வெற்றியாளனாக இருக்க எப்படி நம்மை மாற்ற வேண்டும்?

"வாழ்க்கையை வீணாக்காதீர்கள்"

[ அனுபவம் தத்துவம் ]

How do we change ourselves to be successful? - "Don't Waste Life" in Tamil

வெற்றியாளனாக இருக்க எப்படி நம்மை மாற்ற வேண்டும்? | How do we change ourselves to be successful?

நாம் முதலில் நம்முடைய பலத்தை நன்கு அறிந்துகொள்ள வேண்டும். அதைக் கொண்டு வெற்றி பெற முயல வேண்டும். வெற்றியடையும்போது கற்றுக்கொள்வதை விட தோல்வியடையும்போது நாம் அதிக நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள் கிறோம்.

வெற்றியாளனாக இருக்க எப்படி நம்மை மாற்ற வேண்டும்?

நாம் முதலில் நம்முடைய பலத்தை நன்கு அறிந்துகொள்ள வேண்டும். அதைக் கொண்டு வெற்றி பெற முயல வேண்டும்.

 

வெற்றியடையும்போது கற்றுக்கொள்வதை விட  தோல்வியடையும்போது நாம் அதிக நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறோம்.

 

தோல்விதான், மதிப்புடைய நண்பர்களையும், உறவினர்களையும் நமக்கு அடையாளம் காட்டுகிறது. தோல்வியின்போது   நம்முடன் இருப்பவரே நமது உண்மை யான நலம் விரும்பிகள்.

 

தோல்வி நமது மனவலிமை, மனவுறுதி பற்றிய உண்மையான அறிவைத் தருகிறது.

நாம் எப்போது பின்னடைவுகளிருந்து.  மேலும் வலிமையுடனும், திறமையுடனும் எழுகிறோமோ, அப்போது  நமது வாழ்க்கை தானாக வெற்றியடையும்.

பல தோல்விகளுக்குப் பிறகு கிடைக்கும் வலி மிகுந்த வெற்றியே உண்மையான  வெற்றி.

 

விடை தெரிந்த

கேள்விகளுடன்

துணிவதல்ல வாழ்க்கை

விடை தெரியாத

கேள்விகளுக்கும்

விடை சொல்ல

துணிவதே வாழ்க்கை

 

ஒரு நோக்கத்துடன் வாழ்வதே,

வாழ்க்கையின் நோக்கமாக இருந்தால் நம்நோக்கம் நிறைவேறும்

 

நம் வாழ்வின் ஒவ்வொரு

நிகழ்வும் நமக்கானவையே

வாழ்வில், தெரிந்தோ தெரியாமலோ தவறுகள் நிகழ்வது, இயற்கையானதே

 

அவ்வாறு நிகழும் தவறுகளிலிருந்து, தகுந்த பாடம் கற்றுக் கொள்ளத் தவறுவது தான், மிகப் பெரிய தவறு

 

எண்ணங்களே, வாழ்க்கையின் வண்ணங்கள்

 

எண்ணங்களை மாற்றினால், வாழ்க்கையின், வண்ணங்களையும் மாற்றலாம்.

🪷🦜🪷 நாக்கு மூன்று அங்குலம் தான் ஆனால் அது ஆறடி மனிதனையே கொன்றுவிடும்.🪷

 

🪷🦜🪷 பிடிக்கிறது என்பதற்காக பக்கம் பக்கமாய் பேசி விடாதீர்கள்🪷

 

🪷🦜🪷 அதுவே பின்னாளின் அலட்சியத்துக்கு முக்கிய காரணமாய் அமைந்து விடும்.🪷

 

🪷🦜🪷 எதிர்பார்ப்புக்காகக் கொஞ்சம் பேசுங்கள். சிலவற்றை ஒளித்து வையுங்கள். சிலவற்றை மறைத்து வையுங்கள்.🪷

 

🪷🦜🪷 அன்புடனும் கனிவுடனும் பேசிப் பழகுங்கள் அது உங்களையும் உங்கள் குணத்தையும் மேலும் அழகாக்கும்.🪷

 

🪷🦜🪷 அதிகம் பேசி அவதிப்படுவதை விட அமைதியாக இருந்து நிம்மதியை பெற முயற்சிப்பதே வாழ்க்கைக்கு நல்லது.🪷

 

🪷🦜🪷அடுத்தவர்களை குறை சொல்லி நாம் நல்லவர்கள் ஆகிவிட முடியாது.🪷

 

🪷🦜🪷 நாம் நல்ல மனதோடு இருந்து விட்டால் அடுத்தவர்களின் குறையே கண்ணுக்கு தெரியாது.🪷

 

🪷🦜🪷 நீ சொல்வதை கேட்க ஒரு கூட்டம் உண்டென்றால்,🪷

 

🪷🦜🪷 நீ நல்லதை மட்டுமே சொல்ல வேண்டிய கட்டாயம் உனக்கு உண்டு.🪷

 

🪷🦜🪷 யாரையும் வீண் காகிதமாக எண்ணாதே, அது ஒருநாள் பட்டமாக பறக்கும். நீ கூட நிமிர்ந்துதான் பார்க்க வேண்டும்.🪷

