வாழ்க்கை எப்படி வாழ வேண்டும்?

குறிப்புகள்

[ ஊக்கம் ]

How should life be lived? - Tips in Tamil

வாழ்க்கை எப்படி வாழ வேண்டும்? | How should life be lived?

அனைவருக்குமான பதிவு இது: தவறாமல் படிக்கவும்.... காலம் மிகவும் வேகமானது அது வேகமாக ஓடிக்கொண்டே இருக்கும். எனவே, அதற்கு இணையான வேகத்தில் நாம் ஓட வேண்டும் அப்போதுதான் நம்மால் வெற்றிகரமாக வாழ முடியும் என்று நினைத்து ஓடிக்கொண்டே இருக்காதீர்கள்.

வாழ்க்கை எப்படி வாழ வேண்டும்?

அனைவருக்குமான பதிவு இது: தவறாமல் படிக்கவும்....


காலம் மிகவும் வேகமானது அது வேகமாக ஓடிக்கொண்டே இருக்கும். எனவே, அதற்கு இணையான வேகத்தில் நாம் ஓட வேண்டும் அப்போதுதான் நம்மால் வெற்றிகரமாக வாழ முடியும் என்று நினைத்து ஓடிக்கொண்டே இருக்காதீர்கள்.

கொஞ்சம் நில்லுங்கள். உங்களைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால், நீங்கள் கண்மூடித்தனமாக ஓடிக்கொண்டே இருப்பதால் தான் உங்களால் வெற்றிகரமாக வாழ முடியவில்லை.

அவசரத்தில் பெரிய அண்டாவிற்குள் கையை விட்டால்கூட அது உள்ளே போகாது எனும் பழமொழியை நினைவு கூறுங்கள். ஏன் இந்த அவசரம்? ஏன் இவ்வளவு அவசரம்? கொஞ்சம் நிதானமாக நாம் ஏன் ஓடுகிறோம் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அதுமட்டுமல்ல நிதானத்தில் தான் மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்றும் அது உண்மையா என்றும் அலசி ஆராயத் தோணும். பிறர் எண்ணங்களை நம் மனதில் எப்படி திணிக்கிரார்கள் என்ற உண்மையும் புரிய வரும். மேலும் அதை நீங்கள் ஏன் அப்படியே நம்புகிறீர்கள் என்கிற உண்மையும் புரியும்.

"காலம் வேகமாக ஓடிக்கொண்டே இருக்கிறது என்பதற்காக நாமும் வேகமாகத்தான் ஓட வேண்டும் என்கிற எந்த நிர்ப்பந்தமும் இல்லை."

ஒருவர் உலகத்தின் தலைசிறந்த ஓட்டப்பந்தய வீரராக வேண்டுமென விரும்புகிறார் எனில், அவர் தினமும் நாள் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் அப்போது தான் அவரால் வெற்றிபெற முடியும் என்று கூறினால் நீங்கள் அதை நம்புவீர்களா?

அப்படி ஒவ்வொரு நாளும், நாள் முழுவதும் ஒருவரால் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்க முடியுமா? அது சாத்தியம் ஆகாது என்பது தானே உண்மை. அதுபோலவே தான், காலம் வேகமாக ஓடிக்கொண்டே இருக்கிறது என்பதற்காக நீங்களும் வேகமாக ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை நம்புவதும் ஒன்று தான்.

தலைசிறந்த ஓட்டப்பந்தய வீரராக வேண்டுமெனில் அதற்கு அவர் தனது உடலையும், மனதையும் தயார்படுத்த வேண்டும். உணவை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்? அடுத்து என்னென்ன உடற்பயிற்சிகள் நாள் தோறும் செய்ய வேண்டும்? எவ்வளவு நேர காலங்கள் ஓடி ஓடி பயிற்சி செய்ய வேண்டும்? மனம் மற்றும் உணர்வுகள் ரீதியாக அவர்கள் எந்த அளவிற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும்? என்பதையெல்லாம் கற்றுக்கொண்டு முறையாக பயிற்சி செய்துவந்தால் தானே அவரால் ஒரு ஓட்டப்பந்தய வீரராக முடியும்?


அதுபோலவேதான், நமது உடலை நாம் எப்படி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்? நமது மனதை எப்படி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்? உணவை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்? உணர்வுகளை எப்படி நிர்வகிக்க வேண்டும்? பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும்? எவ்வளவு நேரம் வேலைசெய்ய வேண்டும்? எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்? என்பவற்றையெல்லாம் படிப்படியாக கற்றுக்கொண்டு அதன்படி வாழும்போது மட்டுமே நம் அனைவருமே சரியானதொரு வாழ்க்கையை வாழ முடியும் என்பதும் உண்மை ஆகும்.

