
சாது, சன்னியாசிகள், இறைவன் முட்டை வடிவில் இருக்கும் (oval shpae) ஒரு ஒளிப்புள்ளி என தொன்றுதொட்டு வர்ணித்து வருகின்றனர். உருவங்கள், விக்ரஹங்கள், சிலைகள், அல்லது ஏதாவது நினைவுச் சின்னங்கள், பெறும்பாலான மதங்களில் வழிபடுவதற்கான சாதனங்களாக உள்ளன.
உலகில் உள்ள மதங்கள் எவ்வாறு இறைவனை வர்ணிக்கின்றன?
சாது, சன்னியாசிகள், இறைவன் முட்டை
வடிவில் இருக்கும் (oval shpae) ஒரு ஒளிப்புள்ளி என
தொன்றுதொட்டு வர்ணித்து வருகின்றனர். உருவங்கள், விக்ரஹங்கள்,
சிலைகள், அல்லது ஏதாவது நினைவுச் சின்னங்கள்,
பெறும்பாலான மதங்களில் வழிபடுவதற்கான சாதனங்களாக உள்ளன. பொதுவாக அவை
இறைவனின் (முட்டைபோன்ற) வடிவத்தை நினைவூட்டுபவையாக உள்ளன.
*இந்தியாவில், இந்து மதத்தில், இறைவன் லிங்க உருவில் சிவலிங்கம்
என்று பூஜிக்கப்படுகிறார். இறைவனான சிவன், சோமநாத், விஸ்வநாத், முக்தேஷ்வரர், எனப்
பலவிதமாக அவருடைய சிறப்பை வர்ணித்து வழிபடப்படுகிறார்.
கிறித்தவ தர்மத்தில், பழைய ஏற்பாட்டில், பாலைவனத்தில், ஒரு பேரோளியுடன் எரிந்துகொண்டிருந்த
ஒரு புதர், புனித மோசஸ் அவர்களுக்கு தெய்வீகக் காட்சியாகத்
தென்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறே ஜேகப் அவர்களுக்கு, மண்ணுக்கும் விண்ணுக்கும் இடையில் ஒரு ஏணிப்படியும், அதில் ஏறியும் இறங்கியும் வருகின்ற தேவதைகளும் திருக்காட்சியாக
தென்பட்டது. அவர், தான் தலைக்குத் தலையணையாக உபயோகப்படுத்திய
முட்டை வடிவான கல்லை, செங்குத்தாக வைத்து, அதன்மீது எண்ணை அபிஷேகம் செய்து வழிப்பட்டார். டமாஸ்கஸ் செல்லும் போது,
புனிதபால் அவர்களுக்கு ஒரு ஒளி காட்சியாகத் தென் பட்டது. இயேசு
இறைவனை ஒளியாக வர்ணித்தார். பல கிறித்தவ மதத்தின் வழிபாடுகளில், பல ஒளிக் கிரணங்களை வீசும் ஒரு தங்கப் பந்தை உபயோகிக்கின்றனர். இது இறைவனின்
உருவை நினைவு படுத்துகிறது போலும் சீக்கிய மதஸ்தாபகர் குருநானக் ஒரே ஒரு நிராகார
இறைவனை குறிப்பிடுகிறார்.
*இஸ்லாமிய தர்மத்தில் ஆதாம்,
சொர்க்கத்தைவிட்டு கீழ் இறங்கி வந்தபோது ஒரு முட்டைவடிவான கல்லைப்
பார்த்தார். இக்கல்லை அவர் எடுத்து, அதைச் சுற்றிலும் 7 முறை வலம் வந்து இறைவனின் புகழ் பாடினார். அதன் பிறகு "காபா"
வை உருவாக்கினார். பிறகு ஆப்பிரஹாம் இந்த ஸ்தலத்தை ஒரு கோவிலாக உருவாக்கினார்.
பிறகு இதைச் சுற்றி “மெக்கா” உருவாகியது. அந்த முட்டை வடிவான கல் சங்-இ- அஸ்வாத் என
அழைக்கப்பட்டது. எண்ணற்றவர்கள் முத்தமிட்டு வந்ததால், அது
இப்போது கறுப்பாகி விட்டது என நம்புகின்றனர். எனவே இது ஒன்றுதான் இஸ்லாமிய
தர்மத்தில் வழிபாட்டுப் பொருளாக உள்ளது என்கின்றனர்.
* பழைய காலத்தின் எகிப்து நாட்டினர், சூரியனைக் கடவுளாக
வழிபட்டுவந்தனர்.