 

🪷🦜🪷  தங்களைச் சார்ந்த  அனைவரும் அவரவர்  குலதெய்வத்தின்  அருளுடன்  கூடிய  சகல சம்பத்தும் பெற்று இன்புற்று வளத்துடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என இறைவனிடம்  பிரார்த்தனை செய்கிறோம்.🪷

🌹வாழ்கையில் காயம் படும் போது ஏற்படும் வலியும் வேதனையும்🌹

 

🌹நமக்கு வாழ்க்கைக் கற்றுத் தரும் நல்லதொரு மறக்கக் கூடாத பாடம்🌹

 

🌹அதாவது எடுத்தமா கவுத்தமானு முடிவு பண்ண வாழ்க்கை ஒன்னும் வாட்டர்கேன் இல்ல🌹

 

🌹அது ஊற வச்ச துணி மாதிரி தொவச்சமா தொங்கப் போட்டமானு போய்ட்டே இருக்கும்🌹

 

🌹ஆகையால் பல துன்பங்களையும் சின்னச் சின்ன அவமானங்களையும் சந்தித்தால் தான் வாழ்க்கையில் உயர முடியும்🌹

 

🌹சாதிக்க நினைப்பவன் மட்டுமே அதிகமாக சோதிக்கப்படுவான்🌹

 

🌹நம் கவலைகளைக் காலணியாகக் காலிலும் மகிழ்ச்சியை கீரிடமாகத் தலையிலும் சூடிக் கொள்🌹

 

🌹தன்னம்பிக்கை இல்லாதவனுக்கு எந்தக் கடவுளையும் நம்பிப் பயன் இல்லை🌹

 

🌹தன்னம்பிக்கை உள்ளவனுக்கு

எவனைக் கண்டும் பயம் இல்லை🌹

 

🌹முயற்சியால் எதுவும் முடியும்

பயிற்சியால் எல்லாம் படியும்🌹

 

🌹முடியாததை முயற்சி உடைக்கும்

முடியாதது என்பதே இல்லை🌹

 

🌹உழைப்பை நம்பி நடை போடு

உன்னை வெல்ல யாரும் முடியாது👍

எவரின் குறுக்கீடுகளும் ஆதிக்கமும் இன்றி இயல்பாய் பயனித்துக் கொண்டிருக்கும் வரை வாழ்க்கை அழகாகத்தான் இருக்கும்.

 

சில மூன்றாம் நபரின் நாடகங்களால் இங்கு பிரிந்தவர்களின் வாழ்க்கை பல உண்டு.

 

வேடிக்கை பார்க்கின்ற கூட்டத்திற்கு

பாதிக்கப்பட்டவர்களின் வலிகள் புரியாது.

 

பொய்யும், நடிப்பும் கூட்டத்தில்

கொண்டாடப்படும். உண்மையும், அன்பும், தனிமையில் தள்ளாடும்.

 

பொய், புறங்கூறுவது போன்ற செயல்களால் முன்னேறலாம் என நினைக்கக் கூடாது. அது ஒரு நாள் மிகப்பெரிய அழிவில் கொண்டு போய்

விட்டுவிடும்.

நம் வாழ்க்கை நம் கையிலா

நம் வாழ்க்கை நம் கையில் என்கிறார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள்.

 

இவ்விதி எல்லோருக்கும் பொருந்துவதில்லை.

பொருந்தியவருக்கும் ஒரு நாள் பொய்யாகிப் போகக்கூடும்.

 

சில நேரங்களில் சினத்தில் விலங்குகளை மிஞ்சுகிறான் மனிதன், பல நேரங்களில் அன்பில் மனிதனை மிஞ்சுகிறது விலங்குகள்.

 

எல்லாமே நம்பிக்கை தான் நம் மனதை திடமாக வைத்திருப்போம்.

சிறு சிறு கற்களாக எடுத்துப்போட்டாலும் காலம் கடந்து பார்க்கையில் ஒரு கோட்டையே உருவாகி விடும் காலம் அனைத்தையும் மாற்றவல்லது.

 

நம்பிக்கை உடையவருக்கு தோல்வி என்பது ஒரு தொடக்கமாகவே தென்படும்.

 

போராட்டமே வாழ்க்கை நம்பிக்கையே வெற்றி நம்பிக்கை சிறு நூல் தான் ஆனால் அந்த நூலில் கட்டி காற்றாடியை அல்ல கற்பாறையையும் பறக்க விடலாம்.

 

நம்பிக்கைகளை எண்ண  அலைகளாக மாற்றுங்கள் அதில் புதிய லட்சியங்களை  ஏவுகணைகளாய் ஏற்றினால் வெற்றி நிச்சயம்.