வேகமாக ஓட வேண்டும் என்பதற்காக உங்கள் உடல், மன ஆரோக்கியத்தை இழந்து, உணர்வுகள் ரீதியாக பாதிக்கப்பட்டு, தூக்கத்தை இழந்து வெறுமனே வேகமாக ஓடுவதால் எந்தவொரு பயனும் இல்லை. அதனால் எவ்வளவு வேகமாக ஓடினாலும் பலராலும் வெற்றிகரமாக வாழ முடியவில்லை. அதற்காக மெதுவாக ஓட வேண்டும், அப்படி தானே என்றும் தவறாய் புரிதல் கூடாது. மேலும் நான் மெதுவாக ஓடுவதை பரிந்துரை செய்கிறேன் என்றும் தவறாக நினைத்துவிட வேண்டாம்.

வேகமாக ஓடுவது, மெதுவாக ஓடுவது என இரண்டையும் நான் பரிந்துரை செய்யவில்லை. சரியாக தான் ஓட வேண்டும் என்பதை மட்டுமே நான் பரிந்துரை செய்கிறேன். அதுமட்டுமல்ல, நாம் ஏன் ஓடுகிறோம்? எப்படி ஓடுகிறோம்? எதற்காக ஓடுகிறோம்? எங்கே ஓடுகிறோம்? என்கிற தெளிவோடும், விழிப்புணர்வோடும் ஓட வேண்டும் என்பதையும் வழிமொழிகிறேன். அப்போது தான் வெற்றிகரமாக மற்றும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

வாழ்வில் வழி தெரியாத சில இன்னும் பலருக்கு பல சமயங்களில் இறைவனை நம்பிப் பயணத்தைத் தொடருங்கள்....

உங்கள் எண்ணமும் செயலும் நல்லதாக இருக்குமானால்,

முன்னோர் புண்ணியமே!

உங்களுக்குத் துணையாக வரும்.....

பலத்த அடி பலமுறை விழுந்தது அப்துல் கலாமுக்கு !அடி விழுந்த கன்னத்தை தடவியபடி அசையாமல் நின்றார் கலாம்.

அப்போது அவருக்கு வயது 11.

அப்துல் கலாமை அடித்தவர் அவரது அப்பாதான் !

எதற்காக ?

அதை அப்துல் கலாமே இப்படிச் சொல்கிறார் :

“எனது தந்தை ராமேஸ்வரத்துக்கு நாட்டாமையாக நியமிக்கப்பட்ட காலத்தில் எனக்கு 11 வயது ;

ஒரு நாள் எனது தந்தை தொழுகைக்காக சென்று விட்டார்.

ஊரிலுள்ள ஒருவர்ஒரு தாம்பாளத் தட்டில் ஏதோ கொண்டு வந்து அப்பாவிடம் கொடுக்க வேண்டும் என்றார்.

நான் அப்பா தொழுகைக்கு சென்று விட்டார் என்றேன். அம்மாவை அழைத்த போது  அம்மாவும் வீட்டில் தொழுகையில் ஈடுபட்டிருந்தமையால்

வந்த அந்த மனிதரிடம் நான், "அதை இங்கே வைத்து விட்டு செல்லுங்கள். அப்பா வந்தவுடன் சொல்கிறேன்” என்றேன். அந்த மனிதரும் அவ்வாறே செய்தார்.

வீட்டிற்கு வந்ததும் அப்பாவிடம் நடந்ததை சொன்னேன். அவ்வளவுதான்.

அப்பா என்னை பளார் பளாரென்று அடித்தார்.

பின்னர் என்னை அருகில் அழைத்து அறிவுரை சொன்னார்.

அதில் அவர் திருக்குரானை மேற்கோள் காட்டி,

பதவியில் இருப்பவர்கள், பரிசுப் பொருளாக யார் எதைக் கொடுத்தாலும் வாங்கக்கூடாது .

அது பாவம்.

பதவியில் இருப்பவர்களுக்கு மற்றவர்கள் பரிசு தருவது,

வேறு எதையோ எதிர்பார்த்துத்தான் என்று எடுத்துச் சொன்னார்.”

கள்ளமில்லா மகனின் மனதில் பதியும்படி கலாமின் அப்பா சொன்ன அந்த வார்த்தைகள்,

அந்தச் சின்ன வயதில் சிறுவன் கலாமின் உள்ளத்தில் சிற்றுளியால் செதுக்கிய கல்வெட்டாக பதிந்து விட்டது.

சிறுவன் பெரியவன் ஆனான்.

இந்திய நாட்டின் ஜனாதிபதியும் ஆனார்.

