யும் முனிவர்களை விட மேலானவான் 48. ஆற்றின் ஓழுக்கி அறன்இழுக்கா; இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து. பிறரை அறநெறியில் நடக்கச் செய்து தானும் தருமம் தவறாமல் நடந்தால் தவம் செய்பவரை விட மேலானது ஆகும். 49. அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று. இல்லறமே துறவறத்தை விட மேலானதும். துறவறமும் பிறன் பழிப்பதில்லாமல் நடத்தப்பட வேண்டும். 50. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும். உலக வாழ்க்கையில் அறநெறியோடு வாழ்பவன். விண்ணுலகில் வாழும் தெய்வத்திற்கு ஒப்பாவான். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். அதிகாரம்: 5
திருக்குறள்: பொருளடக்கம் : இல்லறவியல் - அதிகாரம்: 5, இல்வாழ்க்கை [ திருக்குறள் ] | Tirukkural: Table of Contents : home economics - Chapter: 5, Life in Tamil [ Tirukkural ]