முதலாவதாக வருவது சூரிய முத்திரை. கிரகங்களில் முதன்மையாக வைத்துப் போற்றப்படுவது நவக்கிரகங்கள். நவக் கிரகங்களில் முதலாவதாக வருவது சூரியன்.
சூரிய முத்திரை
முதலாவதாக வருவது சூரிய
முத்திரை. கிரகங்களில் முதன்மையாக வைத்துப் போற்றப்படுவது நவக்கிரகங்கள். நவக்
கிரகங்களில் முதலாவதாக வருவது சூரியன்.
வானில் பல அண்டங்கள்
உள்ளன. ஒவ்வொரு அண்டத்தின் நடுவிலும் சூரியன் ஒருவன்தான் நடுநிலையாக இருந்துகொண்டு
ஒளி வீசுகிறான்.
ஆங்கிலத்தில் சோலார்
சிஸ்டம் (Solar System) என்றும் ஜோதிட சாஸ்திரத்தில் சூரிய சித்தாந்தம்
என்றும் குறிப்பிடப்படுகிறது.
நம் தமிழ்ப்
பாரம்பரியப்படி, நம் முன்னோர்களை அடியோட்டி, சூரியனை தந்தையாகவும், பூமியைத் தாயாகவும்
குறிப்பிட்டு வழிபட்டு வருகிறோம். சூரியனை மையமாக வைத்தே எல்லாக் கோள்களும்
இயங்குகின்றன. இந்த அடிப்படையில், மோதிர விரலை பஞ்ச பூதங்களில்
பூமியாகவும், கட்டை விரலை சூரியன், அதாவது நெருப்பாகவும்
கொள்ள வேண்டும்.
நமது உடலுக்கு வெப்பம்
தேவை. அந்த வெப்பத்தை இந்த சூரிய முத்திரை அளிக்கிறது.
முதலில் பத்மாசனத்தில்
அமர வேண்டும். முடியாதவர்கள் சாதாரணமாக அமர்ந்து செய்யலாம். முதலில், மோதிர விரலைப்
பெருவிரலின் (கட்டை விரலின்) கீழ்ப் பகுதியில் வைத்து, பெருவிரலால் அழுத்திப்
பிடிக்க வேண்டும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். ஒரே நேரத்தில்
இரண்டு கைகளிலும் இந்த முத்திரையைச் செய்யலாம். இயலாதவர்கள், முதலில் வலது கைகயிலும், பிறகு இடது கையிலும்
செய்யலாம். இந்த முத்திரையை 10 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை செய்யலாம் அல்லது
முதலில் ஐந்து நிமிடங்களில் ஆரம்பித்து, பின்னர் படிப்படியாக நேரத்தை
அதிகரித்துக்கொண்டே போகலாம்.
1. தொப்பை குறையும்.
2. கொழுப்பு குறையும்.
3. உடலின் வெப்பம்
அதிகரிக்கும்.
4. மன அமைதி ஏற்படும்.
5. உடல் பருமன்
குறையும்.
6. தைராய்டு சுரப்பி
நன்கு வேலை செய்யும்.
7. ஜீரணக் கோளாறுகள்
அகலும்.
8. உயிரின் சக்தியைப்
பெருக்கும்.
9. ரத்தக் குழாய் அடைப்பு
நீங்கி ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
10. நோய் எதிர்ப்புச்
சக்தி உண்டாகும்.
11. கண் பார்வைத் திறன்
அதகரிக்கும்.
12. களைப்பு நீங்கும்.
உடல்நலம் இல்லாமல் இருக்கும்போதோ, தூக்கமின்றி வேலை செய்து களைப்பாக இருக்கும்போதோ இந்த முத்திரையைச் செய்யக் கூடாது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
யோக முத்திரைகள் : சூரிய முத்திரை எப்படி தெரியுமா? - செய்முறை, பலன்கள் [ ] | Yoga Mudras : How do you know the Sun Seal? - Recipe, Benefits in Tamil [ ]