குறைகளை சுட்டிக்காட்டாத தன்னடக்கம். தன் செயல்களுக்கு விளக்கமளிக்கத் தேவையில்லை என்ற நிலை. ‘செமயா இருக்கணும்’ போய், ‘நிறைவா இருக்கணும்’ என்ற புதிய குறிக்கோள். குறைந்து கொண்டிருக்கும் ஆக்ரோஷம்.
ஒருவர் பக்குவமடைந்து விட்டார் என்று அறிந்து கொள்வது எப்படி?
குறைகளை சுட்டிக்காட்டாத தன்னடக்கம்.
தன் செயல்களுக்கு விளக்கமளிக்கத் தேவையில்லை என்ற நிலை.
‘செமயா இருக்கணும்’ போய், ‘நிறைவா இருக்கணும்’
என்ற புதிய குறிக்கோள்.
குறைந்து கொண்டிருக்கும் ஆக்ரோஷம்.
பொருளால் வரும் ஆசையின் குறைவு.
மற்றவர் செயல்களுக்கு தனக்குப் புரியாத
காரணங்கள் இருக்கலாம் என்ற பரந்த எண்ணம்.
பத்து வருடங்களுக்கு முன்னர் தான்
செய்த சில பல செயல்கள் சரியல்ல என்ற புதிய ஒப்புதல் பார்வை.
ஆச்சர்யங்கள் குறைந்து போய் விட்ட ஒரு
அமைதி.
‘இதெல்லா சகஜமப்பா’ என்று நினைத்து ஒரு
புன்முறுவல் பூக்கும் மனப்பக்குவம்.
Like க்காக பொய் புளுகாமல், தோன்றியதைப் பகிரும் வெளிப்படைத்தன்மை.
இதெல்லாம் உங்களுக்கு வந்து விட்டால்
நீங்களும் வாழ்க்கையில் பக்குவமடைந்து வீட்டார்கள் என்று பொருள்.
ஒரு யுத்தத்தில் எதிரி நாட்டு இளவரசனை
உயிரோடு பிடித்து இராஜாவின் முன்பு நிறுத்தினர்.
இளவரசன் தன் உயிருக்காகக் கெஞ்சி
மன்றாடி தன்னை மன்னிக்கும்படியாக கேட்டுக்கொண்டான்.
"அதற்க்கு ஒரு நிபந்தனை
இருக்கிறது" என்றார் வெற்றி பெற்ற ராஜா .
"விளிம்புவரை தண்ணீர்
நிரப்பப்பட்ட பாத்திரம் ஒன்று உனது கையில் தரப்படும்."
அது முக்கிய சாலை ஒன்றின் வழியாக ஒரு
சொட்டு தண்ணீர் கூட கீழே சிந்தாமல் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு மையில் தூரம்
கொண்டு செல்ல வேண்டும்.
கூடவே உருவிய பட்டையத்தோடு எனது
வீரர்கள்வந்துக்கொண்டு இருப்பார்கள்.
ஒருதுளி தண்ணீர் கீழே கொட்டினாலும் கூட
அவர்களின் வாள் உன் தலையைச் சீவிவிடும்.
வெற்றியோடு முடித்துவிட்டால்
விடுதலை"
என்று பேரரசர் தனது நிபந்தனையை
விதித்தார்.
குறிப்பிட்ட நேரம் வந்தது.
இலட்சக்கணக்கான மக்கள் அந்த சாலையின்
இரு பகுதிகளிலும் குழுமியிருந்தனர்.
போர் வீரர்கள் சாலையைஒழுங்கு செய்து கொடுத்தனர்.
பேரரசர் முன்னிலையில் முழுவதும் தண்ணீர் நிரப்பிய
பாத்திரம் இளவரசனின் கைகளில்
கொடுக்கப்பட்டது.
ஒரு பகுதியில் இருந்த மக்கள் இளவரசனை
ஊக்குவித்து உற்ச்சாகப் படுத்தினர்.
மறுபக்கத்தில் இருந்தவர்களோ கேலியும்
பரிகாசமும் செய்து கூச்சலிட்டனர்.
இளவரசனின் இருபுறமும் வீரர்கள் உருவிய
வாளோடு தண்ணீர் சிந்துமானால் வெட்டும்படி கவனித்துக்கொண்டிருந்தனர்.
பாத்திரத்தை உறுதியாய்
பிடித்துக்கொண்டான் இளவரசன் நடக்க
சுற்றுப்புறத்திலிருந்து கூச்சலும், பரிகாசமும்,ஆர்ப்பாட்டங்களும் கேட்டுக்கொண்டே
இருந்தது.
எனினும் எதையும் பொருட்படுத்தாதபடி
தண்ணீரிலே முழு கவனமும் வைத்து ஓட்டத்தை
வெற்றியோடு ஓடி முடித்தான் இளவரசன் .
༺🌷༻
இளவரசனை பாராட்டிய பேரரசர்
இளவரசனே உன்னை கேலி செய்தவர்களுக்கு நீ
தண்டனை வழங்கலாம்.