பதவிக் காலம் முடிந்து ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறும்போது ,

பலரது பாராட்டுக்களும்  வாழ்த்துக்களும் அப்துல் கலாமின் காதுகளில் வந்து விழுந்தாலும்

சிறு வயதில் கலாமின் அப்பா சொன்ன சில வார்த்தைகள் மட்டுமே அந்த வேளையில் அவர் காதுகளில் தாரக மந்திரமாக தனித்து ஒலித்திருக்கும் .

அப்படி என்ன சொன்னார் கலாமின் தந்தை ?

“இறைவன் ஒருவரை ஒரு பதவியில் நியமிக்கின்றார் என்றால் அவருக்கான அனைத்தையும் ஆண்டவன் கொடுத்து விடுகிறார் என்று அர்த்தம் அதையும் விட மேலாக மனிதன் வேறு ஏதாவது எடுத்தால் அது தவறான வழியில் வந்த ஆதாயம்.”

ஆம் !

அப்பா சொன்னது அப்துல் கலாமின் காதுகளில் திரும்ப திரும்ப ஒலிக்க,

தான் வரும்போது கொண்டு வந்த இரண்டே இரண்டு சூட்கேஸ்களுடன்

ஜனாதிபதி மாளிகையை விட்டு புறப்பட்டு விட்டார் கலாம்.

பதவியில் இருந்தபோது தனக்கு வழங்கப்பட்ட  பரிசுப் பொருட்கள் அத்தனையையும்

அங்கேயே விட்டு விட்டு வந்துவிட்டார்.

“ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும், நல்ல ஒழுக்கத்தையும் விட சிறந்த அன்பளிப்பை வழங்கமுடியாது.”......

நாம் ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறோம்? நமக்கு மட்டும் ஏன் இந்த நிலை? நான் எப்போது மகிழ்ச்சியாக வாழப் போகிறேனோ? என்பது போன்ற கேள்விகள், வேதனைகள், எதிர்பார்ப்புகள் நிறைய மக்களிடம் இருக்கும்.

இதில் கூறப்போகும் ஒன்றை மட்டும் நீங்கள் புரிந்துகொண்டால் அந்தக் கேள்விக்கான பதில் மட்டுமல்ல, உங்கள் வேதனைகள், எதிர்பார்ப்புகள் அனைத்தையும் சரியாக்க முடியும்.

"நமது செயல் மற்றும்

செயலுக்கான

நோக்கத்தின் விளைவே

நமது

வாழ்க்கையின் நிலை."

உண்மையில், ஏதோ ஒன்று நம்மை கஷ்டப்படுத்துகிறது என்பதுபோலவே கற்பனை செய்து கொள்கிறோம். அதனால் தான் நம்மால் நமது கஷ்டங்களை சரிசெய்ய முடியவில்லை.

எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் அந்த ஏதோ ஒன்றின் மீது பலியைப் போட்டுவிட்டு நாம் தொடர்ந்து ஒரே மாதிரியான தவறுகளையே செய்து வருகிறோம். அதன் விளைவாகவே, நமது வாழ்க்கையின் நிலையும் அதே மாதிரியாகவே தொடர்கிறது.

நமது வாழ்க்கையின் சிக்கல்களுக்கு ஏதோ ஒன்று தான் காரணம் என்கிற தவறான எண்ணத்தை மாற்றிக்கொண்டு, நமது செயலின் விளைவாகவே நமது வாழ்க்கையின் நிலை அமைகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளும் பொழுது, உங்கள் செயல்கள் சரியான திசையில் பயணிக்கத் தொடங்குகிறது.

பிறகு என்ன? உங்கள் வாழ்க்கையின் நிலையும் சரியான திசையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிவிடும். ஏனென்றால், உங்கள் எண்ணம் போல, உங்கள் செயல்கள் போலவே உங்கள் வாழ்க்கையும் அமையும்.

"அழகான வாழ்க்கை என்பது நமது அழகான எண்ணங்கள் மற்றும் அழகான உணர்வுகளால் உருவாக்கப்படுகிறது..."

இதை சரியாகப் புரிந்துகொண்டு பின்பற்றி வெற்றிகரமாக மற்றும் மகிழ்ச்சியாக வாழ எனது மனமார்ந்த அன்பும், வாழ்த்துக்களும்..


இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் நமது  ஆன்மீக பயணம் தொடரும்!

இறைபணியில்

அன்புடன்....

🌷தமிழர் நலம்🌷

💥நன்றி!

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

🌷🌷முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

 

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...

இந்த நாள் இனிய நாளாகட்டும்...

 

வாழ்க 🙌 வளமுடன்

 

அன்பே🔥இல்லறம்

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

 

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

 

💦💦💦💦💦💦💦💦💦💦💦💦

ஊக்கம் : வாழ்க்கை எப்படி வாழ வேண்டும்? - குறிப்புகள் [ ஊக்கம் ] | Encouragement : How should life be lived? - Tips in Tamil [ Encouragement ]