தன்னை உணர்வது எப்படி சாத்தியம் ஆகும்?

வாசித்தல் வழியாக, "தோல்வியைக் கண்டு புலம்பாதீர்கள்"

[ ஊக்கம் ]

How is self-realization possible? - Through reading, "Don't mourn failure" in Tamil

தன்னை உணர்வது எப்படி சாத்தியம் ஆகும்? | How is self-realization possible?

வாழ்க்கையில் நமது புரிதல்கள் கால ஓட்டத்தில் மாறிக் கொண்டே வருகிறது. நமக்கு நன்மை எது, தீமை எது என்பதை அனுபவங்கள் கற்றுத் தருகின்றன.


தன்னை உணர்வது எப்படி சாத்தியம் ஆகும்?

வாசித்தல் வழியாக

 

வாழ்க்கையில் நமது புரிதல்கள் கால ஓட்டத்தில் மாறிக் கொண்டே வருகிறது.

 

நமக்கு நன்மை எது, தீமை எது என்பதை அனுபவங்கள்  கற்றுத் தருகின்றன.

 

துயரமான வருடங்களில், தனிமையில், இழப்புக்களில், ஏமாற்றங்களில், துரோகங்களில், தவறுகளில் இருந்தே நாம் சிறந்த பாடங்களைக் கற்றுக் கொள்கிறோம்.

 

எதையும் நம்பும் மனம் தோல்வியை எதிர் கொள்ளும் போது, ஏமாற்றத்தை  சந்திக்கும் போது வாழ்வின் பல உண்மைகளை கற்றுக் கொள்கிறது.

 

இத்தகைய மனச் சோர்வான தருணங்களில் இருந்து நம்மை மெல்லத் தூக்கி எடுத்து வாழ்க்கை பாதையில் மீண்டும் நிலை நிறுத்துவதில் சிறந்த புத்தகங்களின் பங்களிப்பு அபாரமானது.

 

நமது அறிவின் கூர்மை, திறன், புரிதல் நல்ல புத்தகங்களை வாசிப்பதினால் மேம்படுகிறது.

 

சிறந்த புத்தகம் என்பது மனதில் அன்பை விதைக்க வேண்டும்.

 

வாசித்தல் நம்மை சக உயிர்களையும் தனது உயிரைப் போல் கருதும் உணர்வை ஊட்ட வேண்டும்.

 

அகந்தையை அழிக்க வேண்டும்.

 

பிறர் வலி உணர்ந்து அதைத் துடைக்க வேண்டும் எனும் மன நிலைக்கு உயர்த்த வேண்டும்.

 

மாறாகப் பிரிவினையை, சக மனிதனை வெறுக்கும் படி வன்முறையைத் தூண்டுகிற எழுத்துக்கள் நஞ்சை விடக் கொடியது.

 

வாசித்து உணர்ந்த கருத்துக்களை வாழ்வில் அப்பியாசம் செய்யப்படும் போது மட்டுமே அது மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

 

நல்ல கருத்துக்கள் கடைப்பிடிப்பதன் வழியாக  நம்முடைய

மனசாட்சியானது உயிர்ப்படைகின்றது.

 

மனசாட்சியை உணர்தல் என்பது சுய வெளிப்பாட்டின் ஒரு உயர்ந்த அனுபவம்.

 

எளிமையான, தூய்மையான, திறந்த, தன்னலமற்ற மனதை சிறந்த நூல்கள் நம்முள் உருவாக்குகிறது.

 

உயர்ந்த சிந்தனைகளைப் பெறுவதற்கு நமது மனம் ஏற்றுக் கொள்ளும் தன்மையுடன் இருத்தல் அவசியம்.

 

ஏதேனும் ஒரு கொள்கையில் தீவிரமாக பற்றுக் கொண்ட மனம் முழுமையான உண்மைகளை உணர்ந்து கொள்ள முடியாது.

 

உண்மையை முழுமையாக அறிய வேண்டும் என்றால் பயமின்றி கற்றுக் கொள்ள விழையும் மனம் அவசியம்.

 

தூய்மையான அன்பால் நிறைந்த மனம் உண்மையைக் கற்றுக் கொள்ள

எண்ணற்ற சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது.

 

எல்லாம்  எனக்குத் தெரியும் எனும் மனப்போக்கு கற்பதை  தேக்கமடையச் செய்யும்.

 

நாம் ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொண்டபோது மனம் தன்னில்தானே பெருமை கொள்கிறது. தன்னம்பிக்கை அடைகிறது.

 

இந்த உணர்வு அகந்தையாக மாறும்போது அது தன்னைத்தானே மையப்படுத்தும் எண்ணங்களை

உருவாக்கி விடுகிறது.

 

இது தொடர்ந்து கற்றலைச் சாத்தியமில்லாமல் செய்துவிடுகிறது.

 

பரந்து விளங்கும் இந்தப் பிரபஞ்சத்தில் நான் ஒரு துகள் என்ற ஆழமான உணர்வு மனத் தாழ்மையை தரும்.

 

இந்தப் பிரபஞ்சத்தின் அளவற்ற தன்மையை உணரும்போது நான்’ என்கிற உணர்வுக்கு அப்பால் மனம் கடந்துவிடுகிறது.

 

அத்தகைய முதிர்ச்சி அடைந்த மனம் நல்லது, கெட்டது எனும் பாகுபாட்டை செயல்களையும் அதன் விளைவுகளைக் கொண்டு மட்டுமே தீர்மானிக்கும்.

 

நல்ல செயல்களை போற்றுகிறது. அந்த செயலைச் செய்தவரை வாழ்த்துகிறது.

 

தீய செயல்களை வெறுக்கிறது. ஆனால் தீமை செய்பவர்களை பழி தீர்ப்பதில்லை.