உன்னை உற்சாக படுத்தியவர்களுக்கு நன்றி
சொல்லலாம்.
அவர்களை கவனித்து வைத்திருக்கிறாயா
என்று கேட்டார்.?
என்னை போற்றுபவர்களை நான்
கவனிக்கவில்லை,
தூற்றுபவர்களையும் நான் பார்க்கவில்லை.
"எனது கவனமெல்லாம் தண்ணீரில் அல்லவா இருந்தது."
விடுதலையோடு கூட அரசர் ஒரு ஆலோசனை தந்தார்.
இளவரசனே
பாத்திரத்தில் உள்ள தண்ணீர் தான் உன்
சரீரத்தில் உள்ள ஆன்மா
வாழும் நாட்களிலே
உன் ஆத்மாவில் கண்ணும் கருத்துமாக
இருந்து கடைசியில் அதை
சிருஷ்டிகர்த்தாவிடம்
ஒப்படைக்க வேண்டும்.
போற்றுவோரைக் கண்டுபெருமை கொள்ளாதே.
தூற்றுவோரைக்கண்டு சோர்ந்துப் போகாதே.
கடவுள் கொடுத்த ஆன்மாவில் கவனம் வை என்றார்.
யாரோடும் உங்களை
ஒப்பிடாதீர்கள் .....
அப்புறம்
உங்களையே உங்களுக்குப் பிடிக்காமல்
போய் விடும்..!!
நிகழ் காலத்தை நீங்கள் சரியாக பயன்
படுத்திக் கொள்ளுங்கள். எதிர் காலம் உங்களுக்காக காத்திருக்கும்.
எதையும் எதிர் கொள்ளலாம் என்ற மன நிலை
மட்டுமே நீங்கள் இழந்த அத்தனையையும் உங்களுக்கு மீட்டு தரும்.
☘ நிம்மதியாக இருக்க ஆசைப்பட்டு எதையும் தேடி அலையாதே. கிடைத்ததை அனுபவிக்கக் கற்றுக் கொள். நிம்மதி உன்னைத் தேடி வரும்.
☘ நீங்கள் கடந்த காலத்தை நினைத்து வருந்துவதால் மாறப்போவது எதுவும் இல்லை.
☘ எதிர் காலத்தை நினைத்து பயப்படுவதாலும் எதுவும் மாறப்போவது இல்லை.
☘ ஆனால் நீங்கள் நன்றியுணர்வுடன் இருந்தால் அது உங்கள் நிகழ்காலத்தை சிறப்பானதாக்கும்.
☘ குடிசையில் இருந்தாலும், கோபுரத்தில் இருந்தாலும், எண்ணங்களைப் போல் தான்
வாழ்க்கை இருக்கும்.
சாதிக்க முடியாத இலக்கை வாழ்க்கை
கொடுக்கும்போது அழிக்கவே முடியாத தடயத்தை அந்த வாழ்க்கையில் பதியவைத்துவிட்டு
செல்வது தான் திறமையின் சிறப்பு.!
🙋🏻♂ஆண்களிடம் அடம் பிடித்தால்
சாதித்து விடலாம் என்பதை
பெண்களுக்கு கற்றுக்கொடுப்பவர்களே
*அப்பாக்கள் தான் 🤷🏼♂🚶🏼🚶🏼*நல்ல சிந்தனைகளையும்
எண்ணங்களையும் விதையுங்கள்
நம்மைச்சுற்றி இருப்பவர்கள்
பயன் பெறட்டும்..💭
குறள்:193
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப்
பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்
வாழ்க்கை என்பது வாழைப்பழம் மாதிரி
....
சாப்டா சத்து
வழுக்கி விலுந்தா டெத்து..
😂😂அறிவுரைகள் இலவசமாக கிடைக்கும்..
அனுபவமோ அடிகள் பலவாங்கிய பிறகே
கிடைக்கும்...
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான எல்லா
வசதிகளும் வாய்ப்புகளும் மனதிற்குள் நிறைந்துள்ளன. நீங்கள் மனதில் உள்ள சிந்தனைகளை
வெளிக் கொண்டு வந்து, முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்.
வேஸ்ட்டி சட்டையோட போனேன் கல்யாண மாப்பிள்ளை
மாதிரி போறேகிறாங்க
பணியன் டாயரோட போனா வாக்கிங்கா
போறேன் கேட்கிறாங்க
சரி லுங்கி கட்டி போனா வேலைக்கு
போகலையானு கேட்கிறாங்க
பேண்ட் சர்ட் போட்டு போனா வேலைக்கே
போகாம சுத்திட்டு இருக்கியானு கேட்கிறாங்க....
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
அனுபவம் தத்துவம் : ஒருவர் பக்குவமடைந்து விட்டார் என்று அறிந்து கொள்வது எப்படி? - எதில் கவனம் வைக்க வேண்டும்? [ ] | Philosophy of experience : How do you know when someone has matured? - What to focus on? in Tamil [ ]