81. இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி வேளாண்மை செய்தல் பொருட்டு.
விருந்தோம்பல் 81. இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி வேளாண்மை செய்தல் பொருட்டு. இல்லறத்தில் மனைவி மக்களோடு பொருளை ஈட்டிக் காத்து வாழ்வதெல்லாம், விருந்தினரை இனிய முகத்தோடு வரவேற்று உபசரித்து காப்பதற்காகவே ஆகும். 82. விருந்து புறத்தாத் தான்உண்டல் சாவா மருந்துஎனினும் வேண்டற்பாற் றன்று. விருந்தினர் வெளியில் பசித்திருக்க, தான் உண்ணுதல் சாவா மருந்தாகிய அமுதம் என்றாலும் வேண்டத்தக்கது அன்று. 83. வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று. நாள்தோறும் நாடிவரும் விருந்தினரை உபசரிப்பவன் வாழ்க்கை வறுமையுற்று வருந்திக் கெடுவதில்லை 84. அகன்அமர்ந்து செய்யான் உறையும் முகன்அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல். இனிய முகத்துடன் விருந்தினரை உபசரிப்பவன் இல்லத்தில் திருமகள் மனம் மகிழ்ந்து உறைவாள். 85. வித்தும் கடல்வேண்டும் கொல்லோ விருந்துஓம்பி மிச்சல் மிசைவான் புலம்? வந்த விருந்தினரைப் பாதுகாத்து, உணவளித்துப் பிறகு வரப்போகும், விருந்தினருக்காக எதிர்ப்பார்த்திருப்பவன் விண்ணவர்க்கே விருந்தினனாவான். 86. செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்துஇருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு. வந்த விருந்தினரைப் பாதுகாத்து, உணவளித்துப் பிறகு வரப்போகும். விருந்தினருக்காக எதிர்ப்பார்த்திருப்பவன் விண்ணவர்க்கே விருந்தினனாவான். 87. இனைத்துணைத்து என்பதொன்று இல்லை; விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன். விருந்தோம்புதலாகிய நோன்பின் பயன். இன்ன அளவினது என்பதில்லை, விருந்தினரது தகுதியே அதற்கு அளவாகும். 88. பரிந்துஓம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார். விருந்தினரை அன்புடன் உபசரித்து நோன்பின் பயனைப் பெறாது பொருள் ஒன்றையே காத்து நின்றவர் பிறகு தரித்திரராய் உதவத்துணையின்றி வருந்துவர். 89. உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை; மடவார்கண் உண்டு. செல்வம் உள்ள காலத்தில் ஏழ்மை என்பது, விருந்தினரை உபசரிக்காது விடுவதே ஆகும். அது பேதையரிடம் உள்ள குணமாகும். 90. மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. அனிச்ச மலர் முகர்ந்த அளவில் வாடிவிடும். விருந்தினரோ முகம் கடுக்கப் பார்த்தாலே. வாடிவிடுவர். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். அதிகாரம் : 9
திருக்குறள்: பொருளடக்கம் : விருந்தோம்பல் - அதிகாரம் : 9 [ திருக்குறள் ] | Tirukkural: Table of Contents : Hospitality - Authority : 9 in Tamil [ Tirukkural ]