* சௌராஷ்டிரர்கள் நெருப்பைக் கடவுள் என
நம்புகின்றனர்.
* புத்த தர்மத்தில், ஒரு கருப்புக் கல்லை
ஒவ்வொரு வீட்டிலும் வைத்து தியானம் செய்கின்றனர். அதை “கர்னி” அமைதியை
அளிக்கவல்லது என்று பொருள்படக் கூறுகின்றனர்.
இவற்றிலிருந்து மனித சமுதாயம் பலவாறு
இறைவனை வழிபட்டு அவரை அடைய முயன்றுவருகின்றனர் என்பது தெளிவாகிறது. ஒருவர்தான்
இறைவன். அவருடைய உருவம் ஒளி உருவம். தியானத்தின் போது, அவருடன் தொடர்பு கொள்ள
வேண்டுமானால், இந்த அவருடைய உருவத்தை அறிந்திருப்பது
அவசியமாகும்,
உருவம் இருந்தால் அதற்கு ஒரு பெயரும்
இருக்க வேண்டும் அல்லவா? ஆகவே இறைவனுக்கும் பெயர் உண்டு. பல மொழிகளில் பற்பல பெயர்கள் அவருக்கு
சூட்டப்பட்டுள்ளன. அவையாவும் அவருடைய பல்வேறு சிறப்புகளையே குறிப்பிடுபவையாக
உள்ளன. அவற்றில் தலை சிறந்த பெயராவது சிவன். இது சமஸ்கிருதத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருளாவது; முழுஉலகிற்கும்
நன்மை புரிபவர் என்பதாகும். சிவன் என்பது இறைவனைக் குறிக்கின்றது. இந்தியாவில்
இந்தச் சொல்லுடன் பாபா என்பதையும் சேர்த்துக்கொள்கின்றனர். பாபா என்றால் தந்தை
என்று அர்த்தம். அதாவது இறைவனுடன் ஒரு உறவையும் ஏற்படுத்துகின்றனர். ஆகவே 'சிவபாபா' என்கிற சொல், அவருடைய
தொழில் மற்றும் உறவையும் நினைவு படுத்துகிறது. இந்து மதத்தில் குறிப்பிடப்படுகிற
"சங்கர்" என்கிற சிவபெருமானின் தவக்கோல உருவுடன் “சிவன்” என்கிற
இந்தச் சொல்லைச் சேர்த்து குழப்பம் அடையக்கூடாது. சங்கர் வேறு. சிவன் வேறு சங்கர்
ஒரு சூட்சும தேவதை, சூட்சும உலகில் வசிப்பவர், ஒரு தவசி (தவம் செய்பவர்) உருவில் அவர் சித்திரிக்கப்படுகிறார். அவரும்
சிவனால் படைக்கப்பட்டவர்தான். அவருடைய தொழில் அழிப்பது.
* பகவான் எங்கு வாசம் செய்கிறார்? நான்
அங்கு சென்று அவரைக் காணமுடியுமா? இறைவன் ஒரு
ஒளிப்புள்ளியானவர், ஆகவே அவர் இந்த ஸ்தூல உலகில்
இருக்கமுடியாது. அவர் இந்த ஸ்தூல உலகிற்கு அப்பாற்பட்டு இருக்கவேண்டும். அவருடைய
உறைவிடத்தை நான் அறிந்துகொண்டால், நான் எனது மனதின் மூலமாக,
அங்கு சென்று அவரைச் சந்திக்க முடியும். ஆத்மா - பரமாத்மாவின்
உண்மையான உறைவிடம் ஆத்ம உலகம்தான். சூட்சுமமான, பொன்மய
சிவப்பு நிறமான அந்த உலகை தியானத்தின் போது காணமுடியும், ஒளி
மயமான இந்த உலகம் வெகு தொலைவில் இருந்தாலும். ஒரு கணத்தில் நான் எனது மனம் என்கிற
வாகனம் மூலமாக அங்கு சென்று, எண்ணத்தின் மூலமாக அவரைச்
சந்திக்க இயலும். ஆகவே எனக்கும் அவருக்கும் இடையில் உள்ள தூரம் ஒரு எண்ணம் தான்.
இந்த முற்றிலும் தூய்மையான நிசப்தமான அமைதி தவழும் உலகில் இறைவன், எந்த ஒரு மாற்றத்திற்கும் உட்படாது ஸ்திரமாக இருந்து வருகையில் இந்த ஸ்தூல
உலகமும் ஆத்மாக்களும் ஒவ்வொரு கணமும் மாற்றம் அடைந்து வருகிறது.