 

தேடிப் பார், கிடைக்காதது ஒன்றும் இல்லை,

 

ஓடிப் பார், உயராதவன் எவனுமில்லை,

 

சோர்ந்து விடாதே, சோகத்தில் ஆழ்ந்து விடாதே,

 

உலகம் பெரியது ஆனால் அதில் வாய்ப்புகள் சிறியது,

 

நேரங்கள் வாய்ப்பை உருவாக்குவதில்லை,

 

முயற்சி தான் வாய்ப்பை உருவாக்கும்,

 

நேரத்திற்காக காத்திருக்காதீர்கள்,

 

முயற்சியோடு முன்னேறிச் செல்லுங்கள்.

 

ஒரே நாளில் எதுவும் மாறி விடுவதில்லை. ஒவ்வொரு நாளின் முயற்சியைப் பொறுத்தே உள்ளது உங்கள் வளர்ச்சி,

 

உங்களின் நிகழ்காலத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், எதிர்காலம் உங்களை வரவேற்கும்,

 

சுமைகளைக் கண்டு பயந்து விடாதே,

 

இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான்,

 

என்ன நடந்தாலும் தன் குறிக்கோளில் மிகத் தெளிவாக இருப்பவனுக்குத் தான் இந்த உலகத்தை வெல்லும் சக்தி இருக்கிறது.

 

வாழ்க்கை நேசத்தைக்

கற்றுத் தருகிறது..

 

அனுபவம் யாரை நேசிக்க வேண்டும் என்பதைக் கற்றுத் தருகிறது..

 

சூழ்நிலை உங்களை யார் நேசிக்கிறார்கள் என்பதைக் கற்றுத் தருகிறது!

 

யாரை நம்ப வேண்டும்,யாரை நம்பக் கூடாது

என்பதைப்

பற்றியெல்லாம் கற்றுக் கொள்வதற்கு

சில துரோகங்கள்

நிச்சயம் தேவை.

🥎நமது இலக்கை நாம் அடைந்து விடுவோம் என்று எப்போதும் நேர்மறையாகச் சிந்திப்பவர்கள் உறுதியாக அந்த இலக்கை அடைந்து விடுவர்🥎

 

🥎ஏனெனில் அவர்களது நேர்மறை எண்ணம் அவர்களுக்கு அளிக்கும் உந்துதலும் ஆற்றலும் இலக்கை நோக்கி பயணிக்க வைக்கும்🥎

 

🥎நம்மால் முடியாது என்ற எதிர்மறையாக எண்ணும் போது அந்த எண்ணமே நம்மை வீழ்த்தி விடும்🥎

 

🥎இன்றைய போட்டி மிகுந்த உலகில் நம்முடைய வாழ்க்கைப் பயணமானது மிகவும் கடுமையானது🥎

 

🥎வெற்றி என்பது குருட்டு நம்பிக்கையால் அமையாது. அது கடும் உழைப்பால்தான் சாத்தியப்படும்🥎

 

🥎வெற்றி பெறவேண்டும் என்னும் தாகம் உங்கள் மனதில் இருந்துகொண்டே இருக்க வேண்டும்🥎

 

🥎நம்பிக்கை நிறைந்தவர் 

ஒரு நாளும் யார் முன்னேயும் 

மண்டியிட்டது இல்லை🥎

 

🥎எந்த ஒரு காரியத்தையும் 

நம்பிக்கையோடு செய்தால் 

யார் உதவியும்

தேவையில்லை🥎

 

🥎நம்பிக்கை தான் வாழ்க்கை முயற்சி செய்யுங்கள் வெற்றி நிச்சயம் 👍

"வாழ்க்கையை வீணாக்காதீர்கள்"

வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டுமானால் முதலில் உங்கள் முன்னுரிமைகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.

 

உங்களுக்கு எது வேண்டாம்? என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டாம். நீங்கள் எப்படி இருக்க விரும்புகிறீர்கள் என்று பாருங்கள், அதனை நோக்கி வேலை செய்யுங்கள்.

 

உங்கள் திறமை, தகுதி, நீங்கள் வாழும் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல நிலைமை வழிக்கு வரும். எந்த விதமான வீட்டில் வாழ வேண்டும்,? எந்தவிதமான செயல் செய்ய வேண்டும்? என்று நினைப்பதை விட்டு விட்டு,

 

"நான் மற்றவர்களுக்கு உதவும் நோக்கத்தில் இருக்க விரும்புகிறேன், நலமாக, மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன்" என்று சொல்லத் தொடங்குங்கள்.

 

மற்ற செயல்கள் இதைச் சுற்றித் தானாகச் சீரடையும்.

 

நீங்கள் அன்றாடம் பத்து மைல் நடக்கலாம், ஒரு விலை உயர்ந்த கார் வைத்திருக்கலாம் அல்லது ஒரு சைக்கிளில் பவனி வரலாம் - அதுவல்ல முக்கியம்

 

உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வது, அதன் ஒவ்வொரு அம்சத்தையும் அனுபவிப்பது அது தான் முக்கியம், இல்லையா?

வெற்றி நிச்சயம்.

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

அனுபவம் தத்துவம் : வெற்றியாளனாக இருக்க எப்படி நம்மை மாற்ற வேண்டும்? - "வாழ்க்கையை வீணாக்காதீர்கள்" [ ] | Philosophy of experience : How do we change ourselves to be successful? - "Don't Waste Life" in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்