பிரதோஷ வழிபாடு எப்படி இருக்க வேண்டும்?

சிவன் - ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: சிவன் ]

How should Pradosha worship be? - sivan - Spiritual Notes in Tamil

பிரதோஷ வழிபாடு எப்படி இருக்க வேண்டும்? | How should Pradosha worship be?

பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலம் ஆகும்.

பிரதோஷ வழிபாடு எப்படி இருக்க வேண்டும்?


பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலம் ஆகும். வளர் பிறை, தேய் பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது.

பிரதோஷ வழிபாடு செய்தால் வறுமை, பயம், பாவம், மரண வேதனை இவைகள் எல்லாம் விலகும். நன்மைகள் பல விளையும் என்று கடம்பவன புராணம் கூறுகிறது.

சனிக்கிழமையன்று பிரதோஷம் வந்தால் மிகச் சிறப்பு. 

சனிக்கிழமை தவிர இதர நாட்களில் வரும் பிரதோஷ நேரத்தில் சிவாலயத்தில் ஆலய வழிபாடு செய்தால் ஒரு ஆண்டு ஆலயம் சென்று இறைவழிபாடு செய்தால் 5 வருடம் ஆலய வழிபாடு செய்த பலனும் கிடைக்கும்.

பிரதோஷ நேரத்தில் ரிஷப தேவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும், சிவப்பு அரிசியும், நெய் விளக்கும் வைத்து வழிபட வேண்டும். பிரதோஷ வேளையில் சிவ லிங்கத்தை ரிஷபதேவரின் இரண்டு கொம்புகளுக்கிடையே கண்டு வணங்க வேண்டும்.


ஐந்தெழுத்தை ஓத வேண்டும்

பிரதோஷ நேரத்தில் தேவியுடன் கூடிய சந்திரசேகரர் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதை வணங்க வேண்டும். முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப் படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாவது சுற்றில் செய்யப்படும் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்து கேட்க வேண்டும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: சிவன் : பிரதோஷ வழிபாடு எப்படி இருக்க வேண்டும்? - சிவன் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: sivan : How should Pradosha worship be? - sivan - Spiritual Notes in Tamil [ spirituality ]