இறைவனின் இல்லமும் குழந்தைகளின்
(ஆத்மாக்கள்) இல்லமும். ஒன்றே இறைவன் மனிதர்களின் இதயத்தில் வாசம் செய்கிறார்
என்று கூறுவதும் ஒரு விதத்தில் சரியே. ஏனெனில், அவருடைய அன்பு அவ்வாறு நம்மை நம்பச் செய்கிறது. ஆக
உண்மையில் அவரது இல்லம் ஆத்ம உலகமே!
எனக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள இடம்
மற்றும் உருவ ஒற்றுமையின் ஆதாரத்தில், எனது உண்மையான குணாதியங்களான அமைதி, தூய்மை, அன்பு ஞானம், சக்தி
மற்றும் பேரானந்தம் ஆகியவற்றை தியானத்தின் போது இறைவனிடமிருந்து பெறுகிறேன்.
ஏனெனில், அவரே இக்குணங்களின் கடலாகத் திகழ்கிறார்.
ஆத்மாக்களாகிய நாம் அமைதி. அமைதியின்மை, அன்பு, வெறுப்பு, ஞானம் - அறியாமை, இன்பம்
- துன்பம் ஆகிய உணர்வுகளில் மாறி மாறி வரும் போது இறைவன் மாறுபாடுகளுக்கு
உட்படாதவராய், நிரந்தரமாய் உள்ளார். மேலும் மனிதக் கோட்பாடுகளுக்கும்,
சிந்தனை களுக்கும் அப்பாற்பட்ட வராய் உள்ளார். மனித குலத்தின்
துக்கத்தை நீக்கி சுகத்தை அளிப்பவரும் அவரே!
இறைவன் ஒவ்வொரு அணுவையும்
அறிந்திருக்கிறார் ஒவ்வொருவர் எண்ணத்தையும் புரிந்திருக்கிறார் என மனிதர்கள்
கருதுகின்றனர். அவர் ஞானக்கடல் ஆகவே அவர் ஒவ்வொரு அணுவையும் அறிந்துள்ளார் என்கிற
கருத்து தவறானதாகும். இந்த உலகை அறிவது என்றால் ஒவ்வொரு அணுவையும்
அறிந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு இலையின் அசைவையும் தெரிந்திருக்க
வேண்டியதில்லை. உலகின் இக்காலத்திய சூழ்நிலையை, அதற்கான காரணத்தை அறிந்திருந்தால் போதுமானது.
உண்மையில் இவ்வுலகின் மூன்று காலத்தையும் உணர்ந்தவராவார்.
இறைவன் ஞானக்கடல். ஆகவே அவர் அந்த
ஞானத்தின் மூலமாகவே, மனிதர்களின் புத்தியில் இருந்து வரும் அறிவை மாற்றி அமைத்து அவர்களை
உயர்த்துகிறார். அவர் தம்மைப் பற்றிய ஞானம், மற்றும்,
படைப்பின் ஆதி, மத்திமம், மற்றும் இறுதி பற்றிய ஞானத்தை வழங்குவதால், நாம்
இந்த எல்லையற்ற நாடகத்தின் ரகசியங்களை உணர்ந்து, நாம் யார்,
நம்முடைய அனாதியான குணங்கள் யாவை என்பதையும் அறிகின்றோம்.
அக்குணங்களை நம்முள் அனுபவமும் செய்கின்றோம். மேலும் கர்மாவின் பலன் பற்றிய
ரகசியங்களையும் அவர் நமக்கு எடுத்துரைக்கின்றார்.
இறைவன் ஒருவர்தான் உண்மையில் சுயநலமற்றவர்.
மனிதர்களின் செயல்கள் யாவும் சுயநலம் மிக்கவையாகவே உள்ளன.
ஆன்மீக பணியில்!
தமிழர் நலம்
நன்றி...🙏
ஞானம் : உலகில் உள்ள மதங்கள் எவ்வாறு இறைவனை வர்ணிக்கின்றன? - இறைவனின் பெயர், உறைவிடம், சிறப்புகள். (குணாதிசயங்கள்), சர்வக்ஞன் [ ஞானம் ] | Wisdom : How do world religions describe God? - Lord's Name, Abode, Qualities. (characteristics), omniscient in Tamil [ Wisdom ]