 

முதிர்ச்சி அடைந்த மனம் இறந்த காலத்தின் நினைவுகளில் அலசலடிப்பட்டு உறைந்து போவதில்லை.

 

எதிர்காலத்தினைக் குறித்த அச்சத்தில் அமிழ்ந்து போவதும் இல்லை.

 

அது நிகழ்கால தருணத்தின் செயல்களில் மாத்திரம்  முழுமையான கவனம் செலுத்துகிறது.

 

இதனால் வீணான, தேவையற்ற தொடர்ச்சியான எண்ணங்களின் போராட்டத்திலிருந்து மனம் விடுதலை அடைகிறது.

 

இது ஒன்று  எப்படி இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தைத் தரும்.

 

வாழ்வில் வெளிப்புற சூழலை மாற்றுவதை விட உட்புறமாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்தால் அது மிகச் சிறப்பானது.

 

இந்த உள்ளான மாற்றத்தின் தாக்கம் செயல்களாக வெளிப்படும்போது சுற்றி வாழும் சமூகத்தை உயர்த்துகிறது.

 

இந்தப் பயிற்சியில் நாம் எந்த அளவுக்கு நமது சக்தியையும், நேரத்தையும் செலவிடுகிறோமோ, அந்த அளவுக்கு நமது வாழ்க்கை அர்த்தம் நிறைந்ததாக மாறுகிறது.

தோல்வி என்பது இடைவேளை தான்

┈❀🌿🀼󟽀┈❀🌿🌺🌿❀┈❀🌿🌺🌿❀┈

"தோல்வியைக் கண்டு புலம்பாதீர்கள்"

சாதனையாளர்கள் பிரச்சனையைத் தாண்டிச் செல்கிறார்கள். எத்தனைத் தோல்விகள் வந்தாலும் அவற்றை ஆய்வு செய்து, அனுபவப்படிக்கட்டாக மாற்றிக் கொண்டு வெற்றிப் பயணத்தைத் தொடர்கிறார்கள்.

 

மின்சார விளக்கைக் கண்டுபிடிப்பதற்கு முன்பதாக தாமஸ் ஆல்வா எடிசன் 10.000 தோல்விகளைச் சந்தித்தார்.

 

இரப்பரைக் கண்டு பிடிக்கும் முன்பாக அவர் 17.000 தோல்விகளைச் சந்திக்க நேர்ந்தது.

 

இந்தத் தோல்விகளை எல்லாம் எடிசன் தோல்விகளாகவே ஒப்புக் கொள்ளவில்லை.

 

ஒரு பொருளை எப்படிச் செய்யக் கூடாது என்பதற்குத் தோல்விகளே சிறந்த பாடம் என்று அவர் வர்ணித்தார்.

 

பத்து நாட்களுக்கு ஒரு தடவை ஒரு சிறிய கண்டு பிடிப்பு, ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை மகத்தான கண்டுபிடிப்பு என்று இலக்கு வகுத்துக் கொண்டு உழைத்த உலகின் மாபெரும் கண்டுபிடிப்பாளரின் வெற்றியின் இரகசியம் இது தான்.

 

தோல்விகள் வெற்றியின் படிக்கட்டுக்கள் என்ற கண்ணோட்டத்துடன் இலக்கை நோக்கி வெறியுடன் உழைப்பதே இவர்களின் நோக்கம்.

 

டிஸ்னி வேர்ல்ட்டை உருவாக்கிய வால்ட்டிஸ்னி தனது திட்டத்திற்கு நிதி திரட்டுவதற்காக முயற்சி எடுத்து 302 தடவைகள் தோல்வி அடைந்தார்.

 

302 தடவை தோல்வி அடைந்த வால்ட் டிஸ்னி 303 வது தடவை தான் வெற்றி பெற்றார்.

 

 

நீங்கள் முன்னேறிச் செல்ல நினைத்தால் முதலில் தோல்வி அடைந்தால் அதில் இருந்து நகர்ந்து செல்லுங்கள்.

 

அதைப் பற்றி நினைத்துப் புலம்புவதால் நீங்கள் மன அளவில் பாதிக்கப்பட்டு நிரந்தர பாதிப்பை அடைய வாய்ப்புள்ளது.

 

 உங்கள் தோல்வி அல்லது வெற்றி உங்களை அடையாளப்படுத்தாது.

 

அதைவிட, நீங்கள் உங்கள் தோல்வியை எப்படி வெற்றி ஆக்கினீர்கள் என்றே அனைவரும் பேசுவர்.

 

நீங்கள் தோல்வியால் துவண்டு போகலாம்.,

அல்லது அதிலிருந்து கற்றுக் கொள்ளலாம்.

 

நினைவில் கொள்ளுங்கள்! தோல்வியில் இருந்து தான் நீங்கள் வெற்றியைக் கண்டு எடுக்க முடியும்.”

 

உங்களின் தோல்வியில் இன்னொருவனின் வெற்றி ஒளிந்து இருக்கிறது .உங்களின் வெற்றியில் மற்றொருவனின் தோல்வி மறைந்து இருக்கும் ...

 

தொடர் தோல்வி தான் அனுபவத்தைத் தரும், வெறும் வெற்றியோ ஆணவத்தைத் தரும் .

 

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

 

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...

 

இந்த நாள் இனிய நாளாகட்டும்

 

வாழ்க 🙌 வளமுடன்

 

அன்பே🔥சிவம்


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம் 

ஊக்கம் : தன்னை உணர்வது எப்படி சாத்தியம் ஆகும்? - வாசித்தல் வழியாக, "தோல்வியைக் கண்டு புலம்பாதீர்கள்" [ ] | Encouragement : How is self-realization possible? - Through reading, "Don't mourn failure" in Tamil [ ]