தோல்வியை தாங்குவது எப்படி?

குறிப்புகள்

[ தன்னம்பிக்கை ]

How to bear failure? - Tips in Tamil

தோல்வியை தாங்குவது எப்படி? | How to bear failure?

வெற்றியெனும் ஆல மரத்துக்கு விதையாவது தோல்வியின் அனுபவங்களே.

தோல்வியை தாங்குவது எப்படி?

வெற்றியெனும் ஆல மரத்துக்கு விதையாவது தோல்வியின் அனுபவங்களே.

 

மரணத்துக்கு பிறகும் வாழ்வு உண்டா என்பது நமக்கு தெரியாது ஆனால் நிச்சயம் தோல்விக்கு பிறகும் வாழ்வு உண்டு என்பதில் எவருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.

 

வாழ்வு என்பது ஒரு எண்ணெய் தடவிய வழக்கு மரம் சாண் ஏறினால் முழம் சருக்குகிறது.

 

வாழ்வு என்பது ஒரு சுழலும் சக்கரம் எந்த இடத்தில் புறப்பட்டதோ திரும்ப அங்கு வந்து நிற்கிறது.

 

ஆனால் முயன்றவருக்கு வாழ்வு என்பது ஒரு பரமபத விளையாட்டு ஒவ்வொரு காலடியிலும் ஒரு சிறிய அல்லது ஒரு பெரிய பாம்பு கொத்துகிறது.

 

அஞ்சாமல் அடுத்த அடி எடுத்து வைத்தால் அங்கே ஒரு சிறிய அல்லது ஒரு பெரிய ஏணி அதிட்ட தேவதையாக நமக்காக காத்திருக்கிறது.

 

எத்தனை அற்புதமான விளையாட்டு இந்த வாழ்க்கை சுவையான திருப்பங்கள் சோகமான வீழ்ச்சிகள் சுழன்றடிக்கும் காற்று.

 

வெற்றி திருமகள் ஒரு மோசமான விலைமகள் யாரிடமும் நிரந்தரமாக நிலைப்பதில்லை நிற்பதில்லை அடிக்கடி மாலை மாற்றி கொள்கிறாள் ஆளை மாற்றி கொள்கிறாள்.

 

இல்லாத மேடையொன்றில் எழுதாத நாடகத்தை எல்லோரும் நடிக்கின்றோம் நாம் எல்லோரும் நாமே பார்க்கின்றோம்.

 

இந்த நாடகத்திற்கு கதை வசனம் எழுதி தானே இயக்குபவன் இறைவன். அவன் சுயவிருப்பத்திற்காக காரணமே இன்றி காட்சியை மாற்றுவான்.

 

நாடகம் சுவையாக இருக்க வேண்டுமானால் கதாபாத்திரங்களையும் தன் விருப்பபடி மாற்றுவான். கொன்று கூட விடுவான்.

 

இவையேல்லாம் பல கவிஞர் அறிஞர்  சொன்ன கற்பனைகள் மட்டுமல்ல ஆழமாக அர்த்தமுள்ளதாக நாம் தோல்வியை தாங்கும் மனவலிமை பெறுவதற்காக ஊட்ட பட்ட ஊக்க சத்துக்கள் ஊட்ட மருந்துகள்.ஆனால் சிலருக்கு தூக்க மாத்திரைகளாக போகிறது.

 

விதி என்றோ வினை என்றோ போதித்தது தாங்குவதற்காகத்தானே  தவிர, தூங்குவதற்காக அல்ல.

 

கடந்தது நதி...

நடந்தது விதி...

இறந்தது பினி ...

இனி நடப்பதை நினை. எழுந்து நில்... தொடர்ந்து செல்.... ஆண்டாண்டு அழுதாழும் மாண்டவர் வருவதில்லை. ஆற்றிலே போன நீர் திரும்புவதில்லை.

 

புதுமழை வரும் புது நீர் வரும் புது உயிர்கள் பிறக்கும் புது வாழ்வு மலரும் புதிது புதிதாக தொடர் தொடராக வாழ்வு நீண்ட தொலை காட்சி தொடராக தொடரத்தானே போகிறது.

 

உடல் தானே முற்றுகிறது அது ஒரு சிறுகதை. உலகம் என்றும் முற்றுவதில்லை... முடிவதில்லை.... அது ஒரு முடியாத முழ நீள தொடர்கதை தொடரும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

 

பொறுமையைவிட மேலான தவமுமில்லை. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!

முயற்சி, முயற்சி, முயற்சி மற்றும் தொடர்ச்சியான முயற்சி என்பதே எதிலும் நிபுணராவதற்காக பின்பற்றவேண்டிய விதி.......!!

 

விழுதுகளுக்காக உழைத்தே பழுதாகிய கிளைகள்.......!!

 

ஒருவரின் செயல் பிடிக்கவில்லை என்றால்...

 

அவர்களை பார்த்து கோபப்படுவதை விட  அவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை படிபடியாக குறைத்து கொள்ளுங்கள்............!!

 

உறவுகளை நிலைத்திருக்க வைப்பதெல்லாம் அன்பும் பிரியமும் மட்டுமல்ல..............

 

நம்பிக்கை எனும் அஸ்திவாரமும் கூட...............!!

 

வெற்றியின் போது....

கண்ணீர் ஆனந்தம்

என்றால் ...

 

தோல்வியின் போது....

புன்னகையும்  ஆனந்தமே........!!

 

முடிவு எடுக்காமலே எல்லாமே ஒரு நாள் சரியாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருந்தால்.............

 

அது ஒரு நாள் நிச்சயம் நிரந்தரமாக முடிந்து போகும்..........!!

 

கண்ணீர் கரைக்கும் மனபாரம்.......

 

யாரிடம் சொன்னாலும் கரையாது........!!

 

தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!   

 

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!  

 

வாழ்த்துகள்.

 

வாழ்க_வளத்துடன்..


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

தன்னம்பிக்கை : தோல்வியை தாங்குவது எப்படி? - குறிப்புகள் [ ] | self confidence : How to bear failure? - Tips in Tamil [ ]